ஆதிதிராவிடர் நலத் துறை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு வருவாய்த் துறையினரும் காரணம் என்றார் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது:
நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவி தொகையில் நடந்த முறைகேடு விவகாரத்தில் 72 ஆசிரியர்களும், ஓர் ஆதிதிராவிடர் நல அதிகாரியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கல்வி உதவித் தொகைக்கு ஆதிதிராவிடர் நலத் துறையிலிருந்துதான் நிதி அளிக்கப்படுகிறது. ஆனால், நிதியை வழங்குவது கல்வித்துறைதான். ஆதிதிராவிடர் நல அலுவலர்களாக உள்ளவர்கள் வருவாய்த் துறையினர் என்பதால் அவர்களும் இதற்குக் காரணமாகின்றனர்.
ஆதிதிராவிடர் நலத்துறைத் துறைக்கும் இந்த முறைகேட்டுக்கும் சம்பந்தம் இல்லை.
2010-11-ல் இந்த முறைகேடு நடந்துள்ளதால், அப்போது ஆட்சியில் இருந்த திமுகதான் இதற்கு மூலக் காரணம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆதிதிராவிடர் நலத் துறை மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் முறைகேடு நடந்துள்ளதா என்ற ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்றார் அமைச்சர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.