Pages

Thursday, April 30, 2015

பொறியியல் படிக்க விரும்புபவர்களுக்கு அண்ணா பல்கலையின் அறிவுறுத்தல்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள், இருப்பிடச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறு, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

காந்திகிராம பல்கலைக்கு இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

காந்திகிராம பல்கலையில் 2015-16 கல்வியாண்டிற்கு ’ஆன்-லைனில்’ விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வங்கி நடைமுறைகள் எப்படி? சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம்.

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவ மாணவியர் வங்கி நடைமுறைகள் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றனர்.

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவ மாணவியர்க்கு வங்கி தொடர்பான நடைமுறைகள் அறிந்து கொள்ள தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் ஏற்பாடு செய்தார்.

மத்திய அரசு சான்றிதழ் வழங்கும் விழா

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நாடு நிலை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் 8ம் வகுப்பு மாணவர் ர.நவீன்குமார் வரவேற்புரை வழங்கினார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விழாவிற்கு தலைமை தங்கினார்.

நம் கல்வி... நம் உரிமை!- அஜிதனும் அரசுபள்ளியும் ஜெயமோகன்

அஜிதனுக்கு எல்கேஜி, யுகேஜி முடிந்ததும் பத்மநாபபுரம் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்த்தோம். பள்ளியில் சொன்னார்கள், “பையன் சராசரிக்கும் மிகக் கீழே, அவனுக்கு எழுதவே வரவில்லை” என. சோதித்துப் பார்த்தால் அது உண்மை. அஜிதனுக்கு சிறு வயதிலேயே இடது கைப்பழக்கம்.

இணை. இயக்குனர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல்


முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்தில் நிதி அமைச்சரிடம் தனி அதிகாரியாக பணிபுரிந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குனர் (தொழில்கல்வி) ஆக பதவி உயர்வு பெற்றார். சேலம் முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார், மதுரை பிற்பட்டோர் மற்றும் கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 

துண்டு சீட்டுகளில் கல்வி கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை

தேனி மாவட்ட தனியார் பள்ளிகளில் துண்டுச் சீட்டில் கல்வி கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கற்றல் அடைவுத் திறன் தேர்வு முடிவு எப்போது?

தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) சார்பில்10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கற்றல் அடைவுத் திறன் தேர்வு முடிவுகள் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவித்தன.

தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்தேர்வு வாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.) சமீபத்தில் நர்ஸ் பணிக்கு 7 ஆயிரத்து 243 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு


தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்தேர்வு வாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.) சமீபத்தில் நர்ஸ் பணிக்கு 7 ஆயிரத்து 243 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் 6 ஆயிரத்து 792 இடங்கள் பெண் விண்ணப்பதாரர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னை,மாற்றுத்திறனாளிகள் சலுகை கட்டணத்தில் பயணிக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை பெற வசதி

சென்னை, மாற்றுத்திறனாளிகள் சலுகை கட்டணத்தில் பயணிக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை பெறுவதற்கு 36 ரெயில் நிலையங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு
ரெயில்வே அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள் முற்றுகை திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகை


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் தொடக்கக் கல்வி அலுவலர் தரக்குறைவாக பேசுவதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

வேடிக்கை பார்ப்பதா? தீக்கதிர் தலையங்கம்


தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுமுடிந்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக் கிறது. அதே நேரம் மாநகரங்கள் உள்ளிட்டு தமிழகத்தில் உள்ள நகர்புறப் பள்ளிகளில் விறுவிறுப்பாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

பொறியியல் படிப்பில் சேர என்னென்ன ஆவணம் தேவை


பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள், இருப்பிடச் சான்று உள்ளிட்டசான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறு, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

மாவட்ட நூலகங்களில் ப்ளஸ் 2 மதிப்பெண் பட்டியலை இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்


வருகிற மே 7ம் தேதி வெளியாக உள்ள +2 தேர்வு முடிவுகள் மற்றும் அதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

வேளாண் கல்லூரிகளில் சேர மே 15முதல் விண்ணப்பம்


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளங்கலை படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 15ம் தேதி முதல் இணையதளம் மூலம் வினியோகிக்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் 13 வகையான பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது.

ஏ, பி கிரேடு கல்லூரிகளில் படிப்பவருக்கு மட்டுமே கல்விக் கடன் இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது


கல்லூரிகளுக்கான தேசிய தர நிர்ணயக் குழுவால் (NAAC) ஏ, பி கிரேடு சான்று அளிக்கப்பட்ட கல்லூரிகளின் மாணவர்களுக்கு மட்டுமே இனி கல்விக் கடன் வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது இந்த ஆண்டே அமலுக்கு வரவுள்ளது. 

Wednesday, April 29, 2015

அரசுப் பள்ளிகளை காப்பாற்ற ஆசிரியர்களால் முடியும்!

இன்றைய கல்வி வந்தடைந்திருக்கும் இடத்துக்கும் பொதுக்கல்விக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கும் இப்படி எவ்வளவோ காரணங்கள் உண்டு. அவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடுவது ஒருபுறம் என்றால், எல்லாவற்றையும் தாண்டி ஒரு பள்ளிக்கூடத்தின் தரத்தைத் தூக்கி நிறுத்த ஒருவரால் முடியும் என்றால், அவர் ஆசிரியர்.

நோடல் மையத்தை திருத்தணி பகுதியில் கூடுதலாக துவக்க வேண்டுகோள்

பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு பதிவதற்கான நோடல் (சேவை) மையத்தை, திருத்தணி பகுதியில் கூடுதலாக துவக்க வேண்டும் என, விண்ணப்பதாரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விடைத்தாள் திருத்தும் பணிக்கு டேக்கா கொடுத்தவர்களின் விபரங்கள் சேகரிப்பு

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளில் உரிய காரணமின்றி விடுப்பு எடுத்த ஆசிரியர்கள் விவரத்தை, கல்வி அதிகாரிகள் சேகரிக்கின்றனர்.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 20 துவங்கி 25ல் முடிக்க தேர்வுத் துறை அறிவுறுத்தியது. ஆனால் மதுரையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தாமதம் ஏற்பட்டு ஏப்.29 வரை திருத்தும் பணி நீடித்தது.

பல்வேறு குளறுபடிகள்: ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் அவதி

தேர்வுத்துறை சேவை மையங்களில், போதிய ஊழியர் இன்றி மற்றும் முறையான அறிவிப்பின்றி, ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் அவதிக்கு ஆளாகின்றனர். விண்ணப்பதாரர்கள், நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

பொறியாளர் மசோதாவை நிறைவேற்றுவது எங்களின் முக்கிய நோக்கம்: இ.சி.ஐ. தலைவர்

பொறியாளர் மசோதா மட்டும் நிறைவேற்றப்பட்டுவிட்டால், பொறியியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துவிடும். அந்த சட்டத்தின் மூலம், கூட்டு பொறியியல் அமைப்புகளை ஏற்படுத்துவதற்கு அனுமதி கிடைக்கும் என்று இந்திய பொறியியல் கவுன்சில் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்க கல்வித்துறை உத்தரவு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பொது கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளைப்போல் மாநகராட்சி பள்ளிகளிலும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்" என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 4 ஆயிரத்திற்கும் மேல் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா?: பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம்

ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு எந்த வித சுற்றறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி - விண்ணப்பிக்கக் கடைசி தேதி மே 6

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு கடந்த 4 நாள்களில் 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் தங்களது விண்ணப்பங்களை இணைய வழியில் (ஆன்-லைன்) பதிவு செய்துள்ளனர்.

