Pages

Thursday, April 30, 2015

வேளாண் கல்லூரிகளில் சேர மே 15முதல் விண்ணப்பம்


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளங்கலை படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 15ம் தேதி முதல் இணையதளம் மூலம் வினியோகிக்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் 13 வகையான பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது.
உறுப்பு கல்லூரியில் 1,220 இடங்கள், இணைப்பு கல்லூரியில் 1,080 இடங்கள் என மொத்தம் 2,300 இடங்கள் நிரப்பப்படவுள்ளது.


இதில், 50% இடங்கள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தாலும், 50 சதவீத இடங்கள் அந்தந்த கல்லூரிகளாலும் நிரப்பப்படுகிறது. இப்பாடத்தில் மேல்நிலைப்பள்ளி கல்வி அல்லது அதற்கு இணையான கல்வி பிரிவில் பொது கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை www.tnau.ac.in/admission.html என்ற இணையதளத்தில் சென்று பூர்த்தி செய்ய வேண்டும்.

13 பட்டப்படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானது. பொது பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.600ம், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.300ம் ஆகும். இணையதளம், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி செலுத்தலாம் அல்லது பதிவிறக்கம் செய்யப்பட்ட சலானை எந்தவொரு ஸ்டேட் வங்கி கிளைகளிலும் செலுத்தலாம். வேளாண் பல்கலைக்கழகத்தின் மையங்களிலும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணையதளத்தின் மூலமாக மே 15 முதல் ஜூன் 13 வரை விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க ஜூன் 13ம் தேதி கடைசி என்றும், தரவரிசை பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும் எனவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.