Pages

Sunday, January 25, 2015

‘மாணவர்களே... மதிப்பெண்களை விட அறிவைத் தேடுங்கள்’

”மாணவர்கள் மதிப்பெண்களை தேடுவதைக் காட்டிலும், அறிவைத் தேடுவதே பயனுள்ளதாக இருக்கும்,” என ’இஸ்ரோ’ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறினார்.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ’இஸ்ரோ’ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், கோவையில் நேற்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். ’இஸ்ரோ’ தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் அரசியல் தலையீடுகள் இருந்ததாக கூறப்பட்டதே? நான் தலைவராக இருக்கும்வரை அந்தகைய செயல்பாடுகள் எதுவும் நடக்கவில்லை. அதற்குபிறகு, தலைவர் தேர்ந்தெடுப்பதில் என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு தெரியாது. ஜி.பி.எஸ்., உதவியுடன், பூமியில் இருக்கக்கூடிய இடங்கள், பொருட்களை மிக அருகில் சென்று பார்ப்பது போல் பார்க்க முடிகிறது. 

இது ஆரோக்கியமான வளர்ச்சியாக இருக்குமா ? இது ஆரோக்கியமான வளர்ச்சிதான். ஜி.பி.எஸ்., சிஸ்டத்தை பொறுத்தவரை, இந்தியா இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. அதிக செயல்திறன் கொண்ட இன்னும் ஒரு செயற்கைக்கோள் ஏவப்பட வுள்ளது. அது ஏவப்பட்டதும், இந்தியா தனக்கே உரிய ஜி.பி.எஸ்., சிஸ்டத்தை பயன்படுத்தும். தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்புகளில் ஆர்வம் குறைந்து வருகிறதே? பொதுவாக மாணவர்களுக்கு எந்த துறையில் அதிக ஆர்வம் உள்ளது என்பதை பெற்றோர் ஆராய வேண்டும். ஆர்வம் உள்ள துறையில் மாணவர்கள் படித்து அந்த துறைக்கே உரிய அறிவை பெற வேண்டும். இன்றைய சூழலில் மாணவர்கள் மதிப்பெண்னை தான் தேடுகிறார்கள். அறிவைத்தேடும் படிப்பு இருக்கும் பட்சத்தில், இந்தியாவின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்களிப்பு மிகப்பெரிய சக்தியாக இருக்கும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.