Pages

Friday, April 17, 2015

மூலத்துறை அரசுப்பள்ளி மாணவி கட்டுரைப் போட்டியில் முதலிடம்; மாவட்ட ஆட்சியர் வாழ்த்து!!!

Displaying 2.jpgஅனைவருக்கும் கல்வி இயக்கமானது "முழு சுகாதார தமிழகம்" என்ற தலைப்பில் மாவட்டம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளை நடத்தி வருகிறது.பள்ளி,ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் போட்டிகளை நடத்தி முதலிடம் பெறுவோர்க்கு ரொக்கப் பரிசுகளை காசோலைகளாக அளித்து ஊக்குவித்து வருகிறது.இதன் ஒரு கட்டமாக சென்ற மாதத்தில் கோவையில் நடந்த மாவட்ட அளவிலான போட்டிகளின் பரிசளிப்பு விழா நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.


இதில்  கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு மேட்டுப்பாளையம் அருகிலுள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி ந.ர.காவ்யா முதலிடம் பிடித்தார்.முதலிடம் பிடித்த மாணவியை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் அவர்கள் வாழ்த்தி ரூபாய் ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.பரிசு பெற்ற மாணவியை காரமடை உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள்  தன்னாசி மற்றும் புல்லாணி, பள்ளி தலைமையாசிரியை பத்திரம்மாள் மற்றும் சக ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.