தமிழக கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலைப் பட்டப் படிப்பில், மொழிப் பாடங்கள் கற்பிப்பதில், முரண்பாடுகள் நிலவுவதாகவும், தமிழ்நாடு உயர்கல்வி மன்றப் பரிந்துரைகளை, சில பல்கலைகள் நடைமுறைப்படுத்துவது இல்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் நடத்தப்படும் வளாக நேர்காணலில், பெரும்பாலான மாணவர்கள், ஆங்கிலத்தில் பேச முடியாமல் சிரமப்படுகின்றனர். இளநிலைப் பட்டப் படிப்பில், மொழிப் பாடத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் தான், இதற்குக் காரணமாகக் கருதப்படுகின்றன.
வளாக நேர்காணலில் பங்கேற்கும், பி.காம்., - பி.எஸ்சி., - கம்ப்யூட்டர் சயின்ஸ், - பி.சி.ஏ., போன்ற, இளங்கலைத் துறை மாணவர்கள், இரண்டு செமஸ்டர்களில் மட்டுமே, ஆங்கிலம், தமிழ் பாடங்களைப் படிக்கின்றனர். இளங்கலைப் பட்டப் படிப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அந்தந்தப் பாடங்களில், பட்ட மேற்படிப்பில் சேரலாம்.
ஆனால், எம்.ஏ., தமிழ், ஆங்கிலம் படிக்க வேண்டும் என்றால், இளநிலைப் பட்ட வகுப்பில், மொழிப் பாடத்தைப் படித்திருக்க வேண்டும். இளநிலைப் பட்ட வகுப்பில், பிற முதன்மைப் பாடம் படிக்கும் மாணவர்கள், நான்கு செமஸ்டர்களில், மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தால் தான், முதுநிலை ஆங்கிலம், தமிழ் படிக்க முடியும்.
கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள விரும்பும் இத்துறை மாணவர்களுக்கு, முதுகலைத் தமிழ், முதுகலை ஆங்கிலம் பட்ட மேற்படிப்புப் படிக்க வாய்ப்பில்லாத நிலை உள்ளது. மாணவர்கள் நலன் கருதி, இளநிலைப் பட்டப் படிப்புப் படிக்கும் அனைவருக்கும், மொழிப் பாடங்களை, 4 செமஸ்டர்களிலும் நடத்த வேண்டும் என, முன்னாள் தமிழ்த்துறை பேராசிரியர் கணேசன், தமிழக முதல்வர், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பி உள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.