Pages

Thursday, October 12, 2017

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவை வழங்காமல் ஏமாற்றக் கூடாது

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் உடனடியாக செயல்படுத்தப்படும்  என்று அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் ஊதிய விகிதம் குறித்த குறைகள் களையப்படவில்லை.

பள்ளிக்கல்வி திட்டம்: நாளை ஆலோசனை

பள்ளிக்கல்வி திட்டங்களை அமல்படுத்துவது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, சென்னையில், நாளை ஆலோசனை வழங்கப்படுகிறது. புதிய பாடத்திட்டம், நுழைவுத் தேர்வு பயிற்சி, 'ஸ்மார்ட்' வகுப்பு என, பல்வேறு திட்டங்கள், பள்ளிக்கல்வித் துறையில் அமல்படுத்தப்பட உள்ளன.

நான்கு போட்டி தேர்வுகளுக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், நான்கு போட்டி தேர்வுகளுக்கு, நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியில், 24 காலியிடங்களுக்கு, 2013ல் தேர்வு நடந்தது. இதில், 51 பேருக்கு, வரும், 30ம் தேதி நேர்காணல் நடக்க உள்ளது.

’குரூப் - 1’ முதன்மை தேர்வு; அக்., 13ல் துவக்கம்

துணை கலெக்டர் உட்பட, 85 காலி இடங்களுக்கான, ’குரூப் - 1’ முதன்மை தேர்வு, அக்., 13ல் துவங்குகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள, துணை கலெக்டர், 29; டி.எஸ்.பி., 34; வணிக வரி கமிஷனர், எட்டு; மாவட்ட பதிவாளர், ஒன்று; மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஐந்து மற்றும் மாவட்ட தீயணைப்பு அதிகாரி, எட்டு என, மொத்தம், 85 இடங்களுக்கு, குரூப் - 1 முதல்நிலை எழுத்துத் தேர்வு, பிப்., 19ல் நடந்தது.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு? விரிவான செய்தி தொகுப்பு.

அலுவலர்கள் குழு 2017-ன் பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மத்திய  ஊதியக் குழு  திருத்திய ஊதிய விகிதங்களை செயல்படுத்தும் போதெல்லாம், தமிழ்நாடு அரசும் அதே ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்து வந்துள்ளது. அதேபோல், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும்போது, உடனுக்குடன் மாநில அரசும் உயர்த்திய அகவிலைப்படியை  வழங்கி வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு!

7-வது ஊதியக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு 20% வரை ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை தமிழக தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் துவங்கியது

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவெடுக்க, தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் தலைமையில் துவங்கியது. மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான பரிந்துரைகளை பெறுவதற்காக, 'அலுவலர் குழு' அமைக்கப்பட்டது. இக்குழு, செப்., 27ல், முதல்வர் பழனிசாமியை சந்தித்து, அறிக்கை வழங்கியது. 

ஊதிய குழுவின் அறிக்கை - முக்கிய அம்சங்கள்

ஊதிய குழு அளித்துள்ள அறிக்கையில் கீழ் கண்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருப்பதாகவும் இப்பரிந்துரைகள் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் என தெரிகிறது.

1) 01.01.16 முதல் ஊதிய உயர்வு முன்தேதியிட்டு வழங்கப்படும்

2) நவம்பர் 2017 முதல் புதிய சம்பளம் வழங்கப்படும்.

Tuesday, October 10, 2017

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஓய்வூதியத் திட்டம், அமைச்சரவை ஆலோசனை!

வரும் புதன்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது - 7வதுஊதிய குழு பரிந்துரைகள் தொடர்பாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக்டோபர் 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமானது தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.

அரசு ஊழியர் ஊதிய உயர்வு : அமைச்சரவை நாளை முடிவு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவெடுக்க, தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை நடைபெற உள்ளது.

Monday, October 9, 2017

பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஆலோசனை!!!


7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி தலைமை செயலகத்தில் தலைமை செயலாளருடன்  ஆலோசனை நடத்தி வருகிறார்.

Thursday, September 28, 2017

ஏழாவது ஊதியக்குழு - ஒரு பார்வை

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள், செப்டம்பர் மாதத்துக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்பது எதிர்பார்ப்பு. அப்படி வரும்பட்சத்தில், தமிழக அரசு ஊழியர்கள்,தமது புதிய ஊதிய நிலைகளின்படியான  ஊதியத்தை அக்டோபரிலோ அல்லது அதற்கு  அடுத்த மாதத்திலோ பெறக்கூடும்.   

Wednesday, September 27, 2017

7வது ஊதியக்குழு அறிக்கை முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தியது. இதைப் போல, மாநில அரசும் அமல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

Thursday, September 21, 2017

ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் அடுத்தக்கட்ட ஆசிரியர்ப்பணிக்கு தேர்வு நடத்த தயார்!