Tuesday, April 28, 2015

ஆசிரியர் பற்றாக்குறையால் 10ம் வகுப்பு தமிழ், ஆங்கில விடைத்தாள் திருத்தும் பணியில் தாமதம்

மதுரை மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள் திருத்தும் பணியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

6 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு

சென்னையில் 6 முதல் 18 வயது வரை உள்ள மாணவர் களுக்கு ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மாவட்டத்தில், இதுவரை 29.72 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது; இது 69 சதவீதம். அதில், மாணவர்களில் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை பள்ளிகள் மூலம் பட்டியல் பெறப்பட்டு சரிபார்க்கப்படும்.

பள்ளியில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை முற்றிலும் தடைசெய்ய ஆலோசனை

பள்ளியில், ஆசிரியர்கள் மொபைல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்வது குறித்து, கல்வித்துறையினர் ஆலோசித்து வருகின்றனர். மொபைல்போன் பயன்பாடு, பள்ளிகளில் பலவிதமான ஒழுக்கக்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. வாட்ஸ்-அப் வழியாக கணித வினாத்தாள் அனுப்பிய விவகாரம், கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிழையான வினாக்களுக்கு விடையெழுத முயற்சித்திருந்தால் மதிப்பெண்: அரசு தேர்வுகள் இயக்ககம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள்களில், பிழையாக அச்சாகியிருந்த வினாக்களுக்கு, மாணவர்கள் விடை எழுத முயற்சி செய்திருந்தால், மதிப்பெண் வழங்க அறிவுறுத்தப்பட்டுவிட்டதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

அச்சுப்பிழை வினாக்களுக்கு விடை? முயற்சித்தோருக்கு மதிப்பெண்!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள்களில், பிழையாக அச்சாகியிருந்த வினாக்களுக்கு, மாணவர்கள் விடை எழுத முயற்சி செய்திருந்தால், மதிப்பெண் வழங்க, அறிவுறுத்தப்பட்டுவிட்டதாக, அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளது.

மேல்நிலைப் பள்ளிகளில் இரு பருவமுறை தேர்வுகள்; ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

மேல்நிலைப் பள்ளிகளில் இரு பருவமுறை தேர்வுகள் அமல்படுத்த வேண்டும்'' என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் மணிவாசகம் வலியுறுத்தினார். மதுரையில் மாநில பொதுக்குழு இதில் மணிவாசகம் பேசியதாவது:

கல்வி காவியமாகவில்லை:ஸ்மிருதி இரானி பார்லி.,யில் தகவல்

கல்வித்துறை நியமனங்கள் காவியமாக்கப்படவில்லை என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். லோக்சபாவில் மனிதவள மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்த போது அதற்கு பதிலளித்து பேசுகையில் இவ்வாறு கூறினார்.

பாடநூல் விற்பனை மையம் மூடல்: புத்தக தட்டுப்பாடு எதிரொலி

பாட புத்தக தட்டுப்பாடு காரணமாக, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்பட்ட புத்தக விற்பனை மையம் திடீரென மூடப்பட்டுள்ளது. இதனால், பல கி.மீ., தூரத்திலிருந்து வரும் பெற்றோர், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் தேர்வு தாமதம்: டி.ஆர்.பி., அலுவலகம் முன் தேர்வர்கள் முற்றுகை

ஆதிதிராவிடர் பள்ளிகளின் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடக் கோரி, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அலுவலகத்தை, பட்டயப் படிப்பு முடித்தவர்கள் முற்றுகையிட்டனர்.

மூடப்படும் நிலையிலிருந்து மீண்ட கிராம பள்ளி: ஆசிரியைகளின் முயற்சியால் நடுநிலை பள்ளியாக தரம் உயர்வு

மதுரை அருகே மூடப்படும் நிலையிலிருந்து மீண்ட அரசு தொடக்கப் பள்ளி, ஆசிரியைகளின் தொடர் முயற்சியால், தற்போது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததாலும், ஆசிரியர்களின் அலட்சியப் போக்காலும், கிராமப் புறங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து பல பள்ளிகள் மூடப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

Tamil Nadu School Lab Assistant List of Nodal Centers / Application Centers

Ariyalur - 

 Male:

Government Higher Secondary School (Ariyalur)

Periyar Higher Secondary School (Jayamkondan)

Female:

Nirmala Higher Secondary School (Ariyalur)


Government Higher Secondary School (Jayamkondan)

Monday, April 27, 2015

கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியல் விவகாரம்: பள்ளிக் கல்வித்துறைக்கு நோட்டீஸ்


கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கூலி தொழிலாளி மகள் சாதனை: நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதல் இடம்

சிவில் நீதிபதி தேர்வில் நாமக்கல்லைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ். இவரது மனைவி ஜெய்சூரியா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இவரது மகள் விபிசி(25), திருச்செங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 முடித்து விட்டு திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் பிஎல் படித்தார்.

என்.ஓ.சி., பெறாமல் சி.பி.எஸ்.இ.,க்கு மாற்றம்: வசூலை அதிகரிக்க தடம் மாறும் தனியார் பள்ளிகள்

கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்காக, பல மெட்ரிக் பள்ளிகள், அரசின் தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) பெறாமல், சி.பி.எஸ்.இ.,க்கு மாறி வருகின்றன. தமிழகத்தில், 9,600 அரசு மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன; 5,000 தொடக்கப் பள்ளிகளும் செயல்படுகின்றன. இவற்றில், 4,000 தனியார் மெட்ரிக் பள்ளி கள், 40 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளும் செயல்படுகின்றன.

விடைத்தாள் திருத்தும் பணியும் இழு... இழு... மன அழுத்தத்தில் ஆசிரியர்கள்

மதுரை மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள் திருத்தும் பணியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தேர்வுத் துறையின் சரியான திட்டமிடல் இல்லாததால் மார்ச் 19ல் துவங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இழு... இழு... என இழுத்து ஏப்.10ல் தான் முடிந்தது. இதன் பின் ஏப்.20 முதல் வேலம்மாள், மகாத்மா, செயின்ட் மேரீஸ் மற்றும் பி.கே.என்., மெட்ரிக் பள்ளிகளில் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. நான்காயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பேராசிரியர், விரிவுரையாளர் பணிக்கு வயது வரம்பு அதிகரிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்

அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்களும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக நியமிக்கப்படுகிறார்கள். இதற்கான தேர்வு எழுதுவதற்கு கடந்த 2013-ம் ஆண்டு வரை வயது வரம்பு 57 ஆக இருந்து வந்தது.

உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு:டி.ஆர்.பி., மீது 'நெட்' சங்கம் புகார்

'அரசு கல்லுாரி உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதால், தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., ரத்து செய்ய வேண்டும்' என, நெட், ஸ்லெட் அசோசியேஷன் வலியுறுத்தி உள்ளது.

பி.எப்., பணம் எடுத்தால் 10 சதவீத வரி கழிக்க திட்டம்

வருங்கால வைப்பு நிதியில் சேர்த்து வரும் தொகையை, ஐந்து ஆண்டுகளுக்குள், தொழிலாளர்கள் திரும்பப் பெற்றால், 10.3 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்ய, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (ஈ.பி.எப்.ஓ.,) முடிவு செய்துள்ளது.

