அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இணைந்து விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.திருவாரூரில் நேற்று மக்கள் நலப்பணியாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க
மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் கூறியதாவது:பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு பணி நியமனங்கள் உடனடியாக செய்யப்பட வேண்டும்.இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தில் கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு காத்திருப்போர் அனைவருக்கும் நிபந்தனையின்றி உடனே பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு தமிழ்ச்செல்வி கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.