Pages

Wednesday, August 22, 2012

தொலைதூர சான்றிதழ் வழங்கிய பல்கலைக்கழகத்தை எதிர்த்து மாணவர்கள் உண்ணாவிரதம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செயற்கைகோள் பாடமுறைக்கு எதிராக மாணவ மாணவியர் நாகர்கோவிலில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் பெறாமல் செயற்கைகோள் பாடமுறைகளை தொடங்கியுள்ளது. இது தொலைதூர கல்வி வகுப்புகளை போன்றது. இந்த மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் ரெகுலர் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு இணையானவை அல்ல.


இதனால் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுகிறது.தனது வருவாயை மட்டும் கவனத்தில் கொண்டு மாணவர்களின் எதிர்காலத்தை பற்றி பல்கலைக்கழக நிர்வாகம் கவலைப்படவில்லை.நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும், குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரியும் மாணவர்களை ஏமாற்றி ரெகுலர் கோர்சில் சேர்ப்பதாக கூறி செயற்கைகோள் பாடதிட்டத்தில் மாணவர்களை சேர்த்து சான்றிதழ் வழங்கி ஏமாற்றியுள்ளது. தமிழக அரசும் பல்கலைக்கழக மானிய குழுவும் விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர்களிடமிருந்து அநியாயமாக வசூலித்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும்.

செயற்கைகோள் மைய வகுப்புகளில் படித்த, படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ரெகுலர் கோர்ஸ் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் நாகர்கோவில் கலெக் டர் அலுவலகம் முன்பு நேற்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை  தொடங்கினர். மாணவி சுனிதா தலைமை வகித்தார். தமிழாலயம் இயக்குநர் புலவர் பச்சைமால் உண்ணாவிரதத்தை தொடக்கி வைத்தார். தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தினமும் கலெக்டர் அலுவலகம் முன்பு காலை முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக கல்லூரி மாணவ மாணவியர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.