Pages

Thursday, April 30, 2015

தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்தேர்வு வாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.) சமீபத்தில் நர்ஸ் பணிக்கு 7 ஆயிரத்து 243 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு


தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்தேர்வு வாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.) சமீபத்தில் நர்ஸ் பணிக்கு 7 ஆயிரத்து 243 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் 6 ஆயிரத்து 792 இடங்கள் பெண் விண்ணப்பதாரர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த பணிகளுக்கு 1-7-15 தேதியில் 58 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜெனரல் நர்ஸ் (ஆண், பெண்) 3 ஆண்டு படிப்பு படித்தவர்கள், நர்சிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் தமிழ்நாடு நர்சஸ் மற்றும் மிட்வைவ்ஸ் கவுன்சிலில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். எஸ்.சி.,எஸ்.சி.-ஏ, எஸ்.டி. பிரிவினர் ரூ.300-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விரிவான விவரங்களை   www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு,  11-5-15-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.