இந்திரா நகர் அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து பெற்றோர் முற்றுகை போராட்டம் நடத்தினர். கோரிமேடு இந்திரா நகர் அரசு ஆரம்பப் பள்ளியில் 5ம் வகுப்பு வரை, 251 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. 23 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய பள்ளியில், 7 ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர். இதன் காரணமாக , பள்ளியின் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக சரிந்து வருகின்றது.
இதனை கண்டித்து, நேற்று பெற்றோர், மாணவர்களுடன் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நுழைவு வாயிலில் அமர்ந்து, பள்ளி மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய பெற்றோர்களை, பள்ளி துணை ஆய்வாளர் செல்வலட்சுமி, தலைமையாசிரியை திலகவதி சமாதானப்படுத்தினர்.
பெற்றோர் கூறும்போது, "சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளதால், தனியார் பள்ளிகளை தவிர்த்துவிட்டு அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்ந்துள்ளோம். கோரிமேடு இந்திரா நகர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையைக் கண்டித்து, பெற்றோர், மாணவர்களுடன் நேற்று முற்றுகையில் ஈடுபட்டனர்.
ஆனால், போதுமான ஆசிரியர்களை நியமிக்காமல் கல்வித்துறை அலட்சியமாக உள்ளது. இதனை கண்டித்து விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்" என்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.