Pages

Friday, April 24, 2015

உலகிலேயே மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடு சுவிட்சர்லாந்து!


உலகிலேயே மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடு சுவிட்சர்லாந்து என்ற பெருமையை பெற்றுள்ளதாக   ஆய்வில் தெரியவந்துள்ளது.


உலகில் மொத்தம் உள்ள 158 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் சுவிட்சர்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த இடங்களை ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே மற்றும் கனடா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் மக்கள் வாழ் நாள் முழுக்க மகிழ்ச்சியாக உள்ளதாகத்  தெரிய வந்துள்ளது.

நிலையான அபிவிருத்தி தீர்வு அமைப்பு நடத்திய இந்த ஆய்வில் டோகோ, புருன்டி, சிரியா, பெனின் மற்றும் ருவாண்டா ஆகிய நாட்டு மக்கள் நிம்மதியைத் தொலைத்து மகிழ்ச்சியற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக தெரிய அவ்ந்துள்ளது.

 பணம் மட்டுமே மகிழ்ச்சியைத்  தந்துவிடாது. நேர்மை, பெருந்தன்மை, நம்பிக்கை மற்றும் நல்ல சுகாதாரம் வாழ்க்கைமுறை ஆகியவற்றை அடிப்படையாகக்  கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தற்போதைய   மனிதர்கள்  எப்படி வாழ்கிறார்கள் என்பதற்கான ஆதாரத்தை இந்த ஆய்வு வழங்கியுள்ளது.

மேலும் உலகில் ஆண்களை விட பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும், வயதானவர்களை விட இளைஞர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.பொருளாதார நிலையில் மிகவும் சிக்கலான நிலையில் இருக்கும் கிரீஸ் நாடு இப்பட்டியலில் கடும் சரிவைச்  சந்தித்துள்ளது.



அதே போல் அரசியல் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை காரணமாக எகிப்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் சரிவை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் இந்தியா 117 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.அதே நேரத்தில் பாகிஸ்தான் 81 ஆவது இடத்தையும் வங்கதேசம் 109 ஆவது இடத்தையும் பிடித்து இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ளன.

தொடர்ந்து போர் நடந்து வரும் ஈராக்,சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளும் இந்தியாவை விட முன்னணியில் உள்ளதாகவும் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.