Pages

"மாணவர்கள் மத்தியில் சேவை செய்யும் உணர்வு மேலோங்க வேண்டும்"

"மாணவர்கள் மத்தியில், சேவை செய்யும் உணர்வு மேலோங்க வேண்டும்" என, அறிவுறுத்தப்பட்டது. அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., திட்டத்தின் சார்பில், மஞ்சுதளா கிராமத்தில், ஏழு நாள் சிறப்பு முகாம் நடந்தது.

அங்கன்வாடி ஊழியர்கள் நியமன விசாரணை பெஞ்ச்சிற்கு மாற்றம்

தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தனி நீதிபதி தடை விதித்துள்ள நிலையில், விசாரணையை பெஞ்ச்சிற்கு மாற்றி உத்தரவிட்டார்.

பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் தலைமையில் போராட்டம்

அனைவருக்கும் கல்வி இயக்க திருப்புல்லாணி வட்டார வளமைய பட்டதாரி ஆசிரியை தமிழ்மலர். இவர் கடந்த வாரம் 3 நாள் தற்செயல் விடுப்பு எடுத்தார். விடுப்பு மறுக்கப்பட்டநிலையில், 2 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருந்தது.

மாணவர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு - தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

பள்ளி மாணவர்களிடம் டெங்கு நோய் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவியதையடுத்து, நோய் தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. மாணவர்கள் மத்தியில் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

"சிந்துவெளி நாகரிக வீழ்ச்சிக்குப் பின் அதன் மக்கள் தென்னிந்தியாவில் குடியேறி இருக்கலாம்"

"சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சிக்குப் பின், அங்கிருந்த மக்கள், தென்னிந்தியாவில் குடியேறி இருக்கலாம்" என, தொல்லியல் துறை மண்டல இயக்குனர் தயாளன் தெரிவித்தார்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சிக்கல்; ஆசிரியர் பயிற்றுனர்கள் அதிருப்தி

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் தொடரும் சிக்கல்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்க நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆசிரியர் பயிற்றுனர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

927 ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் காலி

தமிழக பள்ளிகளில், காலியாக உள்ள, ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசு பள்ளியில், கல்வி பயிலும் மாணவர்களின், கலை மற்றும் கற்பனை திறனை ஊக்கப்படுத்த, ஓவியம், இசை, தையல், எம்ப்ராய்டரி, கலைநுட்பம் சார்ந்த பாடப்பிரிவுகள், தமிழக பள்ளிகளில் துவக்கப்பட்டன. 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஓவிய வகுப்பு நடக்கிறது.தமிழகத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் என்ற பெயரில், ஓவிய ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளிகளில் உள்ள, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

புதைந்த பள்ளி கட்டடம்; பள்ளிக் கல்வி செயலர் சபீதா விசாரணை

மதுரை அரும்பனுார் அரசு நடுநிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.ஏ., திட்டம் சார்பில் ரூ.9.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறை ஒருபகுதி பூமிக்குள் புதைந்தது தொடர்பாக கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பார்வதி, இன்ஜினியர் ரவிசங்கர் ஆகியோரிடம் பள்ளிக் கல்வி செயலர் சபீதா விசாரணை நடத்தினார்.

'பயோமெட்ரிக் அட்டன்டன்ஸ்':மத்திய அரசு உத்தரவு

'மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும், 'பயோமெட்ரிக் அட்டன்டன்ஸ்' முறையில் வருகைப் பதிவை பராமரிக்க வேண்டும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீருடையுடன் போதையில் மயங்கிக் கிடந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கம்

கரூர் பேருந்து நிலையத்தில் ஜன. 27-ம் தேதி பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் போதையில் மயங்கிகிடந்த மாணவர் பள்ளியில் இருந்து நேற்று நீக்கப்பட்டார்.

கல்விமுறை செல்ல வேண்டிய திசை எது?

‘அடிப்படைக் கல்வி மறுக்கப்படுவதுதான் மக்களிடையே பாது காப்பற்ற நிலையை ஏற்படுத்துகிறது’ என்று பொருளியல் அறிஞர் அமர்த்திய சென் கூறுவது சாதாரணமான விஷயமல்ல. 2014-ம் ஆண்டுக்கான இந்தியக் கல்வித் தரத்தின் ஆய்வறிக்கையை (ஏ.எஸ்.ஈ.ஆர்.) அந்தப் பின்னணியில் பொருத்திப் பார்த்தால் பல உண்மைகள் புரியவரும். கல்வி கற்றுத்தருவது தொடர்பான கருதுகோள்களும் நடைமுறைகளும் எந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்பதை அறிக்கை உணர்த்துகிறது.

பிளஸ் 2 தேர்வுக்கு பிப்., 5 முதல் 7 வரை தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை

பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், பிப்., 5 முதல் 7ம் தேதி வரை, தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மார்ச் 2015ல், பிளஸ் 2 தேர்வு எழுத, தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில், ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டமான தத்கல் திட்டத்தின் கீழ், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை.


சைபர் உலகத்துக்குள் நேரடியாக காலடி எடுத்து வைக்கும் விதமாக இந்திய தபால் துறை விரைவில் பிளிப்கார்ட், அமேசான் வர்த்தக இணையதளங்களை போல புதிய ஆன்லைன் வர்த்தக வெப்சைட்டை களமிறக்க உள்ளது.உலகிலேயே மிகப்பெரிய போஸ்டல் சர்வீஸ் நமது இந்திய தபால் துறைதான். 

“10ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்”: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து அறிவிப்பு


தேர்வுகள் மூலம், 2015- 16 ஆம் ஆண்டில் 10ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பொறுப்பு தலைவர் பால சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துதல் தொடர்பான நிகழ்ச்சி

தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு, மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துதல் தொடர்பான நிகழ்ச்சி நடந்தது.

மாணவிகள், ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு - தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு உயர்வு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் - கோர்ட் அவமதிப்பு வழக்கில்பள்ளிக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ்

எம்.ஏ.,-எம்.எட்.,முடித்த ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றாததால் அவமதிப்பு வழக்கில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.