தமிழ்வழியில் படித்திருந்தால் முதுகலை ஆசிரியர் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு

'முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதுகலை பட்டத்தை தமிழ் வழியில்படித்திருந்தால் மட்டுமே அரசாணைப்படி முன்னுரிமை அளிக்கப்படும்' என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

பள்ளிக்கல்வித் துறைக்கு பிடித்த வியாழக்கிழமை!

தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் தொடங்கப்பட்டதும், முடிவுகள் வெளியாகும் தேதிகள் மற்றும் அதற்கான அறிவிப்புகள் அனைத்தும் வியாழக்கிழமையை மையமாக கொண்டுள்ளது. 

ஜீன்ஸ், மொபைல் போனுக்கு தடை.ஆசிரிய ஆசிரியைகளுக்கு புது கட்டுப்பாடு.வரும் கல்வியாண்டு முதல் அமல்

வரும் கல்வியாண்டு முதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரவும் தடை விதிக்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

மூத்த விரிவுரையாளர் தேர்வு பட்டியல் வெளியீடு - மூத்த விரிவுரையாளர் தேர்வு பட்டியல் வெளியீடு

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் மூத்த விரிவுரையாளர் தேர்வு பட்டியலை, தமிழக ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறையின் மாநில கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனத்தில், மூத்த விரிவுரையாளர் மூலம் சிறப்புப் பயிற்சி தரப்படுகிறது. மூத்த விரிவுரையாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையை, 2011ல் டி.ஆர்.பி., மேற்கொண்டது.

பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க செல்லும்போது கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் ( அசல் மற்றும் நகல்கள் )

(*கட்டாயம் தேவைப்படுவன)
1) *பத்தாம் வகுப்பு சான்றிதழ் / கூடுதல் கல்வித்தகுதி சான்றிதழ்
2) *சாதி சான்றிதழ்
3) *வேலைவாய்ப்பு அட்டை ( employment card)
4) முன்னுரிமை கோரினால் அதற்கானச் சான்றிதழ்

அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் பணிக்கு 30 ஆயிரம் பேர் விண்ணப்பம்: பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4,362 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. குறைந்த பட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. ஆகும்.

Saturday, April 25, 2015

கோடை விடுமுறையில் பிளஸ் 2 சிறப்பு வகுப்புகள்: ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மன உளைச்சல்

கோடையில் வெயிலின் உக்கிரத்திலிருந்து தப்பிக்கவும், விடுமுறையில் வகுப்பறை கல்வியையும் தாண்டி வெளியுலகை அறிந்து, புரிந்து கொள்ளவும், குடும்ப உறவு மேம்படவும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை காலம் உதவுகிறது. இந்த உளவியல் நலனுக்கா கவே ஆங்கிலேயர் காலத்திலிருந்து ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.

30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா?

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் எனப்படும், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட நிதியின் கீழ் சம்பளம் பெறும், 30 ஆயிரம் ஆசிரியர்கள், இம்மாதத்திற்கான சம்பளத்தை, வரும், 30ம் தேதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் 5 சதவீதம் முதலீடு செய்ய அனுமதி பி.எப். நிதியை சூறையாடுகிறது அரசு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் 5 சதவீத நிதியை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் சேமிப்புப் பணமான பி.எப். நிதியிலிருந்து சுமார் 5 ஆயிரம் கோடி அளவிற்கு உடனடியாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டு சூதாட்டம் துவங்கவிருக்கிறது.

மாணவர் சேர்க்கைக்கு கல்லூரிகள் இணையதள மதிப்பெண் நகலை பெறலாம்

இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் மதிப்பெண் நகல்களை பயன்படுத்தி, மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம்' என, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கை யில் கல்லூரிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா கூறியிருப்பதாவது:

பி.இ 60 மையங்களில் விண்ணப்பம் விநியோகம்

பி.இ. படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், தமிழகம் முழுவதும் 60 மையங்களில், மே 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும். தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்

மதுரையில் மூடும் நிலையில் 6 மாநகராட்சி பள்ளிகள்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அதிர்ச்சி தகவல்

மதுரையில் 6 மாநகராட்சி பள்ளிகள் மூடும் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினரின் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.இந்த இயக்கத்தினர் மாநகராட்சி பள்ளிகள் குறித்து ஆய்வு செய்தனர். இது குறித்து அதன் மாவட்டச் செயலர் பொ.பாண்டியராஜன் நேற்று கூறியது:

மாணவர்கள் கடத்தலை தடுக்க பள்ளியின் வாசலில் அறிவிப்பு பலகை

போலீசாரை தொடர்பு கொள்ளும் வகையில், அரசு பள்ளி அருகே, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. வளசரவாக்கம் பகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளின் நுழைவாயில்களில், காவல் துறை சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் கூறியதாவது:

4 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட முடிவு

மகாராஷ்டிராவில் 4000 அரசு பள்ளிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதால்,

தேர்வே எழுதாத மாணவிக்கு எம்.பி.ஏ., பட்டம்!

காரைக்குடி அழகப்பா பல்கலையில், தேர்வே எழுதாத மாணவிக்கு எம்.பி.ஏ., பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அந்த மாணவி பட்டத்தை திருப்பி அனுப்பி, தேர்வு எழுத அனுமதி கோரியுள்ளார்.

கிழிந்த பழைய ரூபாய் நோட்டுக்களை 25ம்.தேதி மாற்றிக்கொள்ளலாம்


கிழிந்த பழைய நோட்டுகள் இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: பழைய, கிழிந்த மற்றும் அழுக்கான, குறிப்பாக சிறிய மதிப்பிலக்க 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து அகற்றி, அவற்றுக்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வழங்கப்படவுள்ளது.

உலகிலேயே மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடு சுவிட்சர்லாந்து!


உலகிலேயே மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடு சுவிட்சர்லாந்து என்ற பெருமையை பெற்றுள்ளதாக   ஆய்வில் தெரியவந்துள்ளது.

மே 11ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம்

எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 11ம் தேதி முதல் வழங்கப்படும் என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு பாடத்திட்டம்

Syllabus and Pattern for Tamil Nadu School Lab Assistant Jobs:

1. Science (SSLC Standard Level)

2. General Knowledge

TNDGE Tamil Nadu School Lab Assistant Exam Pattern:

Science = 120 Questions

General Knowledge = 30 Questions

Total = 150 Questions

Mark Split up

பள்ளி வேலை நாட்களை 200 ஆக குறைக்க தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்.

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, துவக்கப்பள்ளி வேலை நாள், 220 என்பதை, 200 நாட்களாக குறைத்து அரசு ஆணை வெளியிட வேண்டும்' என, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், வட்டார செயற்குழு கூட்டம், நாமக்கல் அடுத்த எருமப்பட்டி யூனியன், கொடிக்கால்புதூர் ஊராட்சி துவக்கப்பள்ளியில் நடந்தது.வட்டாரத் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.

8ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாயம் தேர்ச்சி கூடாது: தனியார் பள்ளி மாநாட்டில் வலியுறுத்தல்

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் வெள்ளி விழா மாநாடு சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று நடந்தது.மாநில தலைவர் ஏ.கனகராஜ் தலைமை தாங்கினார். 

