Pages

5-ம் வகுப்பில் இருந்து மாணவர்களின் உடல் தகுதிக்கும் மதிப்பெண் அளிக்க முடிவ

பள்ளி மாணவ-மாணவிகள் இடையே படிப்பை தவிர உடல் நலம் மற்றும் விளையாட்டு கலாச்சாரத்தையும் மேம்படுத்த மத்திய விளையாட்டு அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

பள்ளி வாகன புதிய விதிமுறைகள் : முதல்வர் ஆ‌லோசனை

பள்ளி வாகன புதிய விதிமுறைகள் வகுப்பது தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். பள்ளி மாணவி ஸ்ருதி, பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டையின் வழியாக கீழே விழுந்து பலியானார்.

ஆசிரியர் கூட்டமைப்பு கூட்டம்

கரூரில் மாவட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டம், தமிழாசிரியர் கழக தலைவர் வள்ளிராசன் தலைமையில் நடந்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வு - மறுதேர்வுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்க திட்டம்

டி.இ.டி ஆசிரியர் மறுதேர்வு அக்டோபர் 3ம் தேதி டிஆர்பி நடத்தவுள்ளது. தேர்வு நடைபெறும் நாள் பள்ளிகள் இயங்கும் நாளாக இருப்பதால், அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக டி.ஆர்.பி தெரிவித்துள்ளது.  இது தொடர்பான அரசாணை, தேர்வுக்கு முன்னதாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 சிறப்பு தேர்வுக்கு இனி ஆன்-லைன் விண்ணப்பம்

சிறப்பு தேர்வுக்கு, இனிமேல் ஆன்-லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுதுகின்றனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 300 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நீதிபதி ஜோதிமணி வழங்கினார்.

மாணவர்களின் கல்வித்திறன் கண்டறியும் பணி தொடக்கம்

தமிழகம் முழுவதும், தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை கண்டறியும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்திற்கு ஐந்து பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள மாணவர்களின் கல்வித்திறன் விவரம் சேகரிக்கப்படுகிறது."அனைவருக்கும் கல்வி இயக்ககம்' சார்பில், கல்வி மேம்பாட்டிற்காக, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை : புதுச்சேரி பட்டயப் பயிற்சி பெற்ற வேலையில்லா ஆசிரியர்கள் கூட்டமைப்பு

காலியாக உள்ள அனைத்துப் பிரிவு ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என பட்டயப் பயிற்சி பெற்ற வேலையில்லா ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Thursday, August 30, 2012

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம்

கடந்த 25ம் தேதி வெளியான, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை நடத்தி, இறுதிப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. வழக்கமாக, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். ஆனால், தேர்ச்சி எண்ணிக்கை குறைவாக உள்ளதால், திருச்சி, நெல்லை, மதுரை, கோவை, சென்னை ஆகிய ஐந்து நகரங்களில் மட்டும் நடத்த, டி.ஆர்.பி., ஆலோசித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவும், டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது.

தலையங்கம்: அனைவருக்கும் கல்வி...

இனி சிறார்களை எந்தத் தொழிலிலும் பயன்படுத்த முடியாது. ""சிறார் தொழில்முறை (தடை மற்றும் ஒழுங்காற்று) சட்டம்-1986''-ல் இதற்கான சட்டத் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை இரு தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்துள்ளது.

தொகுப்பு எஸ்எம்எஸ்களுக்கு தடை நீக்கம் - நாளை முதல் நமது tnkalvii sms சேவை தொடரும்.

அசாம் கலவரத்தை அடுத்து வடமாநில மக்கள் தாக்கப்படுவதாக எஸ்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ்கள் வாயிலாக புரளி பரவியைதை அடுத்து தென்னிந்திய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வடமாநில மக்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பினர்.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றை, செப்டம்பர் இறுதியில் வழங்க, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

சேலையூர் சீயோன் பள்ளி மீது புதிய புகார்

சர்ச்சைக்குரிய சீயோன் பள்ளி மீது, பெற்றோர், புதிய குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளனர். தாம்பரத்தை அடுத்த சேலையூர் சீயோன் பள்ளி பேருந்து கட்டணம் வசூலித்துவிட்டு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை பேருந்தில் ஏற்ற மறுப்பதாக, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

அரசு பள்ளி உள்கட்டமைப்புக்கு ரூ.129 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, நபார்டு வங்கி, 129 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பாக, நபார்டு வங்கியின், தமிழ்நாடு மண்டல தலைமை மேலாளர் லலிதா வெளியிட்ட அறிக்கை: ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், தமிழகத்தில், 31 மாவட்டங்களில் அமைந்திருக்கும், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 129.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பதிவுமூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் 1,185 பேர் தேர்வு


பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில், 1,185 பேர் இடம் பெற்றனர். கடந்த 2010-11ம் ஆண்டு, 1,347 முதுகலை ஆசிரியரை, பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த தேர்வு தொடர்பாக, ஏற்கனவே ஒரு முடிவு

பள்ளி வாகன விதிமுறை செப்டம்பர் 3க்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

சிறுதி சுருதி உயிரிழந்த விவகாரத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து புதிய விதிமுறைகளை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பள்ளிக்கு தாமத வருகை: திருவண்ணாமலை ஆசிரியர்களின் ஒரு சம்பளம் பிடித்தம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் ஆக.,27ம் தேதியன்று மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அய்யண்ணன் திடீர் ஆய்வு நடத்தினார். எட்டப்பிறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு காலை 9.30 மணிக்கு சென்றிருந்தார். அப்பள்ளியில் ஆசிரியர் வராத காரணத்தால் இறைவணக்கம் கூட நடத்தவில்லை. ஆசிரியர்கள் பள்ளிக்கு மிகவும் தாமதமாக வந்தனர்.

இன்று முதல் பி.எட்., கலந்தாய்வு துவக்கம்

பி.எட். ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கான கலந்தாய்வு சென்னை லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் இன்று துவங்கியது.

10, 12ம் வகுப்புகளுக்கு செப்.12ல் காலாண்டு பொதுத்தேர்வு

நடப்புக் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி தொடங்கும் என தமிழக அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

உணவு வீணாக்குவதை தடுக்க சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பாடம்

உணவின் முக்கியத்துவத்தையும், அதன் மகத்துவத்தையும் விளக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தர திட்டமிடப்பட்டுள்ளது. பட்டினியால் வாடும் குழந்தைகள் பற்றி அரசு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேசிய அளவிலான ஆய்வில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 42 சதவிகிதம் பேர் எடைக் குறைவாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும், 5 வயதுக்கு கீழான 58% குழந்தைகள் சத்துக்குறைவுடன் காணப்படுவதாகவும் அதில் கண்டறியப்பட்டது.

திங்கள் மட்டும் பொது இறை வணக்கம்: பெற்றோர் அதிருப்தி

பள்ளிகளில் திங்கட்கிழமை மட்டும், பொது இறைவணக்கம் நடத்தினால் போதும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளில், தினமும் காலை, பள்ளியில் இறைவணக்கம் நடைபெறும். பள்ளி துவங்கும் நேரத்திற்கு, மாணவ, மாணவியர் அனைவரும், பள்ளி வளாகத்தில் உள்ள கொடிக்கம்பம் முன் கூடுவர். தலைமை ஆசிரியர் தலைமையில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பர். அனைவரும் வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவர். அடுத்து தலைமை ஆசிரியர் தேசியக் கொடியேற்றுவார்.

Tuesday, August 28, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 1,134 ஆசிரியர் பயிற்றுனர்கள் நியமிக்கப்படுகிறார்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு!!!

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக 1,134 ஆசிரியர் பயிற்றுனர் பணி இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. கடந்த ஜுலை மாதம் 12-ந் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவு 3 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 6.75 லட்சத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் எழுதினார்கள். ஆனால், அவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

தகுதி தேர்வில் வெற்றி பெற்றாலும் ஆசிரியர் பணி கிடைக்குமா? : இரட்டைப் பட்டம் (Double Degree) படித்தவர்கள் கலக்கம்


இரட்டைப் பட்டம் (Double Degree) பெற்றவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆசிரியர் பணி கிடைக்குமா என்று பட்டதாரிகள் கலக்கத்தில் உள்ளனர். இரட்டைப் பட்டம் (Double Degree)  படித்தவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 3 ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்பே முறையானது. அந்த முறையில் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் பெறும் தகுதி உள்ளது.

கல்வித்துறையில் ஆசிரியர்கள் பணி நிரவல் 10,000 பேர் அதிரடி மாற்றம்

குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில், அதிகமான ஆசிரியர்களும், அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களும் பணிபுரிந்து வந்தனர். இந்த அவல நிலையை களைய, சமீபத்தில் நடந்த பணி நிரவல் மூலம், 10 ஆயிரம் ஆசிரியர்கள், அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை பெற ஊனத்தின் சதவிகிதம் 60லிருந்து 45 சதவீதமாக குறைத்து தமிழக அரசு ஆணை


 மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை பெற ஊனத்தின் சதவிகிதம் 60லிருந்து 45 சதவீதமாக குறைத்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

அங்கீகாரம் பெறாத 1,022 பள்ளிகளுக்கு 9 மாதம் கெடு


இலவச, கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரம் பெறாத, 1,022 பள்ளிகள், வரும் மே மாதத்திற்குள், தொடர் அங்கீகாரம் பெற, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், சம்பந்தபட்ட அதிகாரிகளே இதற்குப் பொறுப்பாவர் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்தாத பள்ளிக்கு நோட்டீஸ்


