Pages

Monday, April 27, 2015

கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியல் விவகாரம்: பள்ளிக் கல்வித்துறைக்கு நோட்டீஸ்


கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வி தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 652 கணினி ஆசிரியர் பணியிடங்ளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டதாகவும், ஆனால் தேர்வானவர்கள் பட்டியலில் தமது பெயர் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.652 பணியிடங்களில் 130 பணியிடங்கள் இடஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்படும் என அறிவித்துவிட்டு, 154 பணியிடங்களை இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பியுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, நீதிபதி வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலாளர், ஆசிரியர்தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும், கணினி ஆசிரியருக்கான பணி நியமனங்கள் இந்த வழக்கின்தீர்ப்பை பொறுத்தே அமையும்
 எனவும் அறிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.