Pages

Friday, April 24, 2015

பள்ளி வேலை நாட்களை 200 ஆக குறைக்க தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்.

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, துவக்கப்பள்ளி வேலை நாள், 220 என்பதை, 200 நாட்களாக குறைத்து அரசு ஆணை வெளியிட வேண்டும்' என, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், வட்டார செயற்குழு கூட்டம், நாமக்கல் அடுத்த எருமப்பட்டி யூனியன், கொடிக்கால்புதூர் ஊராட்சி துவக்கப்பள்ளியில் நடந்தது.வட்டாரத் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் ராமராசு வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் கருப்பன், பொதுக்குழு உறுப்பினர்செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தமிழகம் முழுவதும்உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டு விழா கொண்டாடுவதற்காக, அனைவருக்கும்கல்வி இயக்கம், 2,250 ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அதேபோல், துவக்கப்பள்ளிகளுக்கும் ஆண்டு விழா கொண்டாட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதுடன், 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். ஒன்றியங்கள் தோறும் ஆசிரியர் குடியிருப்புகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் ஆண்டுக்கு, இரண்டு முறை தொழில் வரி கட்டும் முறையை ரத்து செய்ய வேண்டும்.
நவீன கற்பித்தல் முறையை வகுப்பறையில் மேற்கொள்ளும் வகையில், அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, துவக்கப்பள்ளி வேலை நாள், 220 என்பதை, 200 நாட்களாக குறைத்து அரசு ஆணை வெளியிட வேண்டும்.குறுவள மையம் மற்றும் வட்டாரவள மையத்தில் பயிற்சிகளை வழங்குவதை தவிர்த்து, அந்தந்த பள்ளியில் நேரடியாக பயிற்சி வழங்க அனைவருக்கும் கல்வி இயக்கம் முன்வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.வட்டார பொருளாளர் சேகர், நிர்வாகிகள் அருண்குமார், ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.