Pages

Thursday, August 23, 2012

காலியாக உள்ள பகுதிநேர ஆசிரியர்களை நிரப்ப நடவடிக்கை

எஸ்.எஸ்.ஏ., மூலம் நியமிக்கப்பட்ட 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் பணியிடங்களில், பல்வேறு காரணங்களால் 1200 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மத்திய அரசின் கட்டாயக் கல்விஉரிமைச் சட்டத்தின் கீழ், மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், மாத சம்பளம் அடிப்படையில் கணினி, தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட 16 ஆயிரம், பகுதிநேர ஆசிரியர்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பதிவு மூப்பு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில், மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்பட்டுள்ளன. பணி கிடைத்தும் பல்வேறு காரணங்களால் மாநிலம் முழுவதும் 1200 பணியிடங்கள் நிரப்பப்படமால் உள்ளதாக செய்திகுறிப்புகள் வெளியாகி உள்ளன.

இப்பணியிடங்களை தகுதியுள்ள ஆசிரியர்கள் மூலம் விரைவில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்வு செய்தவர்களை அழைப்பதா? அல்லது தகுதி அடிப்படையில் புதிதாக தேர்வு செய்வதா? என்று கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.