Pages

Thursday, April 30, 2015

பொறியியல் படிக்க விரும்புபவர்களுக்கு அண்ணா பல்கலையின் அறிவுறுத்தல்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள், இருப்பிடச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறு, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.


அண்ணா பல்கலை கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம், மே, 6ம் தேதி முதல், 29ம் தேதி வரை அண்ணா பல்கலை மையத்திலும், மே, 27ம் தேதி வரை, மற்ற, 59 மையங்களிலும் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு முடிவு வரும் முன், தேவையான சான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறு, அண்ணா பல்கலை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தை இருப்பிடமாகக் கொண்ட மாணவர்கள், எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஏதாவது ஒரு வகுப்பில் தமிழகத்தில் படிக்காமல் இருந்தால், அவர்கள் தமிழக வசிப்பிடச் சான்றிதழ் ஆன் - லைன் நகல் வைத்திருக்க வேண்டும். இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த முதல் தலைமுறைப் பட்டதாரியாக இருந்தால், அதற்கான சான்றிதழும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு, சுதந்திரப் போராட்ட வீரரின் வாரிசு, உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், செவித்திறன் குறைவு போன்ற முன்னுரிமை கேட்கும் மாணவர்கள், அதற்கான சான்றிதழ்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.