பிளஸ் 2 தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மார்ச் மாதம் நடக்க உள்ள பிளஸ் 2 தேர்வு எழுதுவோருக்கு அளிக்கப்பட்ட கடைசி நாளில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத்துறை சேவை மையத்துக்கு 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை நேரில் சென்று தட்கல் திட்டத்தின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
‘எச்’ வகை தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.50 இதர க ட்டணம் யி35 செலுத்த வேண்டும். ‘எச்பி’வகை தேர்வர்கள் ரூ.150, ரூ.37 செலுத்த வேண்டும். இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி திட்ட கட்டணமாக யி1000, பதிவுக் கட்டணம் ரூ.50 ஆகியவற்றை சேவை மையத்தில் பணமாக செலுத்த வேண்டும். இதற்கான ஹால்டிக்கெட்டுகள் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.