அடிப்படை கல்வி உரிமை பிரசாரம்தமிழகத்தில் மீண்டும் துவக்க உத்தரவு

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அடிப்படைக் கல்வி உரிமை விழிப்புணர்வு பிரசாரத்தை, மீண்டும் துவக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. 'ஐந்து வயது குழந்தைகளை நிபந்தனையின்றி, பள்ளிகளில் சேர்க்க வேண்டும்; மாணவர்களை உடல், மனதளவில் தொந்தரவு செய்யக் கூடாது;

பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கு புதிய விதிகள்: தேசிய கவுன்சிலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

பி.எட்., எம்.எட். படிப்புகளின் புதிய விதிமுறைகளை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்குப் பதில் அளிக்குமாறு, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் மேலாண்மை சங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

அரசு பணியை எதிர்பார்க்கும் அறிவொளி ஊழியர்கள்:19 ஆண்டுகளாக பணிபுரிந்தவர்கள்

தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்ற செயல்படுத்தப்பட்ட அறிவொளி இயக்கத்தில் 19 ஆண்டுகளாக பணிபுரிந்தவர்கள், அரசு பணியை எதிர்பார்த்துள்ளனர்.

ஆண்கள் பள்ளி - பெண்கள் பள்ளி என பாலின அடிப்படையில் பிரித்து கல்வி அளிக்கும் முறை சரியா?

சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பள்ளிகள் இருபால் மாணவரும் படிக்கும் இடமாக இருந்தது .மாணவ ,மாணவியரிடம் இருவருக்கும் ஈர்ப்பு சாதாரணமாக பார்க்கப்பட்டது .தினம் தினம் பார்த்து பழகி போவதால் ஆண்கள் மீது மிகப்பெரிய அளவில் பெண் பிள்ளைகள் ஆர்வம் காட்டுவதில்லை .இது போலவே தான் ஆண் பிள்ளைகளும் !

பிரதமர் மோடி சரளமாக ஆங்கிலம் பேசும் இரகசியம் வெளியீடு!!!

பொதுமேடைகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆங்கில சொற்பொழிவாற்ற அதிநவீன வகை ‘டெலிபிராம்ப்டர்’ உதவியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
பொது மேடைகளில் இந்தி மொழியில் சரளமாக தனக்கே உரித்தான பாணியில் பேசுவதில் பிரதமர் மோடி மிகவும் பிரபலமாக உள்ளார் . இவர் கடந்த ஆகஸ்ட் 15-ல் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய பின், கைகளில் எந்தக் குறிப்புகளும் இன்றி, இந்தியில் அளித்த ஆவேசமான உரை பலரையும் பிரமிக்க வைத்தது.

பிளஸ் 2 தேர்வு தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மார்ச் மாதம் நடக்க உள்ள பிளஸ் 2 தேர்வு எழுதுவோருக்கு அளிக்கப்பட்ட கடைசி நாளில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் அனுமதிச் சீட்டுகளை பிப்.2 முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பிப்ரவரி 2 முதல் 4-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

டி.ஆர்.பி., - சிறப்பாசிரியர்கள் நியமனத் தேர்வுக்கான பாடத்திட்டம் (ஓவியம், உடற்கல்வி, இசை, தையல்)...

அரசு பள்ளிகளில் பணிபுரிய 1,028 சிறப்பு ஆசிரியர்களாக உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்துத்தேர்வு நடத்தி தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.1,028 ஆசிரியர்கள் நியமனம்.

வன அலுவலர் எழுத்துத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழு சார்பில் நடைபெறும் வன அலுவலர்கள், கள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு

சகோதர, சகோதரிகளே, 21.8.2014 ஆம் தேதியன்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வுவாரியம் அறிவிப்பு எண் 06/2014 -ல்ஆதிதிராவிட நலத்துறையின் கீழ்உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 669 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்ற SC & SCA ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் என்றும் பிரமலை-கள்ளர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள 64 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் பிரமலை-கள்ளர் சமுகத்தினருக்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்படும்என்றும் அறிவிப்பு வெளியானது.

அஞ்சலக உதவியாளர் தேர்வு முடிவுகள் எப்போது?

தபால்துறை சார்பில், தமிழகத்தில் காலியாக உள்ள 1,179 அஞ்சலக உதவியாளர் (போஸ்டல் அசிஸ்டென்ட்) பணியிடங்களுக்கு, முதல்கட்ட தேர்வுகள், கடந்தாண்டு மே 11ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வில், 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பள்ளிகளில் சுத்தமான கழிவறைகள் இருப்பது அவசியம்: சப்ரீம் கோர்ட் கண்டிப்பு

பள்ளிகளில் சுத்தமான, அனைத்து வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் இருப்பது அவசியம் என, சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையிலும், எவ்வித வசதிகளும் இன்றி இருப்பதாக, ஆந்திராவை சேர்ந்த, ராஜூ என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

ஆசிரியர்களுக்கு நடக்கும் பயிற்சிகளில் பயனில்லை, வீணாகிறது நிதி: புகார்

பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சிகளில், புதிதாக ஒன்றும் இல்லை என்பதால், வெறும் சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் இப்பயிற்சிகளுக்கு, லட்சக்கணக்கில் ஒதுக்கப்படும் நிதி வீணடிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையை குறைக்க அதிரடியில் இறங்கிய அரசு

குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க, ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுக்க வேண்டும் என, அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. தமிழகம் முழுவதும், தொழிலாளர் ஆய்வாளர்கள் வேட்டையைத் துவங்கி உள்ளனர்.

புதிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் துவக்குவதற்கான கையேட்டை வெளியிட்ட ஏ.ஐ.சி.டி.இ.

புதிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் துவங்க, விதிகள் அடங்கிய கையேட்டை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம்(ஏ.ஐ.சி.டி.இ.) வெளியிட்டுள்ளது.

50 காலிப்பணியிடங்களை கொண்ட குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

கிராம நிர்வாக அலுவலர்

2,234 காலிப்பணியிடங்களுக்கான கிராம நிர்வாக அலுவலர் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரத்து 880 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த டிசம்பர் 15-ந்தேதி வெளியிடப்பட்டது.