தாமதமாகிறது ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: கோடை விடுமுறைக்குள் முடிக்கப்படுமா?

ஒவ்வொரு ஆண்டும் விருப்பத்தின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, அதை தொடர்ந்து பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கிறது.

ஆய்வக உதவியாளர் பணியிடத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, April 23, 2015

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 21ம் தேதி வெளியாகிறது.


தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா இதற்கான அறிவிப்பை இன்று மாலை வெளியிட்டார்.

குளறுபடிகளை தவிர்க்க பிளஸ் 2 விடைத்தாளில் யுக்தி

மதிப்பெண் பதிவில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்கும் வகையில், பிளஸ் 2 விடைத்தாள் டாப் சீட்டின் ’பி’ பகுதி, மாநில அளவில் சரிபார்த்தலுக்கு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளை வளர்த்தெடுத்த பெரம்பலூர் கலெக்டர்! - சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான பிரதமர் விருதுக்கு தேர்வு!

சிறந்த திட்டங்களை செயல்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கான பிரதமர் விருதை, பெரம்பலூர் ஆட்சியர் தாரேஸ் அகமதுவிற்கு அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, தங்கள் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்திருக்கும் பெருமைக்காக பெரம்பலூர் மாவட்டமே வாழ்த்துப்பா பாடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி? பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் விளக்கம்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணியாற்ற 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படும் முறை பற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் புதிதாக ஆய்வக உதவியாளர்கள் 4 ஆயிரத்து 362 பேர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

பிறப்பு, இறப்பு பதிவுக்கும் 'ஆதார்' எண் அவசியம்!

போலி சான்றிதழ்களை தடுக்க, பிறப்பு, இறப்பு பதிவுக்கும், 'ஆதார் எண்' அவசியம் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த, ஜன., 1ம் தேதி முதல், நாடு முழுவதும், பிறப்பு, இறப்புகள் அனைத்தும், 'ஆன்லைனில்' பதிவு செய்யப்படுகிறது. இதற்காக, மத்திய சுகாதாரத் துறை, 'சிவில் ரிஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம் சாப்ட்வேர்' தயாரித்துள்ளது.

கழிப்பறையை சுத்தப்படுத்த மாணவர்களை வற்புறுத்திய பள்ளி நிர்வாகி, ஆசிரியைகள் உள்பட 8 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பள்ளிக் கழிப்பறையைச் சுத்தப்படுத்த மாணவர்களை வற்புறுத்தியதாக பள்ளி நிர்வாகி, ஆசிரியர்- ஆசிரியைகள் என 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, 8 பேரை புதன்கிழமை கைது செய்தனர்.

தொகுப்பூதியம் பெறுவோருக்கு தனிப்பட்ட தொகை உயர்த்தி அறிவிப்பு

தொகுப்பூதியம் பெறுவோருக்கு, தனிப்பட்ட தொகையாக, மாதத்திற்கு 20 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அரசு அலுவலர்களுக்கு, ஜனவரி 1ம் தேதியில் இருந்து, அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, திருத்தப்பட்ட தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு, ஜனவரி 1ம் தேதியில் இருந்து, தனிப்பட்ட தொகையை உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம் 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க 24–ந்தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

சத்துணவு சமையல் உதவியாளருக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பள உயர்வு அரசுக்கு சத்துணவு ஊழியர்கள் நன்றி

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் கே.பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் நேற்று சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதியை தலைமைச்செயலகத்தில் சந்தித்துபேசினார்கள். 

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு அரசு வழக்கறிஞர் 4 வாரம் கூடுதல் அவகாசம் கேட்டதால் ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு

இன்று (21-04-2015 )டாட்டாவின் 3ம் ஊதிய வழக்கு மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் W.P.(MD)No:5301/2015ல் 31வது வழக்காக நீதியரசர் மாண்புமிகு.வைத்தியநாதன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அரசுப் பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (ஏப். 23) முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஏப்ரல் 23 முதல் மே 31-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஆகும். விடுமுறைக்குப் பிறகு, ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

செயல்படுத்தபடாமல் முடங்கிய பிரத்யேக இணையதள வடிவமைப்பு திட்டம்

அங்கீகாரம் பெற்ற மற்றும் பெறாத பள்ளிகள் குறித்து அடையாளம் காண்பிக்கும் நோக்கில், 2011ல் பிரத்யேகமாக துவக்கப்பட்ட இணையதளம் வடிவமைப்பு திட்டம், செயல்படுத்தபடாமல் முடங்கியுள்ளது.

'ஆசிரியை ஓட்டம் என எழுதாதீர்': கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!

கடந்த ஒரு வாரமாக தொலைக்காட்சி, செய்தித்தாள், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று எதை எடுத்தாலும், 'ஆசிரியை மாணவனோடு ஓட்டம்' என்ற செய்திதான் முன் வந்து நிற்கிறது. இந்த செய்தியை படித்தவர்கள், ஷேர் செய்கிறார்கள். ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது கூட அதிகம் விவாதித்தது, ஆசிரியை மாணவனோடு ஓட்டம் என்ற செய்தியைத்தான். இந்நிலையில், வெறும் மீடியா பசிக்காக சமூகத்தை சீரழிக்காதீர்கள் என்று குரல் கொடுக்கிறார்கள் கல்வியாளர்கள்.

தலைமை ஆசிரியருக்கு குத்து விட்ட ஆசிரியர்

பேரணாம்பட்டு அருகே பள்ளியில் முன்னதாகவே இறைவணக்கம் ஏற்பாடு செய்ததை தட்டிக்கேட்ட தலைமை ஆசிரியர் முகத்தில் ஆசிரியர் குத்துவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பத்தலபல்லி கிராமத்தில் ஊராட்சி நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு 270 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

அரசு ஊழியர், ஆசிரியர்கள் அசையும் சொத்து, அசையா சொத்து வாங்க அனுமதி கோரும்போது கவனிக்க வேண்டியவை

ஆணயர்(கா.ப) ந.க. எண் :82801/எம்.3/2004-2. தமிழ்நாடு அரசு ஊழியர் நன்னடத்தை விதி:1973, சார்விதி:2. அசையும் சொத்து -----------------------------
(1) ரூபாய் 15000/ க்கு மேல் அசையும் சொத்து வாங்கினாலோ, விற்பனை செய்தாலோ, நிர்னயிக்கப்பட்ட அதிகாரிக்கு (controling officer ) ஒருமாதத்திற்குள் உரிய நிதி ஆதாரம், சொத்து விபரங்களுடன் தெரிவித்தால் போதுமானது .
அசையா சொத்து. -------------------------- 

வழக்குகள் அதிகரிப்பு எதிரொலி: ஆசிரியர் நியமனங்களை நிறுத்தி வைக்க டிஆர்பி முடிவு!

