Pages

Thursday, August 30, 2012

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம்

கடந்த 25ம் தேதி வெளியான, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை நடத்தி, இறுதிப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. வழக்கமாக, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். ஆனால், தேர்ச்சி எண்ணிக்கை குறைவாக உள்ளதால், திருச்சி, நெல்லை, மதுரை, கோவை, சென்னை ஆகிய ஐந்து நகரங்களில் மட்டும் நடத்த, டி.ஆர்.பி., ஆலோசித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவும், டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது.

  வழக்கு: இடைநிலை ஆசிரியர்கள் முன்பு, மாவட்ட அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்டனர். தென் மாவட்டத்தைச் சேர்ந்த பதிவுதாரர்கள், "மாவட்ட பதிவு மூப்பு எனில், எங்களுக்கு பாதிப்பு ஏற்படும். பட்டதாரி, முதுகலை ஆசிரியரைப் போல், இடைநிலை ஆசிரியரையும், மாநில பதிவு மூப்பில் நியமிக்க வேண்டும்' என, ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கிலும், மதுரை கிளையின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.  அரசு விருப்பம்: தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், வழக்கு விசாரணையின் போது, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியரை பணி நியமனம் செய்ய, தமிழக அரசு விருப்பம் தெரிவித்தது; அதன்படி பணி நியமனம் செய்து வருவதையும் தெரிவித்தது. இந்த வழக்கில், செப்., 15க்குள் தீர்ப்பு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தீர்ப்பின் அடிப்படையில், இடைநிலை ஆசிரியரை நியமனம் செய்ய, டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.