Wednesday, January 28, 2015

கல்வித்துறையை கலக்கும் 'பேப்பர் ட்ரான்ஸ்பர்' : அதிர்ச்சியில் ஆசிரியர்கள்

ஆசிரியர்களுக்கு அல்லாமல் அவர்களின் ஆவணங்களுக்கு 'டிரான்ஸ்பர்' தந்த விஷயம் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 2002ம் ஆண்டு முதல் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இத்திட்டம் அமலில் உள்ளது. மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்துவதை தவிர்ப்பது, பள்ளி செயல்பாடுகளை கண்காணிப்பது, புதிய வகுப்பறை கட்டும் பணிகள் இத்திட்டம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

டி.என்.பி.எஸ்.சி ஆண்டின் அனைத்து போட்டி தேர்வுகள் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும்- டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசுப்பிரமணியம்

கடந்த ஜூன் மாதம் நடந்த கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியம் வங்கினார். 

தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்.

இரண்டாண்டு காலம் ஆசிரியர் பயிற்சி முழுமையாக முடித்து தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மேல்நிலைத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களுக்கு விடைத்தாளின் ஒளி நகல் வழங்குவதுபோல் தற்போது ஜுன் 2014 முதல் தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் / தனித் தேர்வர்களும் பயன்பெறும் வகையில் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் எனவும்,

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்மானம் : உழைப்பூதியம் உயர்த்தாவிடில் தேர்வு புறக்கணிப்பு

'கருத்தியல் தேர்வுகளுக்கான உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்காவிட்டால், ஆண்டு செய்முறை மற்றும் கருத்தியல் தேர்வுகளை புறக்கணிப்பது' என, திருச்சியில் நடந்த, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலை. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஜன.27) மாலை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி:

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி


உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது.

ஆசிரியர் பணியிடம் உருவாக்கக் கோரி சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள்(Special B.Ed) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.

சிறப்பு கல்வியியல் பட்டதாரி சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வடிவேல் முருகன் கூறியதாவது: தமிழகத்தில் பார்வையற்ற, காது கேட்கும் திறனற்ற மற்றும் மூளை வளர்ச்சி திறன் குன்றிய மாணவ- மாணவிகளுக்குக் கற்பிக்கும் சிறப்பு கல்வியியல் (பி.எட்) பட்டம் பெற்றவர்களுக்குப் பார்வையற்றோர்

புதிய கல்விக் கொள்கையை உருவாக்க பொதுமக்கள் ஆலோசனை வழங்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு


பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் வகையில், புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பல தரப்பினரின் ஆலோசனைகளை மத்திய அரசு கோரி உள்ளது. இதற்கான அறிவிப்பு, மத்திய அரசின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளுக்காக அஞ்சல் துறையில் மத்திய அரசு தொடங்குகிறது புதிய சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி அக்கௌன்ட் ( SSA ) - 22.01.2015 முதல் அமுலாகிறது.

1) 10 வயது வரை உள்ள இரண்டு பெண் குழந்தைகளுக்காக இந்த கணக்கு தொடங்கலாம்
2)குறைந்தபட்ச முதலிடு ரூபாய் 1000

3).ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை சேமிக்கலாம்.

தனியார் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றவரா நீங்கள்? விழிப்புணர்வு கட்டுரை


தனியார் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. வீட்டுக் கடன் பெற்று தவறாமல் மாதத்தவணை கட்டி வரும்  அனைவருக்கும் இந்தக் கட்டுரை ஒரு விழிப்புணர்வைத் தரும்.

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு ஊதிய குழு குறைபாடுகளை - LETTER NO.60473 (CMPC) 2014-1 / DATE.10.12.2014; மறு ஆய்வு செய்திட வேண்டுதல்

மறுஆய்வு செய்வதற்கு கீழ்கண்ட ஆவணங்களை மிகுந்த சிரமங்களுக்கு இடையே Collect செய்து COMMITTEE CHAIRMAN HONORABLE JUDGE A.S.VENLATACHALAMOORTHY அவர்களிடம் தாக்கல் செய்துள்ளோம். இவர் Pay Grievance Redressal Committeeயின் Chairman ஆவார்.

இவருக்கு அனுப்பப்பட்ட 23 ஆவணங்கள் என்ன? என்ன?

1) அரசாணை எண்.234 நிதித்துறை நாள்.01.06.2009.

2) அரசாணை எண்.23 நிதித்துறை நாள்.12.01.2011.

3) தமிழ்நாடு மாநில ஆட்சி மொழி சட்டம் 1956.

மதுவிற்கு அடிமையாகி சீரழிந்து வரும் இளைய சமுதாயம்! பெற்றோர்கள் அச்சம்

கரூர் பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் வந்த பள்ளி  செல்லும் மாணவன் ஒருவன், போதை தலைக்கேறி அங்கேயே மயங்கி  விழுந்தது பொதுமக்களிடையே பரபரப்பையும், கவலையையும்  ஏற்படுத்தியுள்ளது. கரூரை அடுத்த வெங்கமேடு பகுதியை சார்ந்த  ஆட்டோ டிரைவரின் மகன் கரூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார்  பள்ளியில் படித்து வருகிறான். 12ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன்,  அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் நண்பர்களுடன் மது  அருந்தியுள்ளான். 

தனியார் பள்ளி நிர்வாகங்கள் கெடுபிடி: அரசு தேர்வு எழுத சென்ற ஆசிரியர்களுக்கு ‘மெமோ’

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பங்கேற்க சென்ற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சில பள்ளி நிர்வாகங்கள் விடுமுறை வழங்கவில்லை. மீறி சென்றவர்களுக்கு பள்ளி நிர்வாகம் விளக்கம் கேட்டு ‘மெமோ’ வழங்கியுள்ளது. இதனால், இதுபோன்ற தேர்வுகளை விடுமுறை நாட்களில் நடத்த வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படித்தால்....பிடித்தால் ...பகிருங்கள்.. ..

புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச்  சேர்ந்த, வெங்கடபதி என்ற விவசாயிக்கு நேற்று பத்மஸ்ரீ விருது டெல்லியில் வழங்கப்பட்டது. தனது 19வது வயது முதலே விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். தனது முதல் ஆராய்ச்சியில் உருவான கனகாம்பரம் செடியை 1970-ல் அறிமுகம் செய்தார். 100 ரகங்களை அறிமுகம் செய்துள்ளார்.