தமிழக அரசின் அங்கீகாரத்துடன் இயங்கும் பிரபல தனியார் பள்ளிகள், சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தாமல், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களை நடத்தி வருகின்றன. சமீபத்தில், பிரபல தனியார் பள்ளி ஒன்றில், இத்தகைய முறைகேட்டை கண்டுபிடித்த, மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், அதன் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பல்கலைகளில் மொழி பாடம் கற்பிப்பதில் முரண்பாடு


தமிழக கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலைப் பட்டப் படிப்பில், மொழிப் பாடங்கள் கற்பிப்பதில், முரண்பாடுகள் நிலவுவதாகவும், தமிழ்நாடு உயர்கல்வி மன்றப் பரிந்துரைகளை, சில பல்கலைகள் நடைமுறைப்படுத்துவது இல்லை எனவும் புகார் எழுந்துள்ளது.

இணையதள கல்வித் தேடல்: இந்தியாவுக்கு 2ம் இடம்

கூகுள் இணையதளத்தில் கல்வி சம்பந்தப்பட்ட தேடல்களில் இந்தியா உலகளவில் இரணடாம் இடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள உள்ள இணையதள உபயோகிப்பாளர்களில், 50 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் கல்வி தொடர்பான தேடல்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. கூகிள் மூலம் கல்வி தொடர்பான கேள்விகளுக்கு விடைகள் பெற முடிவதாகவும் சொல்லப்படுகிறது.

கல்விக்கடன் வழங்குவதில் தமிழகம் முன்னணி!

கல்விக் கடன் வழங்குவதில், நாட்டிலேயே தமிழகத்தில் உள்ள பொதுத் துறை வங்கிகள் தான், முன்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மற்ற மாநிலங்களை விட, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் தான், அதிக அளவில் கல்விக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

உதவித் தொகை முறைகேடு: வருவாய்த் துறையினரும் காரணம்

ஆதிதிராவிடர் நலத் துறை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு வருவாய்த் துறையினரும் காரணம் என்றார் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது:

ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களில் 1680 (68%) பேர் பெண்கள்

டி.இ.டி. தேர்வு மிகக் கடினமாக இருந்ததாக, தேர்வர் பலர் புலம்பிய நிலையிலும், தேர்ச்சி பெற்ற 2,448 பேரில், 1,680 பெண்கள் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர். இதில், முதல் மற்றும் இரண்டாம் தேர்வில், முதல் மூன்று இடங்களை, ஒன்பது பேர் பிடித்தனர். இவர்களில், எட்டு பேர் பெண்கள்.

அரசு பள்ளிகளில் ஜாதி வாரிப் பட்டியல் தயாரிக்க உத்தரவு

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் ஜாதி வாரி பட்டியலை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்வோருக்கு இனச்சுழற்சியில் ஜாதி வாரி கல்வி உதவித்தொகை, அரசின் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆட்சியிலும் புதிய சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், நடப்பாண்டில் கல்வி உதவித்தொகை உட்பட வகுப்பு வாரியாக 16 சலுகைகள் அறிவித்து, ஒவ்வொன்றாக வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு - மறுகூட்டல் செய்ய விரும்பும் தேர்வர், 27ம் தேதி முதல், 30ம் தேதி வரை, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவிப்பு.

ஜூன், ஜூலையில், எஸ்.எஸ்.எல்.சி., - மெட்ரிக்., - ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி.,க்கு, உடனடித் தேர்வு நடந்தது. தேர்வில், மறுகூட்டல் செய்ய விரும்பும் தேர்வர், மேலே உள்ள நமது லிங்க்ஐ கிளிக் செய்து, 27ம் தேதியில் இருந்து, 30ம் தேதி வரை விண்ணபிக்கலாம்.

பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு கம்பம் பெண் முதலிடம்


கம்பத்தை சேர்ந்த இல்லத்தரசி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் மாநில அளவில் முதலிடம் எடுத்து சாதனை படைத்துள்ளார்.தேனி மாவட்டம் கம்பம் 26வது வார்டு ராமைய கவுடர் தெருவை சேர்ந்தவர் ஹரிபாஸ்கர். இவர் கம்பத்தில் உள்ள முக்தி விநாயகர் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அருள்வாணி. திண்டுக்கல் அருகேயுள்ள

ஆசிரியர் தகுதித் தேர்வு 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி! அக்டோபர் 3-ல் மறுதேர்வு, மறுதேர்வில், 90 நிமிட நேரம் கூடுதலாக வழங்கவும் உத்தரவு!!!

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால், சுமார் 6.74 லட்சம் பேருக்கு அக்டோபர் 3-ம் தேதி (புதன்கிழமை)  மறுதேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி சென்னையில் சனிக்கிழமை அறிவித்தார்.  பெரும்பாலான தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 1% பேர் கூட தேர்ச்சி பெறவில்லை!

