Pages

Tuesday, August 21, 2012

டி.ஆர்.பி.,யில் தேர்வானவர்களுக்கு வடக்கு மாவட்டத்தில் பணிவாய்ப்பு

டி.ஆர்.பி., மூலம் தேர்வான முதுகலை ஆசிரியர்களுக்கு, கடலூர் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் தான், அதிக பணி வாய்ப்புகள் உள்ளன. சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை நடத்திய டி.ஆர்.பி.,தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தலை, முதன்மை கல்வி அலுவலர்கள் நடத்தினர். சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பாடங்களுக்கும் 35 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

மற்ற மாவட்டங்களில் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, காலியிடங்கள் பற்றிய விவரமும் சேகரிக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இரு கல்வி மாவட்டங்களில், 60க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.

அதிகாரி ஒருவர் கூறுகையில், டி.ஆர்.பி.,யில் தேர்வு பெற்றவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். தென் மாவட்டங்களில் இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களுக்கு காலியிடங்கள் குறைவாக உள்ளன.

திருச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தான் காலியிடங்கள் அதிகமாக உள்ளன. இயற்பியல்,வேதியியல் பாடங்களுக்கு தென் பகுதியில் இருந்து தேர்வான பலருக்கு வடக்கு, மத்திய மாவட்டங்களில் பணி வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.