ஆரோக்கியமாக வாழ கால நேர கட்டுப்பாடு

சென்னை ஆதம்பாக்கம் மதி அக்குபஞ்சர் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் கோமதி குணசேகரன் கூறியதாவது:- உடல் உறுப்புக்களுக்கு குறிப்பிட்ட 2 மணி நேரத்துக்கு பிராண சக்தி அதிகம் இருப்பதால் செயல் திறன் உச்சம் அடைகிறது என சீன மருத்துவம் கூறுகிறது.

ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பில் தாமதம்! பொது 'கவுன்சிலிங்'கில் ஏற்படும் சிக்கல் தவிர்க்கப்படுமா?

மதுரை தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்களின் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பு பணியில் தாமதம் ஏற்படுவதால் பொது 'கவுன்சிலிங்'கின் போது சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது. மாவட்டத்தில் தொடக்க கல்வித்துறைக்கு உட்பட்ட 15 கல்வி யூனியன்களில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்கு டிச.31ம் தேதியை அடிப்படை நாளாக கொண்டு ஜன.1ல் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் வெளியிட வேண்டும்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியீடு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான எழுத்துத் தேர்வை கடந்த 10 ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுதினர்.தேர்வுக்கான சரியான விடையை ஆசிரியர் தேர்வு வாரியம் 2 நாட்களுக்கு முன் வெளியிட்டது.

கலை நிகழ்ச்சிகளில் அரசு பள்ளி மாணவர்கள் புறக்கணிப்பு: சென்னை கலெக்டர் அலுவலக விழாவில் வெட்டவெளிச்சம்

அரசு விழாக்களின் போது நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில், அரசு பள்ளி மாணவர்களை புறக்கணித்து, தனியார் பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, நேற்றைய குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் வெட்டவெளிச்சமாகி உள்ளது. இது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பிளஸ் 2 தேர்வர்கள் 75% வருகைப் பதிவு வைத்திருந்தால் செய்முறைத் தேர்வில் தேர்ச்சி!

பிளஸ் 2 தேர்வர்கள், பள்ளிக்கு, 75 சதவீத வருகை பதிவு வைத்திருந்தால், அவர்களை, செய்முறை தேர்வில் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறை தேர்வை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

பொதுத்தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டால் 2ஆண்டு தேர்வு எழுத தடை; ஆசிரியர்களிடம் முறைத்தால் நிரந்தர தடை

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. சென்னையில் மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர்  தலைமையில் 10 பறக்கும் படையும், தென்சென்னை, மத்திய சென்னை, கிழக்கு சென்னை, வடசென்னை மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில்  4 பறக்கும் படைகள் அமைக்கப்படும். மேலும் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும்  படைகளும் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!

"ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்"

கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும்.

தேசிய வாக்காளர் தின விழாவில் பள்ளி மாணவர்களுடன் ஆர் .டி.ஒ கலந்துரையாடல்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில்  நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாகொண்டாட்டத்தில்  வாக்காளர் அனைவருக்கும் வாக்களிக்கும் உணர்வு வரவேண்டும் என தேவகோட்டை கோட்டாட்சியர் சிதம்பரம் பேசினார்.

Monday, January 26, 2015

கொத்தமல்லிக்கீரையின் மருத்துவ குணங்கள்

கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள். கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும்.

ஒழுக்கம் நிறைந்த சமுதாயத்தை உருவாக்கும் முயற்சி

மேற்கு வங்கத்தில், பாரம்பரிய குழந்தை வளர்ப்பு முறை, குடும்ப நிர்வாகம், தற்காப்பு பயிற்சி போன்ற முக்கிய பயிற்சிகளை குடும்ப தலைவியருக்கு அளிக்க, ஆர்.எஸ்.எஸ்.,ன் கிளை அமைப்பான, ’ராஷ்டிர சேவிகா சமிதி’ திட்டமிட்டுள்ளது.

சலுகையல்ல, அங்கீகாரம்...

மில்லியன் என்பது ஒரு சிறிய எண்ணிக்கை அல்ல. குறிப்பாக, 135 மில்லியன் மக்கள் (13 கோடியே 50 இலட்சம் மக்கள்) என்றால் அதனுடைய முக்கியத்துவம் இன்னும் அதிகம்.

மோரீஷஸ், சுரிநாம், புருனே, டோங்கா போன்ற 50 நாடுகளின் மொத்த மக்கள் தொகையைவிட இது அதிகம். பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலுள்ள மக்கள் தொகையின் கூடுதலைவிட அல்லது கனடா மக்கள் தொகையின் மூன்று மடங்கைவிட இது அதிகம்.

‘மாணவர்களே... மதிப்பெண்களை விட அறிவைத் தேடுங்கள்’

”மாணவர்கள் மதிப்பெண்களை தேடுவதைக் காட்டிலும், அறிவைத் தேடுவதே பயனுள்ளதாக இருக்கும்,” என ’இஸ்ரோ’ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறினார்.

போராட்டம் நடத்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

சம்பள முரண்பாடு வழக்கில், தமிழக அரசின் எதிர் மனுவால் அதிருப்தி அடைந்த, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், போராட்டம் நடத்த முடிவெடுத்து உள்ளனர்.

டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற பலருக்கு, தேர்ச்சி சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு, 2013ல் நடந்தது. இதில், ’90 மதிப்பெண்ணுக்கு மேல், 60 சதவீதம் பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என அறிவிக்கப்பட்டது.

‘தமிழகத்தில் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை’

தமிழகத்தில் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் தொடர்பாக, கடந்த 2013 - 14ம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தகவல்களை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 1,442 பள்ளிகளில் மாணவியருக்கான கழிப்பறை வசதியும், 4,278 பள்ளிகளில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதியும் இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் கல்வியாண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் ரெடி

வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்காக, இலவச பாடப்புத்தகங்கள் மாவட்டங்களுக்கு வந்துள்ளன. அவற்றை குடோன்களில் பாதுகாப்பாக வைக்க, முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

சுமாராக படிக்கும் மாணவர்களை, பள்ளிகளே டுடோரியலில் சேர்க்கும் அவலம்!

10 வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற சுமாராக படிக்கும் மாணவர்களை வெளியேற்றிவிட்டு, பள்ளி ஆசிரியர்களே டுடோரியல் கல்லூரிக்கு பரிந்துரைக்கும் அவலம் தொடர்கிறது.

