அசாம் கலவரத்தைத் தொடர்ந்து தென்னிந்திய மாநிலங்களில் வசிக்கும் வடகிழக்கு மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக எஸ்எம்எஸ்கள் மற்றும் எம்எம்எஸ்கள் மூலம் புரளி பரவியதை அடுத்து ஆயிரக்கணக்கான வடமாநில மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.
இதனால், அடுத்த 15 நாட்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு சிம்கார்டில் இருந்து 5 எஸ்எம்எஸ்களை மட்டுமே அனுப்ப முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் ரம்ஜான் தினத்தன்று வாழ்த்துச் செய்திகளை அனுப்ப முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
சுமார் 6 நாட்களில் எஸ்எம்எஸ்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.300 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.