Pages

Wednesday, January 21, 2015

வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்ட வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகளின்படி, தேர்ச்சி பெற்றோர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


இதுகுறித்து TNPSC வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி: எழுத்துத் தேர்வில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, ஜனவரி 27 முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை, சென்னை TNPSC தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

மேற்கண்டவற்றுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள், www.tnpsc.gov.in என்ற இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கலந்தாய்விற்கான தேதி மற்றும் நேரம் ஆகிய விபரங்கள், விரைவு தபால் மூலமாக, ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் தனியாக அனுப்பப்பட்டுள்ளன.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியவற்றில் கலந்துகொள்வோர் அனைவருக்கும் பணி நியமனம் என்ற உத்தரவாதம் கிடையாது. காலிப் பணியிடங்களின் அடிப்படையிலேயே பணி நியமனம் நிகழும்.

இந்த வாய்ப்பை தவற விட்டவர்களுக்கு, வேறு மறுவாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விரிவான அனைத்து விபரங்களுக்கும் www.tnpsc.gov.in

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.