‘இளைஞர்களே... உங்கள் திறமை மீது ஒருபோதும் சந்தேகம் வேண்டாம்’: கலாம்

உங்கள் திறமை மீது ஒருபோதும் சந்தேகம் கொள்ள வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெய்ப்பூரில் நடந்து வரும் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசிய அப்துல் கலாம் இவ்வாறு பேசினார்.

இந்தியாவில் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: யுனிசெப்

ஐக்கிய நாடுகள்: பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை, தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதில், அதிக முன்னேற்றம் அடைந்திருப்பது இந்தியா தான். கடந்த 2000 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகளில், 1.6 கோடி குழந்தைகள் பள்ளிக்கு சென்றுள்ளனர்.

நூறு சதவீத தேர்ச்சிக்காக மாணவர்கள் நீக்கம்; டுட்டோரியலுக்கு பரிந்துரைக்கும் ஆசிரியர்கள்!


பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100சதவீத தேர்ச்சி பெற சுமாராக படிக்கும் மாணவர்களை வெளியேற்றிவிட்டு,பள்ளி ஆசிரியர்களே டுட்டோரியல் கல்லூரிக்கு பரிந்துரைக்கும் அவலம் தொடர்கிறது.

குரூட் ஆயில் விலை முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு குறைந்திருக்கிறது ... ஆனால் பெட்ரோல் விலை 75 லிருந்து 61 ஆக மட்டுமே குறைந்திருக்கிறது ..ஏன் பாதியாக குறைக்கப்படவில்லை ..?

குரூட் ஆயில் விலை முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு குறைந்திருக்கிறது ...

ஆனால் பெட்ரோல் விலை 75 லிருந்து 61 ஆக மட்டுமே குறைந்திருக்கிறது ..ஏன் பாதியாக குறைக்கப்படவில்லை ..?

என்னிடம் என் நண்பர்கள் பலர் கேட்கும் கேள்வி இதுதான் ....

இதற்க்கு முன்பாக , நாம் வரலாற்றில் நடந்த ஒன்றை தெரிந்துவைத்திருக்க வேண்டும் .

வேலை மாறினால் இனி பி.எப். பணம் முழுதாக கிடைக்காது!

அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், தங்களது பி.எப் பணத்தை முதிர்வு காலத்திற்கு முன்னரே எடுக்கும் போக்கை குறைக்கும் நோக்கில், புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் திட்டமிட்டுள்ளது. 

ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து பெற்றோர் முற்றுகை போராட்டம்

இந்திரா நகர் அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து பெற்றோர் முற்றுகை போராட்டம் நடத்தினர். கோரிமேடு இந்திரா நகர் அரசு ஆரம்பப் பள்ளியில் 5ம் வகுப்பு வரை, 251 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. 23 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய பள்ளியில், 7 ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர். இதன் காரணமாக , பள்ளியின் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக சரிந்து வருகின்றது.

வாரத்தில் 1 நாள் மட்டும் செயல்படும் ரேஷன் கடையில், 5 நாட்கள் இயங்கும் அரசு பள்ளி

ராமநாதபுரத்தில், வாரத்தில் ஒரு நாள் மட்டும் செயல்படும் ரேஷன் கடையில், 5 நாட்கள் அரசு பள்ளி இயங்குகிறது. ராமநாதபுரம், நொச்சிவயல் கிராமத்தில் அரசு துவக்கப் பள்ளி துவங்கப்பட்டது. ஈராசிரியர் பணிபுரியும் இப்பள்ளிக்கு புதிய கட்டடம் இல்லாததால், அங்குள்ள ரேஷன் கடையை வாரத்தில் 5 நாட்கள் பள்ளியாகவும், சனிக்கிழமை மட்டும் ரேஷன் கடையாகவும், டூ இன் ஒன் ஆக பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழ் வளர்ச்சி துறையின் மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு 28ம் தேதி நேர்காணல்: டி.என்.பி.எஸ்.சி.

தலைமைச் செயலக, தமிழ் வளர்ச்சி துறையின் மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு, வரும் 28ம் தேதி நேர்காணல் நடக்கிறது என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

மொழிப்பாட தேர்வுகளுக்கு கோடு போட்ட விடைத்தாள் அளிக்க தேர்வுத்துறை முடிவு

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மொழிப்பாட தேர்வுகளுக்கு, கோடு போட்ட விடைத்தாள் அளிக்க, தேர்வுத்துறை முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில், இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 5ம் தேதி முதல் 31ம் தேதி வரையும்; 10ம் வகுப்பு தேர்வு, மார்ச் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரையும் நடக்கின்றன.

PGTRB விடைகள் : உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பலாம்.


முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் w‌w‌w.‌t‌rb.‌t‌n.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில்  வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

எடை குறைய வெந்தயம் சாப்பிடுங்க!


கோடைகாலத்தில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. இப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.

வாட்சிம் கார்டு அறிமுகம்!


150 நாடுகளில் ரோமிங் கட்டணமின்றி வாட்ஸ் அப்பை பயன்படுத்த உதவும் வாட்சிம் கார்டு அறிமுகம் உலகின் 150 நாடுகளில் ரோமிங் கட்டணம் ஏதுமின்றி ‘வாட்ஸ்அப்’ சேவையை பயன்படுத்த உதவும் வாட்சிம் கார்டு இத்தாலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Friday, January 23, 2015

2025ல் இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் வரும் எச்சரிக்கை ரிப்போர்ட்...!!

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் 2070ல் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர்.

72 மணி நேரத்தில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?

நுரையீரல் பாதிக்கின்ற அளவிற்கு ஒருசிலர் எந்த கெட்ட பழக்கத்தையும் தொடர்வதில்லை. ஆனால் அவர்களுக்கு நுரையீரல் தொடர்பான பிரச்னை இருக்கும்.

இது ஒவ்வொருவரின் எதிர்பாற்றலை பொறுத்து மாறுப்படும். மூன்றே நாளில் உங்களின் நுரையீரலை எளிமையான முறையில் சுத்தம் செய்யலாம். இதோ, அதற்கான வழிகள்...

எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் பக்கங்கள் குறைப்பு: மொழித்தாள் தேர்வுகளுக்கு கோடுபோட்ட விடைத்தாள் அறிமுகம்

இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 விடைத்தாள்களில் பக்கங்களின் எண்ணிக்கை ஒரு சில பாடங்களுக்கு குறைக் கப்பட்டுள்ளது. மேலும், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழித்தாள் தேர்வுகளுக்கு கோடுபோட்ட விடைத்தாள்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

பள்ளிக்கல்வி செயலருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்


விருதுநகரைச் சேர்ந்தவர் ராமநாத சேதுபதி. இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ‘‘மதுரை அரும்பனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 150 பேர் படிக்கின்றனர். இங்கு 2010ல் 6, 7, 8ம் வகுப்புக்கு ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் புது கட்டிடம் கட்டப்பட் டது.

தமிழகம் முழுவதும் பிப்ரவரி மாதம் இ பேரோல் நிறுத்தி வைக்க கோரிக்கை; நடவடிக்கை எடுப்பதாக இணை இயக்குனர் உறுதி: செ.முத்துசாமி


தமிழகம் முழுவதும் கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களில் பிப்ரவரி மாத சம்பளம் இ பேரோல் முறையிலேயே பட்டியல் தயாரித்து வழங்கப்பட்டால் தான் ஏற்கப்படும் என அந்தந்த கருவூல அதிகாரிகளின் ஆணை, இயக்குனர் கவனத்திற்கு பொதுச்செயலர் செ.முத்துசாமி அவர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அனைத்து அரசு, தனியார் கல்லூரிகளிலும் உளவுப் பிரிவு, பறக்கும் படை அமைக்க உத்தரவு

கல்லூரிகள் வன்முறை களமாவதை தடுக்கும் விதமாக, அனைத்து அரசு, தனியார் கல்லூரிகளிலும் உளவுப் பிரிவு, பறக்கும் படை அமைக்க பாரதியார் பல்கலை உத்தரவிட்டுள்ளது.

பிளஸ்–2 தேர்வுக்கான விடை எழுதும் தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டன அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தகவல்

பிளஸ்–2 தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.

ஜன. 27 முதல் வி.ஏ.ஓ., பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, 27ம் தேதி முதல் துவங்கும்’ என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்து உள்ளது.

மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்தியக் குழு

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதிகள், மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழு முதல் முறையாக தமிழகத்துக்கு வருகிறது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்யம் தலைமையில் 4 பேர் கொண்டக் குழு ஜனவரி 28 முதல் 30 வரை தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்கிறது.

அரசு தொடக்க பள்ளிகளில் கம்ப்யூட்டர், புரொஜக்டர் வழியாக ஆங்கிலம் கற்பிக்க ஏற்பாடு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தை பொனிடிக் மெத்தடாலஜி (ஒலிப்பு முறை) மூலம் எளிதில் கற்றுக்கொள்வதற்கான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

தவறான வார்த்தை..! தடுமாறும் வெற்றி!!

சொன்னாலும் கேட்பதில்லை இளைய மனசு. கோபம், கர்வம், அகங்காரம் கலந்து நம்மை ஆட்டிப் படைக்கிறது. பெரும்பாலும் பிறரைத் தாக்கி, நக்கல் செய்து பேசுவதே பலரின் பழக்கமாக மாறிவரும் இந்நாளில், அந்தப் பேச்சு எப்படி நமது வாழ்வினை முடக்குகிறது என்பதை உணர முடிவதில்லை.

‘ஆங்கிலம் தாய்மொழிக்கு ஈடாகாது’

“இப்போது, நாட்டு மக்களிடையே ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. சர்வதேச விவகாரங்களை தெரிந்து கொள்வதற்கு, ஆங்கிலம் அவசியம் தான்;

நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

ஹீலர் பாஸ்கரின் ஒருநாள் கருத்ததரங்கம் சுருக்கமாக

நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம்.

பஞ்ச பூதங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நம் உடலில் தோன்றும் அறிகுறிகளை இந்த படத்தில் பார்க்கலாம்.

15 அம்சகோரிக்கையை வலியுறுத்தி22-ம் தேதி அரசு ஊழியர்கள் தற்செயல்விடுப்புப் போராட்டம்

15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி அனைதுறை அரசு ஊழியர்கள் ஜன.22-ம்தேதி ஒருநாள் தற்செயல் விடுப்புப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள்என்றார் அகில இந்தியஅரசு ஊழியர்கள் சம்மேளன தமிழ்மாநில பொதுச் செயலர்கு.பாலசுப்ரமணியன். திருச்சியில் நேற்று அவர் நிருபர்களிடம்கூறியதாவது:தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள்நிரப்பப்படாமல் உள்ளன.

Wednesday, January 21, 2015

மாணவர்கள் பேருந்து படிகட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்-பாஸ் கட்: தமிழக அரசு உத்தரவு


பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்பாஸ் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வுத் தேர்வு பயிற்சி முகாம்

அரசுப்பள்ளிகளில் படிக்கும் திறமையான மாணவர்களைகண்டறிந்து அவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக தேசிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்  சார்பில் ஆண்டு தோறும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனறிவுத் தேர்வு நடத்தப்படுகிறது.   

குரூப் 1 தேர்வு பிரச்சினையில் சுப்ரீம்கோர்ட் புதிய உத்தரவு

கடந்த 2001-ல் டி.என்.பி.எஸ்.சி. குரூப் -1 தேர்வு நடந்தது. வெற்றிபெற்ற 80 பேர் பணி நியமனம் பெற்றனர். இதனை எதிர்த்தும், முறைகேடு நடந்ததாகவும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்ட வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகளின்படி, தேர்ச்சி பெற்றோர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

100% தேர்ச்சி இலக்கு - அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அனிமேஷன் பாட டிவிடிகள்

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சிபெறும் வகையில், கல்வித்துறை சார்பில், அனிமேஷன் பாடங்கள் அடங்கிய டிவிடிகள், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியத்தை குறைக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின்ஊதியத்தை குறைக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதி மன்றத்தில் TET வழக்கு விசாரணைக்கு வந்தது என தகவல் ! உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகளின் விவரம்.

உச்சநீதிமன்றத்தில் நேற்று(19.01.2015) பிற்பகல் இறுதியில் டி.இ.டி வழக்கு விசாரணைக்கு வந்ததாம் அரசிடம்
எழுத்துப்பூர்வமான பதிலை வழக்காடுமன்ற பதிவாளர் வாயிலாக சமர்பிக்கபட்டதாம் ...

