Pages

Sunday, April 19, 2015

ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வுதனித்தேர்வர்களுக்கு விண்ணப்பம்

மே மாதத்தில் நடக்கும் ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வில், பங்கேற்க விரும்பும்தனித்தேர்வர்கள், ஏப்ரல், 22ம் தேதிக்குள், உத்தமசோழபுரத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில், தொடக்கக்கல்வி ஆசிரியர் பணியிடத்துக்கான ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிப்பு, இரண்டாண்டு கல்வியாக வழங்கப்படுகிறது. அரசு, உதவி பெறும் மற்றும் சுயநிதி பயிற்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது.இதில் தேர்ச்சி பெற தவறிய பாடங்களை, தனித்தேர்வராக, அடுத்தஆண்டு பொதுத்தேர்வில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த கல்வியாண்டில், மே, 18ம் தேதி, ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வுகள் துவங்குகின்றன. இதில், பங்கேற்கும் தனித்தேர்வர்கள், அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களைநேரில் அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில் உள்ள தனித்தேர்வர்கள், தேர்வுத்துறை இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, பூர்த்தி செய்து, கடந்த ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் நகலையும் இணைத்து, உத்தமசோழபுரத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை அணுக வேண்டும்.அங்கு அமைக்கப்பட்டுள்ள வெப்கேமரா மூலம், ஃபோட்டோ எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், ஃபோட்டோவுடன் கூடிய விண்ணப்பத்தை, அங்கேயே, தனித்தேர்வர்கள் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். தேர்வுக்கட்டணத்தையும்,அங்கேயே செலுத்திக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஏப்ரல்,22ம் தேதி, மாலை, 5 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தபாலில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.