Pages

Saturday, August 18, 2012

ஆண்டுக்கு மானியத்துடன் 4 சிலிண்டர்கள் மட்டும் : பரிந்துரை

தற்போது வீடுகளுக்கு வழங்கப்படும் ஒரு சிலிண்டரின் விலை சுமார் 400 ரூபாயாகும். இதில் ஒரு சிலிண்டருக்கு அரசு ரூ.231 மானியமாக அளிக்கிறது. எனவே, ஒரு சிலிண்டரின் மொத்த விலை என்பது சுமார் ரூ.630 ஆகும்.


இந்த நிலையில், இந்தியாவில் 29% குடும்பத்தினர் ஒரு ஆண்டுக்கு 4 கியாஸ் சிலிண்டர்களை மட்டுமே பயன்படுத்துவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

எனவே, இதனை அடிப்படையாக வைத்து அனைத்து குடும்பத்துக்கும், ஆண்டுக்கு 4 சிலிண்டர்களுக்கு மட்டும் மானிய விலையை அரசு வழங்கலாம் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் தேவைப்படின், முதல் 4 சிலிண்டர்கள் மட்டும் 400 ரூபாயக்கும், மீதம் 8 சிலிண்டர்களை 600 ரூபாய்க்கும் பெற வேண்டிய நிலை ஏற்படும்.

4 சிலிண்டர்களுக்கு மட்டும் அரசு மானியம் வழங்கினால், சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகத்துக்கு அரசு வழங்குகிற மானியத்தின் அளவு ரூ.18 ஆயிரம் கோடியாகக் குறையும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரையை மத்திய அரசு ஆராய்ந்து உரிய முடிவு எடுத்து விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.