பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு
விண்ணப்பித்து, மதிப்பெண் மாற்றம் கண்ட மாணவ, மாணவியருக்கு, தேர்வுத்துறை
இயக்குனரகத்தில் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 17, 18), புதிய மதிப்பெண்
சான்றிதழ் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவிற்குப் பின், மறுகூட்டல் கோரி மாணவ,
மாணவியர் விண்ணப்பித்தனர். மறுகூட்டல் முடிவுகள், சம்பந்தப்பட்ட மாணவ,
மாணவியருக்கு தபால் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன. மறுகூட்டலில் மதிப்பெண்
மாற்றம் கண்ட மாணவ, மாணவியரின் பழைய மதிப்பெண் சான்றிதழ் ரத்து
செய்யப்பட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்யப்பட்டுள்ளது.
புதிய மதிப்பெண் சான்றிதழ், 17, 18 (இன்றும்,
நாளையும்) ஆகிய தேதிகளில், தேர்வுத்துறை இயக்குனரக வளாகத்தில் உள்ள
மாநாட்டுக் கூடடத்தில் வழங்கப்படும். "மதிப்பெண் மாற்றம் உள்ளது&' என்ற
தகவலைப் பெற்ற மாணவ, மாணவியர், தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழ்களை,
தேர்வுத்துறை இயக்குனரகத்தில் நேரில் ஒப்படைத்து, புதிய மதிப்பெண்
சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.