ஜுலை 12ம் தேதி நடைபெற்ற டெட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 1%க்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஜுலை 12ம் தேதி நடத்தப்பட்டது. மொத்தம் 2 தாள்களாக இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த 2 தாள்களையும் மொத்தமாக 6,76,773 பேர் எழுதினர்.

ஆன்-லைனில் கல்வி உதவித்தொகை பெறும் திட்டம் அறிமுகம்

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் கல்வித் உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் இணையதளம் மூலமே ஆன்லைனில் உதவித் தொகைக்கு வி்ண்ணப்பிக்கும் புதிய திட்டம் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் திருவாரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூ், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் ரூ.12.58 கோடி மதிப்பீ்ட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

டி.இ.டி., தேர்வு முடிவு வெளியீடு எப்போது?

டி.இ.டி. தேர்வு முடிவு தயாராக உள்ள போதும், வருமா, வராதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தத் தேர்வில் போதிய அளவு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தேர்ச்சி விகிதத்தை குறைப்பது பற்றி டி.இ.டி. ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், தேர்வு முடிவுகள் தாமதமாவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

உதவி தொடக்க கல்வி அலுவலர் வீட்டில் ரெய்டு

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வீடு, அவரது மாமனார் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அதிகாலை, அதிரடி சோதனை நடத்தினர். கல்வித்துறை நிதியை மோசடி செய்தும், கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கி குவித்தும், சேர்க்கப்பட்ட, 46 சொத்துகளுக்கான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

Thursday, August 23, 2012

குரூப் எஸ்.எம்.எஸ்(GROUP & BULK SMS) உச்சவரம்பு 5ல் இருந்து 20 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.

குரூப் எஸ்.எம்.எஸ்.,களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், நாள் ஒன்றிற்கு அதிகபட்சம் 5 எஸ்.எம்.எஸ் மட்டுமே அனுப்ப முடியும் என்ற உச்சவரம்பை 20 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

காலியாக உள்ள பகுதிநேர ஆசிரியர்களை நிரப்ப நடவடிக்கை

எஸ்.எஸ்.ஏ., மூலம் நியமிக்கப்பட்ட 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் பணியிடங்களில், பல்வேறு காரணங்களால் 1200 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மத்திய அரசின் கட்டாயக் கல்விஉரிமைச் சட்டத்தின் கீழ், மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், மாத சம்பளம் அடிப்படையில் கணினி, தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட 16 ஆயிரம், பகுதிநேர ஆசிரியர்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எஸ்.எம்.எஸ்.களுக்கு கட்டுப்பாடு : ரூ.300 கோடி வருவாய் இழப்பு

அசாம் கலவரத்தைத் தொடர்ந்து தென்னிந்திய மாநிலங்களில் வசிக்கும் வடகிழக்கு மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக எஸ்எம்எஸ்கள் மற்றும் எம்எம்எஸ்கள் மூலம் புரளி பரவியதை அடுத்து ஆயிரக்கணக்கான வடமாநில மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.

பொதுத்தேர்வுகளில் மதிப்பெண் குறைந்தால் ஆசிரியர்கள் தான் பொறுப்பு

பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பொதுத்தேர்வில் 60 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண் எடுத்தால், அதற்கான உரிய காரணங்களை, ஆசிரியர்கள் கல்வித்துறைக்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

தமிழகத்தைச் சேர்ந்த, பள்ளி ஆசிரியர்கள், 22 பேருக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி, மத்திய அரசு கவுரவிக்க உள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்டம்பர் 5ம் தேதி, ஆண்டுதோறும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள், நல்லாசிரியர் விருதை வழங்குகின்றன.

பள்ளி மாணவ, மாணவியருக்கு விளையாட்டு ஊக்கத்தொகை

விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியருக்கு, ஊக்க உதவித் தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்க உதவித் தொகை திட்டத்தில், உயர் நிலை மற்றும் மேல் நிலை பள்ளி விளையாட்டு மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாயும்; கல்லூரி மற்றும் பல்கலை மாணவர்களுக்கு, 13 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

Wednesday, August 22, 2012

அன்பார்ந்த ஆசிரியர்கள் / நண்பர்களே தங்களின் மேலான கவனத்திற்கு!