போலி சான்றிதழ், இன வாரியான முன்னுரிமை வழங்குதல், தகுதி நிர்ணய குழப்பம் ஆகியவற்றால் கல்வித்துறையில் புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு அறிவித்த நாளில் இருந்தே ஆசிரியர் தேர்வு வாரியம் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது 400க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு வெய்ட்டேஜ் வழக்குகள் இறுதிவிசாரணை வரும் ஜூலை 14 தேதிக்கு ஒத்திவைப்பு

ஆசிரியர் தகுத்தேர்வு பணிநியமனங்களில் பின்பற்றப்படும் வெய்ட்டேஜ் முறைக்கு எதிராக லாவன்யா மற்றும் பலர்  தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மற்ற வழக்குகள் விசாரிக்க இருப்பதாலும்,

அரசு ஊழியர்களுக்கு அகிலேஷ் அரசு தாராளம்: 6 மாதம் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி

உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வருடத்தில் 6 மாதங்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் எனவும் அரசு ஊழியர்களுக்கு தாராளம் காட்டி உள்ளது.

மூடப்படுகிறது 'பிளிப்கார்ட்' வெப்சைட்!

அண்மையில், பிரபல ஷாப்பிங் வெப்சைட்டான 'மிந்த்ரா' மூடப்பட்டதையடுத்து ஆன்லைன் வர்த்தகத்தின் ஜாம்பவானாக திகழ்ந்து வரும் பிரபல 'பிளிப்கார்ட்' வெப்சைட்டும் இந்த ஆண்டுக்குள் மூடப்படுகிறது. தொடர்ந்து பிளிப்கார்ட் இணையதளத்தில் ஊகவணிகங்கள் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிளிப்கார்ட் வெப்சைட்டின் துணை அதிபர் மைக்கேல் அதானி தெரிவித்துள்ளார்.

வரும் கல்வியாண்டிலிருந்து இரண்டாண்டு பி.எட்., எம்.எட். படிப்பு

பி.எட்., எம்.எட். படிப்புக் காலங்களை வரும் கல்வி ஆண்டில் (2015-16) இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவது நிச்சயம் என, தேசியஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மத்திய அரசின் அனுமதியுடனும் இந்தப்புதிய வழிகாட்டுதல் கொண்டு வரப்பட்டுள்ளது; எனவே, எவ்விதமான தடைகள் வந்தாலும்புதிய வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி: 6 ஆண்டாக நியமனத்தில் சிக்கல்: தேர்ச்சி பெற்றவர்கள் தவிப்பு

தமிழகத்தில் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆறு ஆண்டுகளாக பணியில் சேர முடியாமல் தேர்வு எழுதியவர்கள் தவிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.டி.என்.பி.எஸ்.சி., சார்பில் 10.11.2008ல் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை: மத்திய கல்வியியல் கவுன்சில் கடும் எச்சரிக்கை

'தமிழகத்தில், புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை' என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவித்துள்ளது. தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், மூன்று நாள் சர்வதேச மாநாடு, சென்னையில் நேற்று துவங்கியது. பல்கலை, தொழிற்துறை மற்றும் சமூகம் இடையிலான இடைவெளியைக் குறைத்து, கல்வியை மேம்படுத்துவது எப்படி என்ற மையக் கருத்துடன் இந்த மாநாடு நடக்கிறது.

Monday, April 20, 2015

2016 தேர்தல் அதிமுகவிற்கு மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்: ஜேக்டோ மாநில செயலாளர்

ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் 2016ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் மிகப்பெரிய விளைவுகளை அதிமுகவிற்கு ஏற்படுத்தும் என்று ஜேக்டோ மாநில செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கூறினார்.

ரேஷன் கார்டுகளிலும் ஆதார் எண் பதிவு; போலியை ஒழிக்க நடவடிக்கை

ரேஷன் கார்டுகளில், ஆதார் எண் இணைக்கும் பணி துவங்க இருப்பதால், தேவையற்ற பெயர்களை நீக்க வேண்டும். இரு வேறு இடங்களில் ஒரே பெயர் இருந்தால், இரண்டு கார்டுகளும் ரத்தாகும்,' என, குடிமைப்பொருள் வழங்கல்துறை எச்சரித்துள்ளது.

நர்சு பணிக்கு 7,000 பேர் தேர்வு:ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவமனைகளுக்கு, கூடுதலாக நர்சுகள் தேவைப்படும் நிலையில், புதிதாக, 7,243 பேரை சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான, தகுதித் தேர்வு, ஜூன் மாதம் நடக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகளின் இறுதி விசாரணைக்கு இருதரப்பும் தயார்

ஆசிரியர் பணிநியமனங்களில் கடைப்பிடிக்கப்படும் வெய்ட்டேஜ் என்னும் தகுதிகாண் முறை கடைப்பிடிப்பதும் , முண்தேதியிட்டு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வும் தவறு என்று தேர்வர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நில்லையில் இவ்வழக்கு நாளை 21.04.2015 அன்று கோர்ட் எண் 7ல் 5வது வழக்காக இறுதி விசாரணைக்கு வரவுள்ளது என்பதால் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரும், அரசு தரப்பும் ஆஜாராக டெல்லி விரைந்துள்ளனர்.

விடைத்தாள் திருத்தத்துக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் ரத்து, ஒழுங்கு நடவடிக்கை

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்துக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் ரத்து செய்யப்படும்; அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை எச்சரித்துள்ளது.

தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை

மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடப்பு கல்வியாண்டு துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீடு: புதிய திட்டம் நிறுத்தம்!

நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை அறியும் வகையில், எட்டாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டில் புதிய நடைமுறை, முதன்முறையாக கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம், முழுமை பெறாமலேயே, பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

30 புதிய பி.எட். கல்லூரிகள் தொடங்க விண்ணப்பம்: துணைவேந்தர் தகவல்

வரும் 2015-16 கல்வியாண்டில் புதிய ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் தொடங்க 30 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறினார்.
"கல்வி ஆராய்ச்சிக்கும் அதனால் சமூகத்தில் ஏற்படக் கூடிய தாக்கத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைப் போக்கும் வகையில், பல்கலைக்கழகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இடையே

பிளஸ் 2 தேர்வு முடிவுமே 7ல் வெளியாகிறது?

'பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 7ம் தேதி வெளியாகலாம்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பிளஸ் 2 தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.75 லட்சம் மாணவர்கள்எழுதினர். மார்ச், 5ல் துவங்கிய தேர்வு, 31ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தம், மார்ச், 16ல் துவங்கி, நாளையுடன் முடிகிறது. 

சத்துணவு ஊழியர்போராட்டம் தேவையற்றது சொல்கிறார் சங்கத்தலைவர்

“12 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்று கொண்ட பின் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தேவையற்றது,” என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார்.

அரசு பேச்சு நடத்தாவிட்டால் 'ஸ்டிரைக்':'ஜாக்டோ' அறிவிப்பு

'ஆசிரியர் சங்கங்களுடன், அரசு பேச்சு நடத்தாவிட்டால், ஜூன் முதல் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும்' என, 'ஜாக்டோ' அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், 28 சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' கூட்டுக்குழுவை உருவாக்கி உள்ளன. இக்குழு சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லை! தேர்வுகளில் மாணவர்கள் தடுமாற்றம்

தாய்மொழி தமிழ்ப்பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணை எண், 266ல் உள்ள நடைமுறை சிக்கல்களால், பொதுத்தேர்வுகளில் தமிழ் பாடத்தில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, தமிழாசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசலாம்: பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை!!

