Pages

Thursday, January 22, 2015

அரசு தொடக்க பள்ளிகளில் கம்ப்யூட்டர், புரொஜக்டர் வழியாக ஆங்கிலம் கற்பிக்க ஏற்பாடு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தை பொனிடிக் மெத்தடாலஜி (ஒலிப்பு முறை) மூலம் எளிதில் கற்றுக்கொள்வதற்கான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அனைத்து மாணவர்களும் ஆங்கில கல்வியில் சிறந்த முறையில் பயன்பெறும் வகையில் 43 பாடங்களை கொண்ட 2 சி.டி.கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த சி.டி.கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு ஒரு மாவட்டத்திற்கு 50 சிடிகள் வீதம் 1600 சிடிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளும் இதனை பயன்படுத்தி ஆங்கில கல்வி பயிற்றுவிக்க வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளிலும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள டி.வி மற்றும் டி.வி.டி. பிளேயர்களை பயன்படுத்தியும், நடுநிலை பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் மற்றும் எல்சிடி புரொஜக்டர் மூலமாகவும் இந்த சிடிகளை அனைத்து பள்ளிகளிலும் பயன்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தில் பெறப்பட்ட 50 சிடிகளை அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் பிரித்தளிக்க வேண்டும்.

இதனை வட்டார வளமைய மேற்பார்வையாளருடன் ஒருங்கிணைந்து ஒவ்வொரு பள்ளியிலும் சிடியை முதலில் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும். இந்த பணிகள் அனைத்தையும் வரும் பிப்ரவரி 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.