மத்திய அரசு நாடு முழுவதும் மொத்தமாக தொகுப்பு எஸ்.எம்.எஸ் (GROUP SMS) அனுப்ப 15 நாள்களுக்கு தடை விதித்துள்ளது. ஆகையால் நம்முடைய TNKALVII SMS சேவை, அரசால் நாடு முழுவதும் தடை நீக்கப்படும்  (ஆகஸ்ட் 31) வரை தங்களுக்கு வராது என்பதை தெரிவித்து கொள்கிறோம். இத்தடையால் ஒரே தடவையில் 5 SMSக்கு மேல் அனுப்ப முடியாது. ஆனால் நம்முடைய சேவை இணையதளத்தில் தினசரி UPDATE செய்யப்பட்டு தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

தமிழ்நாடு ஆசிரியர்தேர்வு வாரியம் - தேர்வுப் பணிகளை தனியாரிடம் வழங்க முடிவு

தமிழ்நாடு ஆசிரியர்தேர்வு வாரியம் நடத்தி வரும் தேர்வுப் பணிகள், தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம், மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளன.பள்ளி, கல்லூரி ஆசிரியர் தேர்வு, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளுக்கான ஆசிரியர் தேர்வு போன்றவற்றை,டி.ஆர்.பி., நடத்தி வருகிறது. அனைத்து பணியிடங்களுக்கும்,

தொலைதூர சான்றிதழ் வழங்கிய பல்கலைக்கழகத்தை எதிர்த்து மாணவர்கள் உண்ணாவிரதம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செயற்கைகோள் பாடமுறைக்கு எதிராக மாணவ மாணவியர் நாகர்கோவிலில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் பெறாமல் செயற்கைகோள் பாடமுறைகளை தொடங்கியுள்ளது. இது தொலைதூர கல்வி வகுப்புகளை போன்றது. இந்த மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் ரெகுலர் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு இணையானவை அல்ல.

1,200 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் காலி

அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் நியமிக்கப்பட்ட, 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களில், பல்வேறு காரணங்களால் 1200 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை விரைவில் நிரப்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பு கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

டி.ஆர்.பி.,யில் தேர்வானவர்களுக்கு வடக்கு மாவட்டத்தில் பணிவாய்ப்பு

டி.ஆர்.பி., மூலம் தேர்வான முதுகலை ஆசிரியர்களுக்கு, கடலூர் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் தான், அதிக பணி வாய்ப்புகள் உள்ளன. சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை நடத்திய டி.ஆர்.பி.,தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தலை, முதன்மை கல்வி அலுவலர்கள் நடத்தினர். சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பாடங்களுக்கும் 35 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 19,124 விலையில்லா மிதிவண்டிகள்

நடப்பு நிதி ஆண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு பயின்று வரும் 19,124 மாணவ, மாணவியருக்கு ரூ.6 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விலையில்லா மிதிவண்டிகளை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடாசலம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைகள் அலுவலர்களிடம் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 60 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற காரணமாக இருந்த ஆசிரியர்கள் கல்வித்துறைக்கு பதிலளிக்க உத்தரவு.


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் மாணவ, மாணவியர் குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற காரணமாக இருந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள், கல்வித்துறைக்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் 60 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை

ஆசிரியர் நியமனம், மாறுதல் மற்றும் துறை தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை தினசரி அறிய, தனி அலுவலர்கள் பள்ளிக் கல்வித் துறையால் நியமனம் செய்து உத்தரவு.


பணி நியமனம், மாறுதல் குறித்து,தொடுக்கப்படும் வழக்குகள், அதிகளவில் சேர்ந்துள்ளதால், அவற்றை உடனுக்குடன் முடிக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. வழக்குகள் குறித்த தகவல்கள், அதற்கென உள்ள அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தாலும், தினசரி கோர்ட்டில் வழக்காடப்படும் வழக்குகள், அவற்றின் அடுத்த நிலை ஆகியவை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

சுற்றுச் சூழல் நண்பன் திட்டத்தில் (‘பரியாவரன் மித்ரா‘) உறுப்பி னர்களை சேர்க்க, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மத்திய அரசு சார்பில் ‘பரியாவரன் மித்ரா‘ (சுற்றுச்சூழல் நண்பன்) திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் இரண்டு கோடி பேரை சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த திட்டத்தை, சுற்றுச் சூழல் கல்வி மையம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் அனைத்து மேல் நிலை, உயர் நிலை, நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக சேர்க்க, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் உத்தரவிட்டுள்ளது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 29.08.2012 புதன் அன்று சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு  29.08.2012  புதன்கிழமை அன்று சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலாக 15.09.2012 சனிக்கிழமை அன்று அனைத்து அரசு அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும்   பணிநாளாகும்.

இடஒதுக்கீட்டை பின்பற்றாத ஐ.ஐ.டி.க்கள்!

