கூகுள் இணையதளத்தில் கல்வி சம்பந்தப்பட்ட தேடல்களில் இந்தியா உலகளவில் இரணடாம் இடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள உள்ள இணையதள உபயோகிப்பாளர்களில், 50 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் கல்வி தொடர்பான தேடல்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. கூகிள் மூலம் கல்வி தொடர்பான கேள்விகளுக்கு விடைகள் பெற முடிவதாகவும் சொல்லப்படுகிறது.
கைப்பேசியில் இணையதளத்தை உபயோகித்து கல்வி நிறுவனங்களை பற்றி தேடுவதும் 66 சதவீதம் அதிகரித்து உள்ளது. கல்வி நிறுவனங்களின் வீடியோ பதிவுகளை 46 சதவீதம் பார்க்க விரும்புகின்றனர்.
கூகிள் இந்தியா நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நடத்தப்பட்ட இதேபோன்ற கருத்துக் கணிப்பில் உலகளவில் 8வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.