Pages

Sunday, August 26, 2012

அரசு பள்ளிகளில் ஜாதி வாரிப் பட்டியல் தயாரிக்க உத்தரவு

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் ஜாதி வாரி பட்டியலை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்வோருக்கு இனச்சுழற்சியில் ஜாதி வாரி கல்வி உதவித்தொகை, அரசின் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆட்சியிலும் புதிய சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், நடப்பாண்டில் கல்வி உதவித்தொகை உட்பட வகுப்பு வாரியாக 16 சலுகைகள் அறிவித்து, ஒவ்வொன்றாக வழங்கப்படுகிறது.


இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளின் சலுகைகள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சரியான முறையில் சென்றடைகிறதா, ஜாதி வாரியாக எத்தனை சதவீதம் பேர் இச்சலுகைகளை பெறுகின்றனர். ஒவ்வொரு ஜாதியிலும் உயர், மேல்நிலை கல்வி பயில்வோரின் சராசரியை உறுதிப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக தமிழகத்தில் முதல் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளின் ஜாதி வாரி பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முதன்மை கல்வி, மாவட்ட கல்வி, தொடக்கக்கல்வி அலுவலக ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், முறைகேடுகளை தடுக்க, இந்த கணக்கெடுப்பு நடக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுக்கு எத்தனை பேர் அரசு சலுகைகள் பெறுகின்றனர். சலுகை அளித்தும் ஏன் இடை நிற்றல் ஏற்படுகிறது போன்ற பல்வேறு காரணங்களை தெரிந்து கொண்டு, மாற்றங்களை உருவாக்க இந்த கணக்கெடுப்பு நடக்கிறது என்றார்.

1 comment:

  1. தாசில்தாரும் ஆர்.டி.ஓ க்களும் சாதி சான்றிதழ் தருவதற்கு விசாரணை என்ற பெயரில் அரசு குமாஸ்தாக்களை அனுப்பி வைத்து அவர்கள் சொல்படி கேட்டு சாதி சான்றிதழ் தரும் சூழலில் இது போன்று பள்ளிக்கூடங்களில் கேட்டு வாங்கி என்ன பயன். குமரிமாவட்டத்தில் பல மாணவ மாணவியர்கள் சான்றிதழ் பெற முடியாமல் மேற்கொண்டு படிக்க முடியாமல் படிப்பை நிறுத்திய கதை உங்களுக்கு தெரியுமா? விபரம் வேண்டுமா..தொடர்பு கொள்ளவும். 9791820195. lgmrajaia@gmail.com

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.