Pages

Friday, January 30, 2015

அரசு பணியை எதிர்பார்க்கும் அறிவொளி ஊழியர்கள்:19 ஆண்டுகளாக பணிபுரிந்தவர்கள்

தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்ற செயல்படுத்தப்பட்ட அறிவொளி இயக்கத்தில் 19 ஆண்டுகளாக பணிபுரிந்தவர்கள், அரசு பணியை எதிர்பார்த்துள்ளனர்.

தமிழகத்தில் 1991 ல் அனைத்து மாவட்டங்களிலும் அறிவொளி இயக்கம் பெயரில், 9 முதல் 45 வயது வரை பள்ளி செல்லாதவர்களுக்கு எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தொடர் கல்வி, வளர்கல்வி, மகளிர் எழுத்தறிவு, அனைவருக்கும் கல்வி முன்மாதிரி, தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், சிறைக்கைதிகளுக்கான திட்டம் என பல வகைகளிலும் இத்திட்டம் செயல்பட்டது. இதில் பயனாளிகளுக்கு சமநிலைக்கல்வி, வருவாய் பெருக்கத் திட்டம் போன்றவைகள் செயல்படுத்தப்பட்டன.
இத்திட்டங்கள் மூலம் அனைவரும் படிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அரசு திட்டங்கள் இதன் மூலம் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டன. நமது கிராமம் திட்டம், மகளிர் திட்டங்கள், மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி, குளங்கள் துார் வாருதல் போன்ற பணிகள் நடந்தன.2009ம் ஆண்டு செப்., வுடன் வளர் கல்வி திட்டம் மாநிலத்தில் நிறைவு பெற்றது. மற்ற மாநிலங்களில் இத்திட்டங்களில் பணிபுரிந்தவர்கள் உள்ளாட்சி துறைகளில் நியமனம் செய்யப்பட்டனர். தமிழகத்தில் இத்திட்டத்தில் பணிபுரிந்தவர்கள் விடுவிக்கப்பட்டனர். 2010ல் தி.மு.க., ஆட்சியில் எந்த நடவடிக்கையும் இல்லை. 2011ல் அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதாவிடம் அறிவொளி இயக்க திட்ட பணியாளர்கள் மனு கொடுத்தனர். அ.தி.முக., ஆட்சிக்கு வந்ததும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் பணிபுரிந்தவர்கள் அரசு ஊழியர்களாக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அறிவொளி இயக்க திட்டத்தில் பணிபுரிந்த 600க்கும் மேற்பட்டோரை அரசு துறைகளில் பணியமர்த்த வேண்டும். இதில் தன்னார்வமாக பணிபுரிந்தோருக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.