சென்னை மருத்துவக் கல்லூரி: 250 இடங்களுக்கு மீண்டும் அனுமதி


சென்னை மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் 250 மாணவர்களைச் சேர்ப்பதற்கு மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி இந்தியாவில் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும். கடந்த 179 ஆண்டுகளாக தரமான மருத்துவக் கல்வியை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

பிளஸ் 2 அறிவியல் பாட மாணவர்களுக்கு பிப்.,5 ல் செய்முறை பொதுத்தேர்வு?

பிளஸ் 2 அறிவியல் பாட மாணவர்களுக்கு பிப்.,5 ல் செய்முறை பொதுத்தேர்வு துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5ல் துவங்குவதாக அட்டணை வெளியிடப்பட்டுள்ளது. அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

டி.இ.டி - 2013 தேர்வு சான்றிதழைப் பெற மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை அணுகலாம்: டி.ஆர்.பி

ஆசிரியர் தகுதித் தேர்வான, டி.இ.டி., 2013 தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் பெறாதவர்கள், அவர்கள் தேர்வெழுதிய மாவட்டத்திற்கு உட்பட்ட முதன்மை கல்வி அலுவலரான சி.இ.ஓ.,வை அணுகலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மாற்றுத் திறனாளி பின்னடைவு காலியிடங்கள் பற்றி விளக்க ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கான, பின்னடைவு காலியிடங்கள் பற்றிய நிலையை விளக்க, துறை ஆணையர் ஆஜராகும்படி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பொம்மலாட்டம் மூலம் புகையில்லா போகி பண்டிகை மற்றும் பெண்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  புகையில்லா போகி பண்டிகை மற்றும் பெண்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி  பொம்மலாட்டம் மூலம் நடைபெற்றது.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் எதிரொலி மாவட்டக் கல்வி அலுவலர் பணியிலிருந்து விடுவிப்பு!!!


தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, கடலூர், கல்வி மாவட்ட அலுவலர், அதிரடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு

மதுரையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உத்தரவிட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளி பின்னடைவு காலியிடங்கள் பற்றி விளக்க ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கான, பின்னடைவு காலியிடங்கள் பற்றிய நிலையை விளக்க, துறை ஆணையர் ஆஜராகும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு

பத்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் எப்படி படிக்கின்றனர்; பாடங்களை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறித்து ஆய்வு நடத்துமாறு, தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்(என்.சி.இ.ஆர்.டி.,), மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது.

தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வுக்கான ஹால் டிக்கெட்

தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, ஜனவரி 20 முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

பிற வாரிய பள்ளி மாணவர்களுக்கான தமிழ் புத்தகங்கள் மார்ச் மாதம் விநியோகம்?

சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட பிற வாரிய பள்ளி மாணவர்களுக்கான தமிழ் பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், மார்ச் மாதம், பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.

Monday, January 19, 2015

24.01.2015 அன்று நடைபெறவுள்ள NMMS தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணபித்துள்ள தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

24.01.2015 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகை (NMMS) தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணபித்துள்ள தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் 20.01.2015 முதல் www.tndge.in என்ற இணையதள வழியாக

பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. பிப்ரவரி மூன்றாவது வாரத்திற்குள் இந்தத் தேர்வுகள் முடிக்கப்பட்டுவிடும். அதே மாதம் 28-க்குள் மதிப்பெண் பட்டியலை அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

பிளஸ் 2 தேர்வு: நிகழாண்டு கூடுதலாக 50 மையங்கள்

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக இந்த ஆண்டு கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 2,300 ஆக அதிகரிக்க உள்ளது.

10ம் வகுப்பு மாணவர்களின் கற்றல்திறன்: ஆய்வு நடத்த கல்வித்துறை முடிவு

10ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளது, அவர்கள் பாடத்திட்டங்களில் உள்ள பாடங்களை எவ்வாறு புரிந்துகொண்டுள்ளனர் என்பது தொடர்பாக ஆய்வு நடத்துமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) அறிவுறுத்தியுள்ளது.

குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த தமிழக அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என, தமிழக அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயனளிக்காத புதிய பென்ஷன் திட்டம்: ஆசிரியர் குடும்பங்கள் பாதிப்பு.


புதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 326 ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜன. 22-இல் அரசுப் பணியாளர் ஒரு நாள் விடுப்புப் போராட்டம்


அகவிலைப்படியின் 50 சதவிகிதத்தை அடிப்படை ஊதியத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் வரும் 22-ஆம் தேதி அரசுப் பணியாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய விதிகளால், மாணவர் சேர்க்கையில் பாதிப்பா?

பி.எட்., - எம்.எட்., படிப்புகள் தொடர்பான, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் - என்.சி.டி.இ.,யின் புதிய விதிகளால், மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும் என, தமிழக அரசுக்கும், கவுன்சிலுக்கும் தனியார் கல்வியியல் கல்லூரிகள் சங்கம் கடிதம் எழுதி உள்ளது.

தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?

வாழ்க்கையில் வெற்றி பெற எதுவும் தேவையில்லை; தன்னம்பிக்கை ஒன்று போதும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி. தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?

உயர்கல்விக்கான ஒதுக்கீட்டை கணிசமாக குறைத்து அதிர்ச்சியளித்த மத்திய அரசு

நடப்பு நிதியாண்டிற்கான (2014-15) பட்ஜெட் மறுமதிப்பீட்டில், உயர் கல்விக்கான ஒதுக்கீட்டை, 16 ஆயிரத்து 900 கோடியில் இருந்து, 13 ஆயிரம் கோடி ரூபாயாக மத்திய அரசு குறைத்துள்ளது.

பொங்கல் போனஸ் கிடைக்காமல் அரசு ஊழியர் ஆசிரியர்கள் கொந்தளிப்பு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நடக்கும் நிலையிலும் போனஸ் கிடைக்காமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொதிப்பில் உள்ளனர்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உத்தரவிட்டார்.

ஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்

7TH PAY COMMISSION PAY AND ALLOWANCES ESTIMATION – GCONNECT CALCULATOR 

Readers must be aware, we estimated 7th Pay Commission pay scale as on 01.01.2016 in the month of April 2014 after constitution of 7th Pay Commission following methods adopted by 6th Pay Commission for revising Central Government Employees Pay and allowances.