தகவல் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியால் உலகின் எந்த மூளையில்ஒருவர் இருந்தாலும் அவருடன் தொடர்பு கொண்டு பேசக்கூடிய வாய்ப்பு இப்போது உள்ளது. இணையதளம், செல்போன், இ.மெயில், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். என பல்வேறு தொழில்நுட்பம் மூலம் தகவல்களை படத்துடன் பரிமாறிக்கொள்ளும் நிலை உள்ளது. 

குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் அறிவிப்பு

குரூப் 4 தேர்வு முடிவுகள், அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்றுதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி வேளாண்மை அதிகாரி பணியிடத்தில் காலியாக உள்ள 417 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

ஆசிரியர் டிரான்ஸ்பரில் இடங்களை மறைத்தால் பெரும் ஆர்ப்பாட்டம்! மீனாட்சி சுந்தரம்

ஒளிவு மறைவற்ற கவுன்சலிங் மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாவிட்டால் கவுன்சலிங் நடக்கும் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று தொடக்கப் பள்ளிஆசிரியர் மன்ற செயலாளர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

மே மாதத்தில் 650 தலைமை ஆசிரியர் ஓய்வு: காலியிடங்களை பிடிக்க வசூல் வேட்டைக்கு வாய்ப்பு.

அரசுப் பள்ளிகளில், 650 தலைமை ஆசிரியர்கள், மே மாதத்துடன் ஓய்வு பெற உள்ளனர். அந்த இடங்களை பிடிக்க ஆசிரியர்களிடம் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் சிபாரிசை நாடி வருகின்றனர்.

வரும் 27ம் தேதி அடுத்த கட்ட போராட்டம் சென்னையில் 1 லட்சம் பேர் பேரணி

முழு நேர அரசு ஊழியராக்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கடந்த 15ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கோவையில், புதிதாக மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படுகிறது.

தமிழக அரசின் அரசாணை விவரம்: கோவை, தர்மபுரி, பெரம்பலுாரில், புதிதாக மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்க, கடந்த 2011ல், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் நிறுவனம் சார்பில், அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில், வரும் 2016-17ம் கல்வியாண்டு முதல், மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும், புதிதாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை அமைத்து செயல்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆசிரியர் நலச்சங்கங்களில் வெளிமாவட்ட ஆசிரியர்களின் உரிமை மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.


ஆசிரியர்கள் நலமோடு வாழவும், அவசர தேவைகளுக்கு கடன்பெற்று செலுத்தவும். முக்கிய குறிப்பாக ஆசிரியர் ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்டதே ஆசிரியர் நலச்சங்கம். ஆனால் அதிலும் அரசியல்பூசல்கள் போல் உள் மாவட்ட ஆசிரியர், வெளிமாவட்ட ஆசிரியர் என பாகுபாடு பார்ப்பது மிக கொடுமையானது.

கணக்கு வைத்திருக்கும் வங்கி மட்டுமின்றி எந்த வங்கி ஏடிஎம்மிலும் டெபாசிட்

ஏடிஎம் இயந்திரங்களில் பணம் டெபாசிட் செய்யும் வசதி உள்ளது.பெரும்பாலான வங்கிகள் இந்த வசதியை அறிமுகப்படுத்தி விட்டன. இருப்பினும், எண்ணிக்கையில் இவை குறைவு. இதனால், பணம் டெபாசிட் செய்ய வங்கிக்கு செல்லவேண்டிய அவசியம் இன்னமும் உள்ளது. பணத்தை டெபிட்கார்டு பயன்படுத்தி எந்த வங்கி ஏடிஎம்மிலும் எடுக்கலாம். 

இலவச பாடப்புத்தக வினியோகத்தில் இழுபறி:'ஸ்டாக்' இல்லாமல் ஆசிரியர்கள் அவதி?

இலவச பாடப்புத்தகங்கள் தேவையான அளவுக்கு இருப்பு இல்லாததால்,ஆசிரியர்கள் பாடநுால் கிடங்குகள் மற்றும் பள்ளிகளுக்கு மாறி, மாறி அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனால், புத்தகம் எடுத்து வருவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வுதனித்தேர்வர்களுக்கு விண்ணப்பம்

மே மாதத்தில் நடக்கும் ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வில், பங்கேற்க விரும்பும்தனித்தேர்வர்கள், ஏப்ரல், 22ம் தேதிக்குள், உத்தமசோழபுரத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் நேரடி நியமனத்தை எதிர்த்து வழக்கு

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கான முதுநிலை விரிவுரையாளர் நேரடி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்குமாறு, பள்ளிக் கல்விச் செயலர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கோடையில் பழங்களை ஏன் அதிகம் சாப்பிட வேண்டும்?

இயற்கையின் பின்னணியில் நம் ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பைத் தருவது, காய் - கனிகளே! அதிலும், ருசியையும், உடலுக்குச் சத்துகளையும் தாராளமாகத் தருவது இயற்கையாக விளையும் பழங்களே! ஆனால், ‘நாகரிக உணவுக் கலாசாரம்’ என்ற பெயரில் இயற்கை உணவு வகைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, செயற்கை உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம் உடலை நாமே கெடுத்துக்கொள்கிறோம்.

Saturday, April 18, 2015

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

அனைத்துப் பள்ளிகளிலும் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : ராமதாஸ்

அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

TNTEU Announced B.ed Exam Time Table May-2015

May 8th- Emerging Indian society.
9th- Psychology.
11th- Curriculam development and Innivation.
12th- Elective.
13th- language optional-2.
14th- language optional-1.

தெரிந்து கொள்வோம் நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன் 2G, E , 3G , H ,H+ Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.

1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol. இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும்.
இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.

கோடை விடுமுறையில் குழந்தைகளை பாடம்சாரா சுற்றுலா, உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள்: பெற்றோர்களுக்கு கல்வியாளர்களின் அறிவுரை

கோடை விடுமுறை குழந்தைகளுடைய சுதந்திர காலம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஏப்ரல் வரை தினமும் முழுமையான தூக்க மில்லாமல் அவசரகோலத்தில் எழுந்து பாதிவயிற்றை மட்டுமே நிரப்பிக்கொண்டு பள்ளிக்கூடங் களுக்கு சென்று பாடங்கள், தேர்வு, டியூஷன், வீட்டுப்பாடம் என வீடு முதல் பள்ளிவரை குழந்தைகள் ஓய்வின்றி உள்ளனர்.

மாணவனின் கழுத்தை அறுத்த சக மாணவர்கள்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தொகுதியில் உள்ள தென்னம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சீத்தாம்பட்டியைச் சேர்ந்த மாணவன் முத்தப்பா 6ம் வகுப்பு படித்து வந்தான். இவனுக்கு இலவச பஸ் பாஸ் உள்ளது. இருப்பினும் வீட்டில் உள்ளவர்கள் தினமும் 5 ரூபாய், 10 ரூபாய் கொடுத்து அனுப்புவார்கள்.
இவன் தன்னுடன் படிக்கும் 4 பேருடன் தினமும் தான் வைத்திருக்கும் காசில் ஏதாவது திண்பண்டங்களை வாங்கி சாப்பிடுவான். நாளடைவில் 4 பேரும் நெருங்கி பழகியதால், முத்தப்பாவிடம் வீட்டில் அதிகமாக பணம் கேட்டு வாங்கி வா, இல்லையென்றால் யாருக்கும் தெரியாமல் எடுத்துவர சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.

பிள்ளைகளை பந்தாடுது பெற்றோரின் தற்பெருமை!