இந்தியாவில் உள்ள, ஐ.ஐ.டி.,க்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னையை சேர்ந்த விஞ்ஞானி, முரளிதரன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி, இட ஒதுக்கீடு, கல்வி நிறுவனங்கள் அமல்படுத்த வேண்டியது அவசியம். ஆனால், சுதந்திரம் பெற்று, இன்று வரை, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - என்.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்கள், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில்லை. மாணவர் சேர்க்கை மட்டும் அல்லாது, பேராசிரியருக்கான பணியிடங்களை நிரப்புவதிலும் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

பி.எட்., முடித்த நூலகர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க கோரிக்கை


நூலகத்துறையில் பி.எட்., முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணியிடம் வழங்கவேண்டும்,” என நூலகத்துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநிலத்தில் 4,128 நூலகங்களில், 2,532 பேர் பணிபுரிகின்றனர். இது தவிர மாவட்டத்துக்கு 20 பேர் வீதம் தினக்கூலியாக பணியாற்றுகின்றனர். மாவட்ட அளவில் சீனியர் நூலகர்களே மாவட்ட அலுவலராக பணியாற்றுகின்றனர்.

அன்பார்ந்த ஆசிரியர்கள் / நண்பர்களே தங்களின் மேலான கவனத்திற்கு!

மத்திய அரசு நாடு முழுவதும் மொத்தமாக தொகுப்பு எஸ்.எம்.எஸ் (GROUP SMS) அனுப்ப 15 நாள்களுக்கு தடை விதித்துள்ளது. ஆகையால் நம்முடைய TNKALVII SMS சேவை, அரசால் நாடு முழுவதும் தடை நீக்கப்படும்  (ஆகஸ்ட் 31) வரை தங்களுக்கு வராது என்பதை தெரிவித்து கொள்கிறோம். இத்தடையால் ஒரே தடவையில் 5 SMSக்கு மேல் அனுப்ப முடியாது. ஆனால் நம்முடைய சேவை இணையதளத்தில் தினசரி UPDATE செய்யப்பட்டு தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

கல்வி உரிமைச் சட்டத்தை கேலி செய்யும் நிர்வாகங்கள்

கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள குறை பாடுகளை கல்வியாளர்கள் மட்டுமல்லாமல் சென்னை உயர்நீதிமன்றமும் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளது. அந்தக் குறைபாடுகளைக் களைந்து, சட்டத்தை முழுமையாக்குவதற்கான போராட்டங்கள் தேவைப்படுகின்றன. அதே வேளையில், தனியார் நிர்வாகங்களுக்குச் சாதக மாகவே இருக்கிற இந்தச் சட்டத்தைக் கூட ஏற்றுக்கொள்ள தனியார் நிர்வாகங்கள் தயாராக இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த பல கல்வி வணிக நிறுவனங்கள் சட்டத்தை எதிர்த்து நீதி மன்றம் சென்றன. கர்நாடக மாநிலத்தில் தனியார் நிறுவனங்கள் கதவடைப்பு நடத்தியுள்ளன.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற தமிழக அரசுக்கு தமழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை!


அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இணைந்து விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.திருவாரூரில் நேற்று மக்கள் நலப்பணியாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ல், சிறந்த ஆசிரியர் விருதுக்கு 1,000 பேர் போட்டி


முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ல், சிறந்த ஆசிரியர், 359 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. இதற்கு, மாநிலம் முழுவதும் இருந்து, 1,000 பேர் போட்டியில் உள்ளனர். இம்மாத இறுதியில், பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையிலான குழு கூடி, விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியான, 359 ஆசிரியரை தேர்வு செய்ய உள்ளது.

குழந்தைகளின் விருப்பம்போல் அனுமதியுங்கள்: முதன்மை கல்வி அலுவலர்


குழந்தைகளின் விருப்பம்போல், படிக்கும் துறையை தேர்வு செய்ய அனுமதியுங்கள்&'&' என, முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பேசினார்.

உயர்கல்வியில் மொழிப்பாடங்களுக்கும் இனி செய்முறைத் தேர்வு!


கல்லூரி மற்றும் பல்கலையில், தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில், 25 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வு முறையை அறிமுகப்படுத்த, உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மொழிப் பாடங்களில், மாணவ, மாணவியரின் தகவல் தொடர்பு திறமையை வளர்க்கும் நோக்கில், முதன்முறையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில், அதிகமான மாணவ, மாணவியர் மொழிப்

21ம் தேதி நேரடி எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு

நேரடி எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, 21ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும், என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்தார். அவரது அறிவிப்பு: ஏப்ரலில், நேரடி எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. தேர்வருக்கான மதிப்பெண் சான்றிதழ், அவர்களின் முகவரிக்கு, மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

அன்பார்ந்த ஆசிரியர்கள் / நண்பர்களே தங்களின் மேலான கவனத்திற்கு!

