Pages

Wednesday, January 14, 2015

தலைமை ஆசிரியர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை

பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர் பட்டியலில், பெயர் திருத்தம் செய்து கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல், பள்ளிகளிலிருந்து, 'ஆன் - லைன்' மூலம் தேர்வுத்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுஉள்ளது.

இப்பட்டியலில் உள்ள விவரங்கள் தான், மதிப்பெண் சான்றிதழ்களில் பதிவு செய்யப்படும் என்பதால், மாணவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பல முறை சரிபார்த்துக்கொள்ள உத்தரவிடப்பட்டு இருந்தது. பணி முடிந்த நிலையில், மீண்டும் பல பள்ளிகளில் பெயர் திருத்தத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்ததால், தேர்வுத்துறை இன்று ஒருநாள் இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது. 'இதையும் மீறி சான்றிதழில் தவறான தகவல்கள் வந்தால், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்வுத்துறை எச்சரித்து உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.