Pages

Monday, January 26, 2015

ஒழுக்கம் நிறைந்த சமுதாயத்தை உருவாக்கும் முயற்சி

மேற்கு வங்கத்தில், பாரம்பரிய குழந்தை வளர்ப்பு முறை, குடும்ப நிர்வாகம், தற்காப்பு பயிற்சி போன்ற முக்கிய பயிற்சிகளை குடும்ப தலைவியருக்கு அளிக்க, ஆர்.எஸ்.எஸ்.,ன் கிளை அமைப்பான, ’ராஷ்டிர சேவிகா சமிதி’ திட்டமிட்டுள்ளது.


அந்த அமைப்பைச் சேர்ந்த மதுவா தர் கூறியதாவது:

பெண்கள், குடும்பத்தை நிர்வகிப்பதுடன், அடுத்த தலைமுறையை வளர்க்கும் தாய்மார்களாகவும் இருப்பதால், அவர்கள் நம் நாட்டின் பாரம்பரியம் பற்றி தெரிந்திருப்பது அவசியம். குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை ஒப்பிடு கையில், மேற்கு வங்கத்தில், இந்து மத பாரம்பரியம் மற்றும் கலாசார முறைகள் பின்பற்றுவது குறைந்து விட்டது. நாட்டின் வளமான எதிர்காலத்திற்காக, குடும்பப் பெண்களுக்கு, நம் நாட்டின் அடிப்படை பாரம்பரியம் மற்றும் கலாசாரம் குறித்து பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளோம். 

இதன் ஒரு பகுதியாக, கோல்கட்டாவை சேர்ந்த குடும்பத் தலைவியருக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், பலரும் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெறுகின்றனர். இதில், பெண்களுக்கு, பாலியல் வன்முறைகளிலிருந்து தங்களை காத்துக்கொள்வதற்கான தற்காப்பு பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. இதன் மூலம், குடும்பத்தை சிறந்த முறையில் நிர்வகிப்பதோடு, ஒழுக்கம் நிறைந்த சமுதாயத்தையும் உருவாக்கலாம். சமுதாய கட்டமைப்பை சீர்குலைக்கும், ’லவ் ஜிகாத்’தையும் முறியடிக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.