Pages

Thursday, August 30, 2012

அரசு பள்ளி உள்கட்டமைப்புக்கு ரூ.129 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, நபார்டு வங்கி, 129 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பாக, நபார்டு வங்கியின், தமிழ்நாடு மண்டல தலைமை மேலாளர் லலிதா வெளியிட்ட அறிக்கை: ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், தமிழகத்தில், 31 மாவட்டங்களில் அமைந்திருக்கும், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 129.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதன்மூலம், புதிதாக, 1,508 வகுப்பறைகள், 112 ஆய்வுக் கூடங்கள், விடுதிகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால், 1.7 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைவர்.

ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், 2012௧3ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த நிதியாக, 822 கோடி ரூபாய், தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சேமிப்பு தானிய கிடங்குகளை உருவாக்க மட்டும், சிறப்பு நிதியாக, 151.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.