Pages

Saturday, January 31, 2015

ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை.


சைபர் உலகத்துக்குள் நேரடியாக காலடி எடுத்து வைக்கும் விதமாக இந்திய தபால் துறை விரைவில் பிளிப்கார்ட், அமேசான் வர்த்தக இணையதளங்களை போல புதிய ஆன்லைன் வர்த்தக வெப்சைட்டை களமிறக்க உள்ளது.உலகிலேயே மிகப்பெரிய போஸ்டல் சர்வீஸ் நமது இந்திய தபால் துறைதான். 


         அண்மையில்நமது தபால் துறை, வங்கி துவங்குவதற்கான லைசென்சை பெறுவதற்காக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தது.

         இந்நிலையில், தபால் துறையை தகவல் தொழில்நுட்பத்துடன் நவீனப்படுத்துவதற்காக ரூ.5000 கோடி மதிப்பீட்டில் பல பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிளிப்கார்ட், அமேசான், ஈ பே போல ஆன்லைன் வர்த்தக தளத்தை இந்திய தபால் துறை விரைவில் துவங்க உள்ளது.இதற்கான பணிகள் அதிவேகமாக நடந்து வருகிறது. தற்போது, பிளானிங் மற்றும் டிசைனிங் வேலை நடந்து வருகிறது. 

இந்த தளம் இறுதிக்கட்டத்தை எட்ட இன்னும் ஆறுமாதங்கள் வரை ஆகும். பிளிப்கார்ட், அமேசானை போலவே இதுவும் வாங்குபவர் விற்பவர்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்கும். ஆனால், அதிலிருப்பதை போல் எந்த பிராண்டை எவருக்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்றபடி முழுமையாக இருக்காது. பொருட்கள் விற்பனைக்கு வருவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும். தரமான பொருட்களை விற்பனை செய்யவே இந்த விதிமுறைகள். இதுதவிர இந்திய பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக, டார்ஜிலிங்டீ, மேற்கு வங்காள மால்டா மாம்பழம், காஷ்மீர் குங்கும பூ போன்றவை அடங்கும். மேலும், கூடுதலாக சில பொதுத்துறை நிறுவனங்களுக்கு சேவைகளையும் வழங்க தபால் துறை தயாராக இருக்கிறது.இந்த தகவலை போஸ்டல் சர்வீஸஸ் போர்டில் உறுப்பினராக இருக்கும் ஜான் சாமுவேல் பிரபல நிதி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்திய தபால்துறை மிகச்சிறந்த லாஜிஸ்டிக்ஸ் (சரக்குகளை சேர வேண்டிய இடத்தில்சரியாக கொண்டு சேர்க்கும்) வசதியை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய தபால் துறையின் இந்த புதிய அவதாரம் தனியார் வர்த்தக இணையதளங்களுக்கு சவால் விடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.