Pages

Friday, August 31, 2012

ஆசிரியர் கூட்டமைப்பு கூட்டம்

கரூரில் மாவட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டம், தமிழாசிரியர் கழக தலைவர் வள்ளிராசன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், கடந்த 23ம் தேதி பள்ளி மாணவர்களை அழைத்து சென்று, கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆசிரியர்களின் பணிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட இந்திய மாணவர் சங்க த்தின் செயலை கண்டித்தல்.மாணவர் சங்க செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி, கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்குதல் உள்பட பலவேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் செந்தில் முருகன், உடற்கல்வி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மகாமுனி, தலைமையாசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் செல்வம், இடை நிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.