முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
தேர்வர்கள் இந்த விடைகள் தொடர்பாக ஆட்சேபங்களைத் தெரிவிப்பதற்கான படிவமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் இந்த ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடைகள் தொடர்பாக தேர்வர்களின் ஆட்சேபங்களைப் பரிசீலித்தப் பிறகு இறுதி விடையுடன், தேர்வு முடிவுகளும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளன.
பிழைகளைத் தவிர்ப்பதற்காக நிகழாண்டு ஒவ்வொரு விடைத்தாளும் இரண்டு முறை ஸ்கேன் செய்யப்பட உள்ளன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.