Pages

Monday, April 20, 2015

கோவையில், புதிதாக மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படுகிறது.

தமிழக அரசின் அரசாணை விவரம்: கோவை, தர்மபுரி, பெரம்பலுாரில், புதிதாக மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்க, கடந்த 2011ல், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் நிறுவனம் சார்பில், அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில், வரும் 2016-17ம் கல்வியாண்டு முதல், மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும், புதிதாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை அமைத்து செயல்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.


மற்ற ஆசிரியர் பயற்சி நிறுவனங்களைப் போன்று, அனைத்து பாடப்பிரிவுகளுடன் கூடிய முதலாமாண்டு வகுப்பு துவக்கப்படும். வரும் 2016-17 கல்வியாண்டு துவங்கியபின், மத்திய மற்றும் மாநில அரசின், 75 மற்றும் 25 சதவீத நிதி ஒதுக்கீடு முறை, இந்நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

உடுமலை, திருமூர்த்திநகரிலுள்ள மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் திருஞானசம்பந்தன் கூறுகையில்,''கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு விரைவில் வழங்கப்படும் வாய்ப்புள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.