Pages

Monday, April 20, 2015

தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை

மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடப்பு கல்வியாண்டு துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் 2012 வரையிலும், முதுகலை ஆசிரியர்கள் 2009 வரையிலான ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது. இதற்கான விபரங்களை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே சேகரித்து அனுப்பியது.

இப்பதவி உயர்வு பட்டியலில் குளறுபடிகளை தவிர்க்க, இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொண்டு மீண்டும் பதவி உயர்வு பட்டியல் ஒன்றை அனுப்பி வைக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக விடுபட்ட விபரங்களை நேரில் வரவழைத்து கல்வித்துறை ஊழியர்கள் சேகரிக்கின்றனர்.

அதிகாரி ஒருவர் கூறுகையில், "நடப்பு கல்வியாண்டில் ஜூனில் பள்ளிகள் திறக்கும் நிலையில், மே மாத இறுதிக்குள் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, காலி பணியிடங்கள் நிரப்பும் திட்டம் உள்ளது. இதற்கான கவுன்சிலிங் 2015 மே இறுதியில் நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.