பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு பதிவதற்கான நோடல் (சேவை) மையத்தை, திருத்தணி பகுதியில் கூடுதலாக துவக்க வேண்டும் என, விண்ணப்பதாரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரசு பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்காக இணையத்தில் பதிவதற்கான திருவள்ளூர் மாவட்டத்தில், ஆறு இடங்களில் சேவை மையம் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூரில் இரண்டு, பொன்னேரி, பூந்தமல்லி, அம்பத்துார், செங்குன்றத்தில், தலா ஒன்று என, ஆறு இடங்களில் கடந்த 24ம் தேதி முதல், விண்ணப்பதாரர்கள், வெப் கேமரா மூலம் புகைப்படத்துடன், விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
வரும் 6ம் தேதி வரை இப்பதிவு நடைபெறும் என்பதால், பள்ளிப்பட்டு, திருத்தணி பகுதிகளைச் சேர்ந்தவர்கள், 80 கி.மீ., துாரம் பயணம் செய்து, திருவள்ளூர் மற்றும் மணவாள நகரில் உள்ள சேவை மையங்களுக்கு வருகின்றனர்.
இதனால், சேவை மையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும், வீண் அலைச்சலும், கால விரயமும் ஏற்படுகிறது. எனவே, திருத்தணி பகுதியில், கூடுதலாக சேவை மையம் அமைக்க வேண்டும் என, விண்ணப்பதாரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.