Pages

Thursday, April 30, 2015

காந்திகிராம பல்கலைக்கு இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

காந்திகிராம பல்கலையில் 2015-16 கல்வியாண்டிற்கு ’ஆன்-லைனில்’ விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இந்தமுறையை பல்கலையில் துணைவேந்தர் நடராஜன் நேற்று துவக்கி வைத்து பேசியதாவது: ’ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் முறை ஒருசில மத்திய பல்கலைகளில் மட்டுமே உள்ளது. தற்போது காந்திகிராம பல்கலையில் அறிமுகம் செய்யப்படுகிறது. அனைத்து பாடங்களுக்கும் ’ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் www.ruraluniv.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளன. வழிகாட்டு நெறிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

நேரில் வருவோர் விண்ணப்பிக்க பல்கலை கம்ப்யூட்டர் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்.பி.ஏ.,- எம்.எட்., போன்ற முதுகலை பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ’ஆன்-லைன்’ மூலம் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் அலைச்சல், பண விரையம் தவிர்க்கப்படும். கூடுதல் தகவல் பெற விரும்புவோர் 0451 -2452372 ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.  பதிவாளர் பாலசுப்ரமணியன் உடனிருந்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.