Pages

Friday, January 23, 2015

தமிழகம் முழுவதும் பிப்ரவரி மாதம் இ பேரோல் நிறுத்தி வைக்க கோரிக்கை; நடவடிக்கை எடுப்பதாக இணை இயக்குனர் உறுதி: செ.முத்துசாமி


தமிழகம் முழுவதும் கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களில் பிப்ரவரி மாத சம்பளம் இ பேரோல் முறையிலேயே பட்டியல் தயாரித்து வழங்கப்பட்டால் தான் ஏற்கப்படும் என அந்தந்த கருவூல அதிகாரிகளின் ஆணை, இயக்குனர் கவனத்திற்கு பொதுச்செயலர் செ.முத்துசாமி அவர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுசெயலர் செ.முத்துசாமி கூறுகையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு வகையான தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உதவித்தொடக்கக்கல்வி
அலுவலகம் மூலம் ஊதியம்
பெற்று வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வோர் மாதமும்
ஒவ்வொரு அலுவலகத்திலும் 400 முதல் 600
வரையிலான எண்ணிக்கைஉள்ள
ஆசிரியர்களுக்கு ஊதியம்
பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள்
அனைவருக்கும் பிப்ரவரி மாதமே புதிய “இ
பேரோல்” முறையிலேயே பட்டியல்
தயாரித்து வழங்கப்படவேண்டும் என்ற
கண்டிப்பான அறிவுறை கருவூல
அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளதாக
அறிகிறோம்,
அதிக எண்ணிக்கையில் உள்ள
ஆசிரியகளுக்கு ஊதியபட்டியலை ஒரே
மாதத்தில்,அதுவும்
வருமான்வரி,தொழில்வரி கணக்கிடப்படும்
பிப்ரவரி மாதத்திலேயே புதிய “இ பேரோல்”
செய்ய வேண்டும் என்று கருவூல
அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதால்
ஆசிரியர்கள் பிப்ரவரி மாதம் ஊதியம்
பெறுவது பாதிக்கப்படும் ,எனவே
இம்முறையை அமுல் படுத்த கால அவகாசம்
கோரவேண்டும் என்று இயக்குனர் அவர்களின்
கவனத்திற்கு கொண்டுசெல்ல
முயன்றபோது அவரின் சார்பாக
இணைஇயக்குனர்
திருமதி லதா அவர்கள்,இயக்குனர்
விடுப்பு முடித்து திரும்பிய உடன்
இது குறித்து மாநில கருவூல
அலுவலருடன் கலந்தாலோசனை செய்து கால
அவகாசம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
எனதெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.