மத்திய அரசு நாடு முழுவதும் மொத்தமாக தொகுப்பு எஸ்.எம்.எஸ் (GROUP SMS) அனுப்ப 15 நாள்களுக்கு தடை விதித்துள்ளது. ஆகையால் நம்முடைய TNKALVII SMS சேவை, அரசால் நாடு முழுவதும் தடை நீக்கப்படும்  (ஆகஸ்ட் 31) வரை தங்களுக்கு வராது என்பதை தெரிவித்து கொள்கிறோம். இத்தடையால் ஒரே தடவையில் 5 SMSக்கு மேல் அனுப்ப முடியாது. ஆனால் நம்முடைய சேவை இணையதளத்தில் தினசரி UPDATE செய்யப்பட்டு தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

ஆண்டுக்கு மானியத்துடன் 4 சிலிண்டர்கள் மட்டும் : பரிந்துரை

தற்போது வீடுகளுக்கு வழங்கப்படும் ஒரு சிலிண்டரின் விலை சுமார் 400 ரூபாயாகும். இதில் ஒரு சிலிண்டருக்கு அரசு ரூ.231 மானியமாக அளிக்கிறது. எனவே, ஒரு சிலிண்டரின் மொத்த விலை என்பது சுமார் ரூ.630 ஆகும்.

அன்பார்ந்த ஆசிரியர்கள் / நண்பர்களே தங்களின் மேலான கவனத்திற்கு!

மத்திய அரசு நாடு முழுவதும் மொத்தமாக தொகுப்பு எஸ்.எம்.எஸ் (GROUP SMS) அனுப்ப 15 நாள்களுக்கு தடை விதித்துள்ளது. ஆகையால் நம்முடைய TNKALVII SMS சேவை, அரசால் நாடு முழுவதும் தடை நீக்கப்படும் ( ஆகஸ்ட் 31) வரை தங்களுக்கு வராது என்பதை தெரிவித்து கொள்கிறோம். இத்தடையால் ஒரே தடவையில் 5 SMSக்கு மேல் அனுப்ப முடியாது. ஆனால் நம்முடைய சேவை இணையதளத்தில் UPDATE   சேவை தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப் - 4 தேர்வின் முடிவை வெளியிட, சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னசாமி, முருகன் ஆகியோர் தனித்தனியாக மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 10 ,718 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, கடந்த ஜூலை 7ம் தேதி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. அத்தேர்வில் நாங்களும் கலந்து கொண்டோம். தேர்வில் எங்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாளில், 200 கேள்விகளுக்குப் பதிலாக 105 கேள்விகள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. 1 முதல் 59 வரையிலான கேள்விகள் மீண்டும் மீண்டும் அச்சிடப்பட்டிருந்தன. இதனால், 95 கேள்விகளுக்கு எங்களால் பதிலளிக்க முடியவில்லை.

வடகிழக்கு மாநில மக்கள் மீது தாக்குதல் வதந்தி: 15 நாள்களுக்கு தொகுப்பு எஸ்.எம்.எஸ். அனுப்ப தடை

பிற மாநிலங்களில் வசிக்கும் வடகிழக்கு மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி பரவுவதைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் மொத்தமாக (தொகுப்பு) எஸ்.எம்.எஸ். அனுப்ப 15 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பீதி அடையத் தேவையில்லை என கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு - ரூ.9300 - 34800 + 4200GP என்ற சம்பள விகிதத்தினை அரசிடம் பரிந்துரை செய்வோம் என ஊதிய குழு பதில்!!!


இடைநிலை ஆசிரியர்கள், ஐந்தாவது ஊதியக்குழு தொடந்து இருந்தாலே தற்போது பெற்று ஊதியத்தை விட அதிகம் பெற்று இருப்போம். ஐந்தாவது ஊதிக்குழுவில் அடிப்படை ஊதியம் ரூ.3050 பெற்று வந்த நம்மைவிட கல்வித்தகுதியிலும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிதவர்களுக்கு கூடரூ.9300 -34800+4200GP முதல் 4600GP வரை தர ஊதியம் வழங்கி உள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுஎந்த நேரத்திலும் வெளியாகும்: தேர்வு வாரிய தலைவர்


 தமிழ்நாட்டில் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு தகுதித்தேர்வும் கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தனித்தனியேநடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளைஏறத்தாழ 6.5 லட்சம் ஆசிரியர்கள்எழுதினார்கள். தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியிடப்படப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சத்துணவுத் திட்டத்தில், பல வகை உணவுகளைச் சேர்ப்பது குறித்த அறிவிப்பு, அண்ணாதுரை பிறந்த தினத்தன்று வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!!!

