Pages

Tuesday, April 21, 2015

அரசு ஊழியர்களுக்கு அகிலேஷ் அரசு தாராளம்: 6 மாதம் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி

உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வருடத்தில் 6 மாதங்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் எனவும் அரசு ஊழியர்களுக்கு தாராளம் காட்டி உள்ளது.


உத்திரபிரதேச மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் அரசு விடுமுறை நாட்கள் வருடத்தில் 35 நாட்கள் முன்னர் இருந்தது. நேற்று அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவில் முன்னாள் பிரதமர்களான சரண்சிங், சந்திரசேகர், மற்றும் பீகார் முன்னள் முதல்வர் கர்பூரி தாக்கூர் ஆகியோரின் பிறந்த நாட்களை அரசு விடுமுறையாக அறிவித்து உத்தரவிட்டது. இதன் மூலம் அரசு விடுமுறை நாட்கள் எண்ணிக்கை 35 லிருந்து 38 ஆக உயர்ந்துள்ளது.மேலும் அரசு ஊழியர்கள் வருடத்தில் மொத்தம் 6 மாதங்கள் பணியாற்றினால் போதும் எஞ்சிய 6 மாதங்களை விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன் முதல்வராக பதவி வகித்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, தனது கட்சியின் நிறுவனரான கன்சிராம் பிறந்த நாள் உள்ளிட்ட தனது கட்சியின் மூத்த தலைவர்களின் பிறந்த நாளினை அரசு விடுறையாக அறிவித்தார். 
அதே போன்ற ஒரு விடுமுறை அரசியல் கொள்கையை அகிலேஷ் அரசும் பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. இம்மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி அரசு ஊழியர்களின் ஓட்டு வங்கியை குறி வைத்து இப்படி தாராளம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

மற்ற மாநிலங்களான தமிழகம், மத்திய பிரததேசத்தில் தான் அதிகபட்சமாக அரசு விடுமுறை நாட்கள் 25 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உ..பி.யில் அரசு விடுமுறை நாட்கள் 38 ஆக உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.