Pages

Thursday, April 30, 2015

வங்கி நடைமுறைகள் எப்படி? சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம்.

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவ மாணவியர் வங்கி நடைமுறைகள் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றனர்.

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவ மாணவியர்க்கு வங்கி தொடர்பான நடைமுறைகள் அறிந்து கொள்ள தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் ஏற்பாடு செய்தார்.


தேவகோட்டை பாரத் ஸ்டேட் வங்கி கிளை முதன்மை மேலாளர் இன்பசேகரன் சம்மதம் தெரிவித்தார்.

மாணவர்கள் பள்ளியிலிருந்து வங்கிக்கு சுற்றுலாவிற்கு பயணிப்பது போல் உற்சாகத்துடன் அனைவரும் சென்றனர்.பாரத ஸ்டேட் வங்கி வணிக பிரிவு மேலாளர் சேர்மகனி அனைவரையும் வரவேற்றார்.வங்கி உதவியாளர் முருகன் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.

வங்கியின் செயல்பாடுகள் என்ன,என்ன என்பது குறித்து விளக்கப்பட்டது.

வங்கியில் பொதுமக்கள் பயன்பாடும்,பொதுமக்களுக்கு வங்கியின் சேவை குறித்தும் எடுத்து கூறினார்.வங்கியில் அமைந்து உள்ள ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியே மாணவர்களை அழைத்து சென்று விளக்கம் அளித்தார்.பணம் செலுத்தும் படிவம்,பணம் எடுக்கும் படிவம்,காசோலை எடுக்கும் படிவம்,நகை கடன் செலுத்துவது எப்படி? செலுத்திய பணத்தை எடுப்பது எப்படி? ஏ டி எம் இயந்திரத்தினை பயன்படுத்துவது எப்படி? என்பதை செய்து காண்பித்து விளக்கமாக எடுத்து கூறினார்.

பணம் செலுத்தும் கவுன்ட்டர் ,உதவியின்றி ஏ டி எம் அறையிலியே 24 மணி நேரமும் நம் கணக்கில் பணம் செலுத்துவது எப்படி என்றும் செய்து காண்பித்தார்.வங்கியில் கல்விக்கடன்,விவசாய கடன் ,தனிநபர் கடன்,வியாபார கடன்,ஆடம்பர பொருள்களுக்கு வாங்க  வழங்கும் கடன் மற்றும் நகை கடன் இவைகளை எவ்வாறு பெறுவது என்பதையும், அதற்கு நாம் தயார்செய்து கொடுக்க வேண்டிய ஆவணங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார்.பணம் செலுத்தும்போதும் ,எடுக்கும்போதும் பாஸ் புக்கை  பயன்படுத்துவது எப்படி என்றும் எடுத்து கூறினார்.பணம் என்னும் மெசினை காண்பித்து அதனில் எவ்வாறு பணம் எண்ணுகிறார்கள் என்பதயும் செய்து காண்பித்தார்கள்.மாணவி சொர்ணம்பிகா,மங்கையர்க்கரசி ,மாணவர்கள்  மணிகண்டன்,ராம்குமார்  ஆகியோர் படிவங்கள் பூர்த்தி செய்வது தொடர்பாக கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.சில மணி நேரங்கள் மாணவ,மாணவியர் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர்.மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆசிரியை செல்வமீனாள் மற்றும் முத்துலெட்சுமி   செய்திருந்தார்கள்.நிறைவாக பள்ளியின் சார்பாக மாணவி சினேகபிரியா  நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.