These are estimated 7th CPC Pay Scales and entry Pay in each of these projected Pay in Pay Band

7th Pay Commission projected Pay Scale – Revised Pay Bands, Grade Pay, Starting Pay in PB and Entry Pay

இந்த தமிழனை பாராட்டுவோமே தமிழ்நாட்டு மின்சார பிரச்சனைக்கு தீர்வு! இதுதான் தமிழன் கண்டுபுடிப்பு

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....

இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதில் பெருமைக்குரிய விஷயம்,

" இவர் ஒரு தமிழர் "

என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்....

பொங்கல் விடுமுறையில் வகுப்பு: பெற்றோர் அதிர்ச்சி


சேலத்தில், ஒரு சில தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், பொங்கல் விடுமுறையிலும் செயல்பட்டது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரையாண்டு தேர்வில் தவறிய மாணவர்கள் காலை 8 மணிக்கே பள்ளிக்கு வர உத்தரவு

 'அரையாண்டு தேர்வில், தேர்ச்சி பெறாத, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலை, 8:00 மணி முதல் சிறப்பு வகுப்பு நடத்தி, பயிற்சியளிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் வாழ வைக்கும் வைட்டமின்கள் - தெரிந்துகொள்வோம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல்
வந்து ஒட்டிக்கொள்ளும். அதனால், என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய்வரும் என்பது பற்றி பார்ப்போம் :

10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல்திறன்: ஆய்வு நடத்த கல்வித்துறை முடிவு

10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.


10 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளது, அவர்கள் பாடத்திட்டங்களில் உள்ள பாடங்களை எவ்வாறு புரிந்துகொண்டுள்ளனர் என்பது தொடர்பாக ஆய்வு நடத்துமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) அறிவுறுத்தியுள்ளது.

PGTRB - 2015 தேர்வில் ஃபெயில் மார்க்


நடந்து முடிந்துள்ள PG TRB தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் தகுதி மதிப்பெண் நடைமுறைக்கு வர உள்ளதாலும் , அனைத்து பாடங்களின் வினாத்தாள்களுமே கடினமாக இருந்ததாலும் தேர்வெழுதிய பலரும் கலக்கத்தில் உள்ளனர்.

Friday, January 16, 2015

இந்த புனித நாளாம் பொங்கல் திருநாளில் உங்களது வாழ்வில் அமைதியும் வளமும் பெற்று வாழ என் வாழ்த்துக்கள்!!!

அறிவு, மகிழ்ச்சி, வெற்றி, புனிதம், வெற்றி கொடுக்கும் வேலை, இவையனைத்தும் இந்த இனிய பொங்கல் குறைவில்லாமல் உங்கள் வாழ்வில் கொண்டு வரட்டும்,

Thursday, January 15, 2015

அனைத்து ஆசிரியர்களுக்கும் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.இரா.தாஸ் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் அவர்கள் இனிய பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.

பொங்கல் விடுமுறையில் பள்ளிகள் இயங்கக் கூடாது: கல்வித் துறை உத்தரவு!!!

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார், உதவிபெறும் பள்ளிகளை பொங்கல் விடுமுறைக் காலத்தில் இயக்கக் கூடாது என்று தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரை வழங்கியுள்ளார்.

"முழு ஈடுபாட்டுடன் கூடிய கடின முயற்சியாலேயே சாதனை மேற்கொள்ள முடியும்"

முழு ஈடுபாட்டுடன் கூடிய கடின முயற்சியாலேயே சாதனை நோக்கி வெற்றிப்பயணம் மேற்கொள்ள முடியும். இப்பயணத்தில், நாம் எடுக்கும் இடைவிடாத பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல் என்கிறார் ஒத்தக்கால்மண்டபம், அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார், 49.

மாணவர்களின் அரையாண்டு தேர்வு முடிவுகள் குறித்து ஆய்வு கூட்டம்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் அரையாண்டு தேர்வு முடிவுகள் குறித்து, கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தலைமையில், ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

அரசு பள்ளியில் பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு

ஸ்ரீ மதுரை அரசு பள்ளியில், பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கூடலூர் ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில், முப்பெறும் விழா நடந்தது. ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

பிளஸ் 2 செய்முறைத் தேர்விற்கான தேர்வு மையங்கள் அமைக்க தீவிர நடவடிக்கை

பிளஸ் - 2 செய்முறைத் தேர்விற்கான தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து, பள்ளி தலைமையாசிரியர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிளஸ் - 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள், பிப்., மாதம் துவங்க உள்ள நிலையில், தேர்வு மையங்கள் அமைப்பது, செய்முறைத்தேர்வு ஆசிரியர்கள், இணை மையங்கள், மாணவர்கள் பாடவாரியாக மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விபரங்களை உடனடியாக அனுப்புவதற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: கல்வித்துறை கண்டிப்பு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என, தலைமை ஆசிரியர்களை, கல்வித்துறை கண்டித்துள்ளது.

குரூப் 2 ஏ கலந்தாய்வு - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப் - 2 ஏ கலந்தாய்வில், காலியிடங்களை ஆய்வுசெய்து, இடம் இருப்பின், விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை

பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர் பட்டியலில், பெயர் திருத்தம் செய்து கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல், பள்ளிகளிலிருந்து, 'ஆன் - லைன்' மூலம் தேர்வுத்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுஉள்ளது.

பி.எட்., எம்.எட் வகுப்புகள் 2 வருடமாக உயர்த்தப்பட்டதால் புதிய பாடத்திட்டம் - துணைவேந்தர் விஸ்வநாதன் பேட்டி

பி.எட். மற்றும் எம்.எட். வகுப்புகள் ஒரு வருடத்தில் இருந்து 2 வருடங்களாக உயர்த்தப்பட்டதால் இரு படிப்புக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

எலுமிச்சையில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ குணங்கள் !

எலுமிச்சங்காய், பழம், இலை, வேர் இவை அத்தனையும் மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. தீராத தாகத்தை தணிக்க எலுமிச்சம்பழ ரசத்தோடு குளிர்நீர் சேர்த்து உடன் போதிய சர்க்கரை சேர்த்து குடிப்பது வழக்கம்.