சத்துணவுத் திட்டத்தில், பல வகை உணவுகளைச் சேர்ப்பது குறித்த அறிவிப்பு, அண்ணாதுரை பிறந்த தினத்தன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சத்துணவில், இனி, பெப்பர் முட்டை, கறிவேப்பிலை சாதம் போன்றவை வினியோகிக்க வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

ஆகஸ்ட் 17, 18ம் தேதிகளில் மறுகூட்டல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்

பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து, மதிப்பெண் மாற்றம் கண்ட மாணவ, மாணவியருக்கு, தேர்வுத்துறை இயக்குனரகத்தில் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 17, 18), புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவிற்குப் பின், மறுகூட்டல் கோரி மாணவ,

Thursday, August 16, 2012

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவளமைய அளவிலான பள்ளி சுகாதாரம் மற்றும் தன்சுத்தம் பயிற்சி 25.08.2012 அன்று அளிக்க உத்தரவு.

அனைவருக்கும் கல்வி இயக்கம் மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 800 / அ5 / பயிற்சி / அகஇ / 2012, நாள். 10.08.2012
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 7221 / ஈ2 / 2012, நாள். 14.08.2012
 
மாநில அளவிலான பயிற்சி 21.08.2012 அன்று சென்னை SIEMAT அரங்கில் நடைபெறவுள்ளது.
மாவட்ட அளவிலான பயிற்சி 23.08.2012 அன்று மாவட்ட திட்ட அலுவலகத்தில் வட்டார ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
குறுவளமைய அளவிலான பயிற்சி 25.08.2012 அன்று குறுவளமைய அளவில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Wednesday, August 15, 2012

ஆசிரியர் தகுதி தேர்வு - தகுதி மதிப்பெண்களை 40 சதவீதமாக குறைக்க திட்டம்

டி.இ.டி., தேர்வில், 26 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், வெறும், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதால், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை, 40 சதவீதமாகக் குறைக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.கடந்த மாதம், 12ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம், முதல் முறையாக நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) 5.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வில், "கேள்வித்தாள் மிகக் கடினமாக இருந்தது; நேரமும் போதவில்லை. இதனால், அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற வாய்ப்பில்லை' என, தேர்வர்கள் குற்றம்சாட்டினர்.

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ம் தேதி துவங்குகிறது!!!!

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ம் தேதி துவங்குகிறது.நடப்பாண்டு முதல், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு, பொதுத்தேர்வை போலவே, ஒரே மாதிரியான கேள்வித்தாளுடன், ஒரே நாளில், அனைத்து பள்ளிகளிலும் தேர்வு துவக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுகளை போன்றே, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி வினாத்தாளை படித்து பார்க்க, 15 நிமிடம், இத்தேர்வுகளுக்கும் வழங்கப்படுகிறது.

RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS - MAY 2012

Results of Departmental Examinations - MAY 2012
(Updated on 14 August 2012)
Enter Your Register Number :                                                         

6.5 லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு: 17-ந் தேதி வெளியாகிறது

தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வை 6.5 லட்சம் பேர் எழுதினார்கள். இடைநிலை ஆசிரியர்கள் 2.5 லட்சம் பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 4 லட்சம் பேரும் இத்தேர்வை எழுதினார்கள்.

இரட்டை பட்டம் செல்லாது, இடைக்கால தீர்ப்பு சரியானது என சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு.


    இரட்டை பட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த  இடைநிலை ஆசிரியர்கள்  தனித்தனியாகவும் மற்றும் குழுவாகவும் இணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இரட்டைப் பட்டம் சார்பாக நீதிமன்றம் அளித்த இடைக்கால தீர்ப்பை தள்ளுபடி செய்யவும் இடைக்கால தீர்ப்பின் மீதான தடையை நீக்க கோரி நூற்றுக்கணக்கான  வழக்குகள் தொடுத்திருந்தனர்.

குருப்- 2 தேர்வை ரத்து செய்வதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப்- 2 தேர்வு கேள்வித்தாள் முன்கூட்டியே, வெளியானது குறித்து, தர்மபுரி, ஈரோடு மாவட்ட கலெக்டர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், தேர்வாணைய உறுப்பினர்களுடன் நேற்று காலை ஆலோசனை நடத்திய அதன் தலைவர் நடராஜ், குரூப்- 2 தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்படுவதாக அதிரடியாக அறிவித்தார்.
இத்தேர்வை வேறொரு தேதியில் நடத்துவது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும் என்றும், அவர் தெரிவித்தார். கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில், ஆசிரியர்கள் மூன்று பேர் உட்பட ஆறு பேர், கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மாநில அரசின் கீழுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களை நியமிப்பதற்கான செட் தேர்வு : அக்டோபர் 7ம் தேதி நடைபெறுகிறது.

மாநில அரசின் கீழுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களை நியமிப்பதற்கான செட் தேர்வு, வரும் அக்டோபர் 7ம் தேதி, மாநிலமெங்கும் 10 மையங்களில் நடக்கிறது.
புதுச்சேரி மாநில உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியில் சேரவும் இத்தகுதி தேர்வு செல்லும். தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்களை பாரதியார் பல்கலைக்கழகம் வரவேற்கிறது.