கல்வி கற்றால் நல்ல வேலை கிடைக்கும். கார், அபார்ட்மென்ட் வாங்கலாம். வளமாக வாழலாம். இதுதான் கல்வியா? அப்படித்தான் நினைக்கிறது இன்றைய தலைமுறை. கல்வி வணிகப்பொருள் என்ற நிலை வந்து விட்டது. இந்தப் பள்ளியில் முதலீடு செய்தால் பிள்ளைகள் நாளைக்கு நல்ல வேலைக்குப் போய் லாபம் சம்பாதித்துத் தருவார்கள் என்று பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள். படி, கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகு, சம்பாதி, வீடு, கார் வாங்கு, செத்துப்போ என்றே இன்றைய தனியார் பள்ளிகளின் கல்வி போதித்துக் கொண்டிருக்கிறது.

வருமான வரி செலுத்துவோர் தங்களது அனைத்து வங்கி கணக்குகளையும் கட்டாயம் தெரிவிக்க உத்தரவு

2015 - 2016-ம் நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான புதிய விதிகளை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருமானவரி செலுத்துவோர் வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொதுவான பணம் செலுத்தும் இயந்திரம் அறிமுகம் : ரிசர்வ் வங்கி திட்டம்

எந்த வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்தும் வகையில் பொதுவான இயந்திரத்தை அமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. 


வரிசையில் நின்று விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தும் நடைமுறை, தற்போது பெருமளவு குறைந்துவிட்டது. 

தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம் ஆயிரக்கணக்கானோர் கைது

தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.சாலை மறியல் முயற்சிசத்துணவு திட்டத்தில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் நேற்று மறியல் போராட்டம் நடத்தினார்கள். 

மாவட்ட வாரியாக நடக்கிறது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளைதமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதில், 27 ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கின்றன. 

சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசிய கீதம்: ஏழு பள்ளிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் 7 சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த பள்ளிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த என்.செல்வதிருமால் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் ஆசிரியர்களுக்கு தினப்படி வழங்க வேண்டும்

அரசுப் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் ஆசிரியர்களுக்கு தினப்படி வழங்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் புதன்கிழமை திருவள்ளூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆர்.குப்புசாமி தலைமை தாங்கினார்.

சத்துணவு பெண் ஊழியர்களுக்கு போலீஸ் அடிஉதை : மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது

ஊதிய உயர்வு உட்பட 34 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 3வது நாளான நேற்று மறியல் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். தூத்துக்குடியில், பெரியார் சிலை அருகே சத்துணவு ஊழியர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மூலத்துறை அரசுப்பள்ளி மாணவி கட்டுரைப் போட்டியில் முதலிடம்; மாவட்ட ஆட்சியர் வாழ்த்து!!!

Displaying 2.jpgஅனைவருக்கும் கல்வி இயக்கமானது "முழு சுகாதார தமிழகம்" என்ற தலைப்பில் மாவட்டம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளை நடத்தி வருகிறது.பள்ளி,ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் போட்டிகளை நடத்தி முதலிடம் பெறுவோர்க்கு ரொக்கப் பரிசுகளை காசோலைகளாக அளித்து ஊக்குவித்து வருகிறது.இதன் ஒரு கட்டமாக சென்ற மாதத்தில் கோவையில் நடந்த மாவட்ட அளவிலான போட்டிகளின் பரிசளிப்பு விழா நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

கோடையில் பிளஸ் 2 வகுப்புகள் கைவிட ஆசிரியர்கள் கோரிக்கை

பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

தர்மபுரியில் ஏப்ரல் 20ம் தேதி தமிழக அரசை ஈர்க்கும் வகையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

தர்மபுரியில் ஏப்ரல் 20ம் தேதி தமிழக அரசை ஈர்க்கும் வகையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெறயுள்ளது (அனுமதி பெறப்பட்டது). இதில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடத்தை நடைமுறைபடுத்தி B.Ed Computer Science படித்த ஆசிரியர்களை பணியில் அமர்த்த கோரியும் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள +1 மற்றும் +2 கணினி ஆசிரியர் பணி இடங்களை நிரப்பக்கோரியும் தர்மபுரியில் வரும் ஏப்ரல் 20ம் தேதி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.

25% இடஒதுக்கீடு: தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்: இளங்கோவன்

தமிழகத்தில் 25% இடஒதுக்கீட்டு திட்டத்தை செயல்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம் காட்டுவது ஏன்? என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆங்கிலத்தில் தடுமாறும் பி.எட். கல்லூரி மாணவர்கள் - கேம்ப்ரிட்ஜ் மூலம் பயிற்சி

தமிழக பி.எட்., கல்லூரி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசத் தடுமாறுவதால், கேம்பிரிட்ஜ் பல்கலை மூலம் ஆங்கில பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், அரசு, அரசு உதவிபெறும், சிறுபான்மை மற்றும் தனியார் சுயநிதி கல்வியல் கல்லூரிகள் என 658 கல்லூரிகள் செயல்படுகின்றன.

ஜுலையில் நடக்கிறது அண்ணா பல்கலை பொறியியல் கவுன்சிலிங்: துணைவேந்தர்

அண்ணா பல்கலையுடன் இணைந்த பொறியியல் கல்லுாரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே மாதம் வழங்கப்படும்; ஜூலையில் கவுன்சிலிங் நடத்தப்படும் என, அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

கலை, அறிவியல் கல்லுாரிகளில் 19 பாடங்களை அறிமுகம் செய்ய யு.ஜி.சி. முடிவு

தொழிற்கல்வி சார்ந்த விருப்ப பாடத்தேர்வு முறையில், கலை, அறிவியல் கல்லுாரிகளில், 19 பாடங்களை அறிமுகம் செய்ய, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., முடிவு செய்துள்ளது.

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் 20ம் தேதி துவக்கம்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம், வரும் 20ம் தேதி துவங்குகிறது. குழப்பமான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில், மாணவ, மாணவியர் உள்ளனர்.பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, நாளையுடன் பெரும்பாலான இடங்களில் முடிகிறது. 

சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தமிழக அரசு அறிக்கை

பல்வேறு சலுகைகளைப்பெற்ற பின்னரும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் செய்வது தேவையற்றது என்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை குறித்தும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று: அமைச்சர்கள் வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மாநிலத்திலேயே முதலாவதாக ஐ.எஸ்.ஓ. 9001:2008 தரச்சான்று பெற்றுள்ளதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன் ஆகியோர் கல்வித் துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

இது சமமான கல்வியா? சுசித்ரா..

இனி பள்ளிக்குச் செல்லும்போது முதுகில் கூன் விழும்படியாகப் புத்தகப் பொதி மூட்டையைத் தூக்கிச் செல்ல வேண்டியதில்லை. பரிட்சையோ, மதிப்பெண்களோ நீங்கள் யார் என்பதைத் தீர்மானிக்காது. அறிவியல், கணிதப் பாடங்கள் படிப்பதும் ஆடி, பாடி, விளையாடுவதும் ஒரே அளவுகோலில் பார்க்கப்படும்.

