Pages

Thursday, January 22, 2015

15 அம்சகோரிக்கையை வலியுறுத்தி22-ம் தேதி அரசு ஊழியர்கள் தற்செயல்விடுப்புப் போராட்டம்

15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி அனைதுறை அரசு ஊழியர்கள் ஜன.22-ம்தேதி ஒருநாள் தற்செயல் விடுப்புப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள்என்றார் அகில இந்தியஅரசு ஊழியர்கள் சம்மேளன தமிழ்மாநில பொதுச் செயலர்கு.பாலசுப்ரமணியன். திருச்சியில் நேற்று அவர் நிருபர்களிடம்கூறியதாவது:தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள்நிரப்பப்படாமல் உள்ளன.
மேலும்அரசு அவுட்சோர்ஸிங் என்றமுறையை தேர்ந்தெடுத்து, தொகுப்பூதியம், மதிப்பூதியம்,ஒப்பந்தப் பணியாளர்கள் என்கிறரீதியில் பணியாளர்களை நியமனம்செய்கிறது. இதனால்வேலைவாய்ப்பு அலுவலகங்கள்வேலைவாய்ப்பு வழிகாட்டி மையங்கமாறிவருகின்றன.இந்நிலையில் இருக்கின்ற அரசு ஊழியர்கள் 15 அம்சகோரிக்கைகளை முன்வைத்த போதும், அரசு அதற்கு செவிசாய்க்கமறுத்துள்ளது.அடிப்படை ஊதியத்துடன் 50சதவீதம் அகவிலைப்படி, புதியஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து, பழையஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். ஊதிய மாற்று ஒப்பந்தகாலத்தை 5 ஆண்டுகள் எனகணக்கிட்டு, 1.1.2014 முதல் புதியஊதிய மாற்று ஒப்பந்தம்ஏற்படுத்தி ஊதியம் வழங்கவேண்டும். அதுவரை இடைக்காலநிவாரணமாக 20 சதவீதம் வழங்கவேண்டும்.சிறப்புக் காலமுறை ஊதியம்,தொகுப்பூதிய அடிப்படையில்பணியாற்றுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்குவதோடு,அவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 15அம்சகோரிக்கைகளை முன்வைத்து இம்மா22-ம் தேதி தமிழக அரசின்அனைத்துத் துறை பணியாளர்கள்தற்செயல் விடுப்புப் போராட்டத்தில்ஈடுபட உள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.