சர்ச்சைக்குரிய சீயோன் பள்ளி மீது, பெற்றோர், புதிய குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளனர். தாம்பரத்தை அடுத்த சேலையூர் சீயோன் பள்ளி பேருந்து கட்டணம் வசூலித்துவிட்டு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை பேருந்தில் ஏற்ற மறுப்பதாக, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது: விபத்து சம்பவம் நடந்த பிறகு, சில நாட்களுக்கு பேருந்துகளை பள்ளி நிர்வாகம் இயக்கவில்லை. பின்னர் முடிச்சூர் சாலைக்கு மட்டும் பேருந்துகளை இயக்காமல் இருந்தனர். அதன் பிறகு, அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க துவங்கி விட்டனர். ஆனால், ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியரை பேருந்தில் ஏற்ற மறுக்கின்றனர்.
பள்ளி துவங்கும் போதே, பேருந்து கட்டணத்தை ஒரு ஆண்டிற்கு சேர்த்து வசூலித்து விட்டனர். இப்போது, மாணவர்களை பேருந்தில் ஏற்ற மறுக்கின்றனர். கேட்டால், கூடுதல் பேருந்துகளை வாங்கி இயக்கும் போது தான், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை பேருந்தில் அழைத்துச் செல்ல முடியும் என்கின்றனர்.
இதனால், புத்தக சுமையுடன், இரு பஸ்களை பிடித்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டியுள்ளது. இப்பிரச்னைக்கு பள்ளி நிர்வாகம் ஒரு தீர்வு காண வேண்டும். இவ்வாறு பெற்றோர் தெரிவித்தனர். சீயோன் பள்ளியில் பயின்ற சிறுமி சுருதி, பள்ளி பேருந்தின் ஓட்டை வழியாக கிழே தவறி விழுந்து கடந்த மாதம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.