சமையல் தொழிலாளர்களுக்கு கிராக்கி:சத்துணவு ஊழியர் 'ஸ்டிரைக்' எதிரொலி

சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால், பள்ளிகளில், 300 ரூபாய், தினக்கூலி அடிப்படையில், சமையலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்; இதனால், சமையல் தொழிலாளர்களுக்கு, திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தம்:தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, சத்துணவு வழங்கும் பணியில், சமையலர், சமையல் உதவியாளர் என, 90 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.

+2 படித்தப்பிறகு தேர்வு செய்ய வேண்டிய கல்வி குழுக்களின் வகைகள்!

1 விஞ்ஞானம்-Natural Sciences
2 புவி அறிவியல் - Earth Sciences
3 கணிதம்-Mathematics
4 பொறியியல் & தொழிநுட்பம்-Engineering & Technology
5 சமூக விஞ்ஞானம்-Social Sciences
6 கலைத்துறை -Humanities
7 வணிகவியல்-Business

8 கலைகள்-Arts and Crafts

மனதை ஒருநிலைப்படுத்தினால் அறிவு திறனை மேம்படுத்தலாம்


நாம் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்றால், எந்தவொரு செயலையும் முழு கவனத்துடன் ஒருங்கிணைந்த மனதுடன் ஈடுபபட வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தும் போது நாம் எடுத்த காரியத்தை சிறப்புடன் முடித்து வெற்றி வாகை சூடலாம்.

Thursday, April 16, 2015

முடிவு செய்யும் முன்...

12ம் வகுப்பு படித்தாயிற்று.... அடுத்து? என்ற கேள்விக்கு நம்முடைய மாணவ, மாணவிகளுக்கு அதிக சாய்ஸ்கள்கூட யோசிக்க தெரிவதில்லை. எம்.பி.பி.எஸ்., பி.இ., பி.எஸ்சி., பி.ஏ., என பாரம்பரிய படிப்புகளை மட்டுமே இன்னமும் கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்கிற பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. நாம் எதைப் பெற வேண்டும், அதை எப்படி ஜெயிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பதோடு மட்டுமல்லாது, பற்று கொண்டால் நாம் எதையும் அடையலாம்.

‘ஒரு மாணவருக்கு, ஒரு மரம்’ திட்டத்தை நிறைவேற்ற உத்தரவு

நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையொட்டி கல்லூரிகளில், அதிக அளவில் மரங்கள் நட உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பசுமைத் தீர்ப்பாயம் சார்பில், பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.,க்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அதில், ஒவ்வொரு கல்லூரியிலும் மரம் வளர்க்கும் திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாடத்திட்டம் கட்டாயம் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

ஏ.ஐ.சி.டி.இ., விதிகளை பின்பற்றாத பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கல்

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிகளை பின்பற்றாத பொறியியல் கல்லூரிகளின் இணைப்பை நிறுத்தி வைக்க, அண்ணா பல்கலை திட்டமிட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் அதிகாரிகள் உடந்தையுடன் முறையில்லாமல் நடக்கும் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் அதிகாரிகள் உடந்தையுடன் முறையில்லாமல் நடக்கும் பணியிட மாற்றம்-தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகளால் மன உளைச்சலை ஏற்படுத்தும் சம்பவமும், அதனால் அரசு ஊழியர்கள் தற்கொலை செய்வது அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

காதல் வலையில் சிக்கும் பள்ளி மாணவியர் :தேர்வு முடிந்ததும் வீட்டை விட்டு ஓடுவது அதிகரிப்பு

பள்ளி பொதுத் தேர்வு முடிந்துள்ள நிலையில், காதல் வலையில் சிக்கி, வீட்டை விட்டு ஓடும் மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 25 மாணவியர் மாயமாகி உள்ளனர்.

விபத்தில் சிக்கும் மாணவர்களை காக்க ரத்த பிரிவுடன் பஸ் பாஸ்,ஐ.டி., கார்டு

அரசு பள்ளிகள் மாணவ, மாணவியரின், 'பஸ் பாஸ்'களில் ரத்தப் பிரிவைக் குறிப்பிடும் திட்டம், வரும் கல்வியாண்டில் அறிமுகமாகிறது. வாகன மற்றும் பள்ளி விபத்துகளில் சிக்கும் மாணவர்களுக்கு உடனடி சிகிச்சை தரும் வகையில், இத்திட்டம் அமலாகிறது.

வாட்டர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம் -ஒரு வாட்டர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்?

பிளாஸ்டிக்கில் நிறைய வகைகள் இருக்கின்றன. ‘பெட் பாட்டில்’களைத்தான் தண்ணீர் குடிக்கப் பயன்படுத்துகிறோம். நெகிழும் தன்மை கொண்ட பாட்டில்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் தன்மை கொண்டவை. தொடர்ந்து பயன்படுத்துவது நல்லதல்ல.

சி.பி.எஸ்.இ., 1ம் வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயம்: புத்தகம், ஆசிரியர்கள் இன்றி பள்ளிகள் மெத்தனம்

தமிழகத்தில், மத்திய பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ., அடிப்படையில் செயல்படும் பள்ளிகளில், தமிழ் பாடம் கட்டாயமாகும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், தமிழ் ஆசிரியர் இல்லாததால், தமிழை தனியாக, 'டியூஷனில்' படிக்க அறிவுறுத்துவதாக, புகார் எழுந்துள்ளது.

ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு: நுழைவுத் தேர்வு அறிவிப்பு

ஒருங்கிணைந்த 4 ஆண்டுகள் பி.எஸ்ஸி., பி.எட்., பி.ஏ.,பி.எட். படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 7-ஆம் தேதி இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

காதல் வலையில் சிக்கும் பள்ளி மாணவியர் :தேர்வு முடிந்ததும் வீட்டை விட்டு ஓடுவது அதிகரிப்பு

பள்ளி பொதுத் தேர்வு முடிந்துள்ள நிலையில், காதல் வலையில் சிக்கி, வீட்டை விட்டு ஓடும் மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 25 மாணவியர் மாயமாகி உள்ளனர்.

பூட்டை உடைத்து, பொருட்களை எடுத்து சத்துணவு சமையல்: போராட்டத்தை முறியடிக்க அரசு தீவிரம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினரின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க, அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், நேற்று முதல், காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளது. இப்போராட்டத்தை சமாளிக்க, அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சத்துணவு ஊழியர் போராட்டம்: பாதிப்பில்லை; அமைச்சர்

''சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தால் பாதிப்பு இல்லை,'' என, அமைச்சர் வளர்மதி தெரிவித்தார். மதுரையில் சத்துணவு மையங்களை ஆய்வு செய்த பின், அவர் கூறியதாவது: சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக ஏற்கனவே பேச்சு நடத்தப்பட்டது. இதில், 12 கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன.

தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு

சத்துணவு பணியாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், 'பள்ளி சத்துணவை, தலைமை ஆசிரியர், சாப்பிட்டு பார்த்த பின்பே, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்' என, கண்டிப்பான உத்தரவிடப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை

jäœehL muR¤ nj®Î¤Jiw

jå¤nj®t®fS¡fhd v£lh« tF¥ò bghJ¤nj®Î, nk  2015

nj®é‰fhd fhy m£ltiz

ehŸ
»Hik
neu«
ghl«

11.05.2015
§fŸ
fhiy 10.00 kâ Kjš
            12.00 kâ tiu

jäœ
13.05.2015
òj‹
fhiy 10.00 kâ Kjš
            12.00 kâ tiu