பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மொழிப்பாட தேர்வுகளுக்கு, கோடு போட்ட விடைத்தாள் அளிக்க, தேர்வுத்துறை முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில், இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 5ம் தேதி முதல் 31ம் தேதி வரையும்; 10ம் வகுப்பு தேர்வு, மார்ச் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரையும் நடக்கின்றன.
இதில், பிளஸ் 2 தேர்வை 9 லட்சம் பேர், 10ம் வகுப்பு தேர்வை 11 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதனால், கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தெரிகிறது.
இதுகுறித்து, தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாதிரி தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தம் செய்தபோது, கோடு போட்ட விடைத்தாள் அளித்தால், மாணவர்கள் கையெழுத்து சீராக இருக்கும் என, கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மொழிப்பாட தேர்வுகளுக்கு, கோடு போட்ட விடைத்தாள் அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.