Pages

Saturday, April 25, 2015

மாணவர் சேர்க்கைக்கு கல்லூரிகள் இணையதள மதிப்பெண் நகலை பெறலாம்

இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் மதிப்பெண் நகல்களை பயன்படுத்தி, மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம்' என, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கை யில் கல்லூரிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா கூறியிருப்பதாவது:


பாடங்களுக்கென விதிக்கப்பட்டுள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். இட ஒதுக்கீடு முறையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஒரே விண்ணப்பத்தில் வேறு பாடங்களுக்கு விண்ணப்பிக்கும் அட்டவணை, கட்டாயம் இடம்பெற வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியான, 10 நாட்களுக்குள், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் நகல்களை கொண்டு, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை தர பட்டியல், 14 நாட்களுக்குள் அறிவிப்பு பலகையில் இடம் பெற வேண்டும். வரும் ஜூலை 1ம் தேதி நிலவரப்படி, 21 வயது நிரம்பியவர்கள் மட்டுமே இளங்கலை படிப்புக்கு தகுதியானவர்கள்.

உரிய வயது வரம்பு தகுதியை பின்பற்றாத கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலியான சான்றிதழ்கள் கண்டறியப்பட்டால், மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.