Pages

Friday, August 31, 2012

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை : புதுச்சேரி பட்டயப் பயிற்சி பெற்ற வேலையில்லா ஆசிரியர்கள் கூட்டமைப்பு

காலியாக உள்ள அனைத்துப் பிரிவு ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என பட்டயப் பயிற்சி பெற்ற வேலையில்லா ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் ராஜராஜசோழன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறியதாவது:ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்தவர்கள் 5000 பேருக்குமேல் உள்ளோம். கடந்த 4 ஆண்டுகளாக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வருகிறோம்.
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளது. எனவே காலிபணியிடங்களை முதல்வர் விரைவாக நிரப்ப வேண்டும். மாணவர்களின் வாழ்க்கை திறனை வளர்க்கும் நூலகம் மற்றும் உடல்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு ஆசிரியர் பதவிகளையும் நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், கூட்டமைப்பின் பொருளாளர் திருநாவுக்கரசு உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.