உணவின் முக்கியத்துவத்தையும், அதன் மகத்துவத்தையும் விளக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தர திட்டமிடப்பட்டுள்ளது. பட்டினியால் வாடும் குழந்தைகள் பற்றி அரசு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேசிய அளவிலான ஆய்வில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 42 சதவிகிதம் பேர் எடைக் குறைவாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும், 5 வயதுக்கு கீழான 58% குழந்தைகள் சத்துக்குறைவுடன் காணப்படுவதாகவும் அதில் கண்டறியப்பட்டது.
இந்தப் புள்ளிவிவரங்களை சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குத் தெரிவிப்பதுடன், உணவை வீணடிப்பதை தடுக்கவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ. இயக்குனர் (பயிற்சி மற்றும் கல்வி) சாதனா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மாணவர்களுக்கு உணவை வீணடிப்பதால் ஏற்படும் நஷ்டங்கள் பற்றியும், பள்ளிக்கு கொண்டு வரும் உணவு மீதமானால் அதனைத் தயக்க்மின்றி திருப்பி எடுத்துச் செல்ல வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.