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன பணிக்கான தேர்வு நடத்திய இரண்டு மாத்ததில் இறுதி பட்டியல் தயார் . மேலும் ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம் அடுத்த தேர்வுகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு வைத்து இரண்டு மாத்ததில் அவர்களுக்கான நியமனத்துக்கான இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளது . அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள 1663 முதுகலைப்பட்டதாரி ஆசிரியப் பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் கிரேடு-1 க்கான நியமனத்தில் விரைந்து தேர்வு நடத்தி அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக நடத்தியுள்ளது ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம்.

ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யக் கூடாது

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7 வது சம்பள கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்திற்கு எதிராக மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அறிக்கை தாக்கல் செய்த 2 நாட்களுக்குள் முடிவு எடுக்காவிட்டால் 20% இடைக்கால நிவாரணம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.


அறிக்கை தாக்கல் செய்தபின் 2 நாட்கள் தமிழக அரசுக்கு அவகாசம் கொடுங்கள் என்று அரசு ஊழியர், அசிரியர்களுக்கு நீதிபதிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.

NIOS என்றால் என்ன?

**பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS exam passசெய்ய வேண்டும்

**தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் ( National Institute of Open Schooling (NIOS)) முன்பு தேசிய திறந்தநிலை பள்ளி என்றழைக்கப்பட்டது. இது இந்திய அரசின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி வாரியம் ஆகும்.

வங்கிகளுக்கு 4 நாள் தொடர் விடுமுறை

வரும் 29ம் தேதி முதல் தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது. ஆயுத பூஜை, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக அரசு மற்றும் தனி யார் வங்கி ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு நாட் கள் விடுமுறை கிடைத்துள்ளது.

ஆசிரியப் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக ஈர்த்துகொள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

☀குறுப்பிட்ட அளவு ஆசிரியப் பயிற்றுநர்களை ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக அனுப்பிட வேண்டும்.*

☀இதனைச் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்ககம் & தலைமைச் செயலருக்கு முன்னரே நீதிமன்றம் வழிகாட்டியிருந்தது.

தேசிய சைபர் ஒலிம்பியாட்ஸ் பற்றி தமிழக பள்ளிக்கல்விக்கு தெரியுமா?

ஒலிம்பியாட்ஸ்,கல்வித் திறனையும் சந்தேகத்துக்கிடமில்லாத அறிவுக்கூர்மையையும் உணர்த்துகிறது. மாணவர்களிடையே இப்படிப்பட்டத் திறன்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்தியாவில் பின்வரும் ஒலிம்பியாட்கள் உள்ளன.

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸ்!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. உற்பத்தியுடன் இணைந்த விழாக்கால போனஸை வழங்க  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

ஆசிரியர் தகுதித் தேர்வின் வெயிட்டேஜ் முறையில் பணியிழந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படுமா? கல்வி அமைச்சர் விளக்கம்.

செய்தியாளர் கேட்ட கேள்வி: கடந்த பத்து ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வில் (ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகவில்லை என்பதே உண்மை) வெற்றி பெற்று வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பிழந்துள்ள ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்கப்படுமா? வெயிட்டேஜ் முறை ஒழிக்கப்படுமா?

அரசு பள்ளி ஆசிரியர்களின் பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு

தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழை சரிபார்க்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும், பட்டதாரி மற்றும் டிப்ளமா ஆசிரியர்கள், அரசின் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

ஜாக்டோ -ஜியோ போராட்டம்: தலைமைச் செயலர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

ஜாக்டோ -ஜியோ போராட்டம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை (செப்.21) ஆஜராகிறார். அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடுகளை அவர் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: இன்று வழங்குகிறார் முதல்வர்

பள்ளிக் கல்வித் துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை (செப்.21) வழங்குகிறார். 

புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், 3 - 10ம் வகுப்பு வரை, கணினி பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல், பழைய நிலையில் உள்ள பாடத்திட்டத்தை புதுப்பிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

Tuesday, September 19, 2017

ஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் முடிவு!

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள இடங்களுக்கு விரைவில் ஆட்களை வேலைக்கு அமர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு எடுத்து உள்ளது. மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டதும் பியுஷ் கோயலுக்கு ரயில்வே துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் ரயில்வே ஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப முடிவு செய்து உள்ளது . அது பாதுகாப்பு பிரிவின் கீழ் வரும் துறைகளுக்கு ஒரு லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த இந்தியன் ரெயில்வே முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No Pay Commission In Future - Finance Minister Arun Jaitley

The central government is mulling not to form any Pay Commission for increasing salaries and allowances of central government employees and and pensioners in future. The report of inflation would be submitted to the Finance Minister Arun Jaitley once every three years.  No new commission may be formed in future for increasing salaries of central government employees, a senior Finance Ministry official told The Sen Times on condition of anonymity.

புதிய வரைவு பாட திட்டம் நவம்பரில் வெளியீடு

'பள்ளிகளுக்கு, புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு, நவம்பரில் வெளியிடப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த, ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக, கல்வியாளர்கள் அடங்கிய பாடத்திட்ட குழுவும், பள்ளி கல்வி அமைச்சர் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் இடம்பெற்றுள்ள, பள்ளி கல்வி துறை செயலர், உதயசந்திரன் உள்ளிட்ட எவரையும் நீக்கக் கூடாது' என, கூறப்பட்டிருந்தது.

தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: அரசின் பங்கான 18,000 கோடி உடனடியாக தரப்படும்

அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கு தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.  அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற  நீதிபதி கிருபாகரன்,” புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் அரசு தன்னுடைய பங்களிப்பு தொகை செலுத்துகிறதா? செலுத்தவில்லை என்றால் ஏன் செலுத்துவதில்லை? எப்போது செலுத்தப்படும்?

பள்ளிகளில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு கட்டாயம்

தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில்,'துாய்மை இந்தியா' திட்டம் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தம்

'ஜாக்டோ - ஜியோ' போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவினர், செப்., 7 முதல், ஏழு நாட்கள், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கல்வி செயலாளர் உதயசந்திரன் நீக்கப்படவில்லை; தமிழக அரசு பதில்

'பள்ளிகளுக்கு, புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு, நவம்பரில் வெளியிடப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் நீக்கப்படவில்லை என்றும் வரும் நவம்பரில் தமிழகப் பள்ளிகளுக்கு புதிய வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும். தமிழகத்தில் பள்ளிகளுக்கு புதிய  பாட திட்டம் தயாரிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தலைமையில் உயர் மட்ட குழுவும், கல்வியாளர்கள் அடங்கிய பாடத் திட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 

முதுநிலை ஆசிரியர் நியமனம் இன்று ஆன்லைன் கவுன்சலிங்

அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 11ம் தேதி தேர்தல் முடிவு வெளியானது. அதில் 2538 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 29ம் தேதி சான்று சரிபார்ப்பு நடந்தது. தற்போது பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான கவுன்சலிங் இன்று காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடக்கிறது.

தமிழக மருத்துவ கல்லூரிகளில் 69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

தமிழக மருத்துவ கல்லூரிகளில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக நாகர்கோவிலைச் சேர்ந்த திருமால் மகள் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசின் 69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்து 50% இட ஒதுக்கீட்டை பின்பற்றி அதன் அடிப்படையில் மேலும் சில இடங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வங்கியில் மினிமம் பேலன்ஸ்’: வாடிக்கையாளர்களை மகிழ்விக்குமா எஸ்.பி.ஐ?

எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கு வைத்திருப்போர், தங்களது கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்’ என்ற நடைமுறையைத் தளர்த்துவதுகுறித்து தற்போது ஆலோசித்துவருகிறது. 'ஏப்ரல் 1-ம் தேதி முதல் எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காவிடில், அபராதம் விதிக்கப்படும்' என்று அந்த வங்கி அறிவித்தது. அதன்படி, பெருநகரங்களில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் 5,000 ரூபாயும், நகரப் பகுதிகளில் இருப்போர் 3,000 ரூபாயும், பகுதி நகரப் பகுதிகளில் 2,000 ரூபாயும், கிராமப்புறத்தில் 1,000 ரூபாயும் வைத்திருக்க வேண்டும் என்று எஸ்.பி.ஐ கூறியிருந்தது.

'நெட்' பிழைகளை திருத்த வாய்ப்பு

அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பல்கலைமானியக்குழு சார்பில், சி.பி.எஸ்.இ., இந்த தேர்வை நடத்துகிறது.

வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்காவிடில், ஜனவரி முதல் பணபரிவர்த்தனைகள் நிறுத்தம்

வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்காதவர்களின் பரிவர்த்தனைகள் ஜனவரி முதல் நிறுத்தப்பட உள்ளது. 12 வங்கிகளில் ஆதார் போட்டோ எடுக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்களது வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. டிச., 31ம்தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் தில்லுமுல்லு : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

தமிழக மாணவர்கள், தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற, பல்வேறு மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, பிளஸ் 2வை போல, பிளஸ் 1க்கும், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 38 ஆண்டுகளுக்கு பின், விதிகள் மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 200 மதிப்பெண்ணுக்குப் பதில், 100 மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவற்றில், மொழி பாடங்களில், 90௦; செய்முறை தேர்வுள்ள பாடங்களில், செய்முறைக்கு, 20 மதிப்பெண் போக, 70 மதிப்பெண்களுக்கும் எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது.

அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் வீடுகளில், ’டியூஷன்’ எடுக்க தடை

அரசு சம்பளம் பெறும் பள்ளி ஆசிரியர்கள், ’டியூஷன்’ எடுக்க, தடைவிதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு சம்பளம் மற்றும் சலுகையை பெற்ற போதிலும், தங்கள் வீடுகளில், ’டியூஷன்’ என்ற, தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். இதற்காக, மாணவர்களிடம் மாத கட்டணம் வசூலிக்கின்றனர்.

வங்கிகளில் அதிக, 'டிபாசிட்': அரசு ஊழியர்களிடம் விசாரணை

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், வங்கிகளில் அதிக அளவில், 'டிபாசிட்' செய்த அரசு ஊழியர்கள் குறித்து, சி.வி.சி., எனப்படும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரிக்க உள்ளது.

அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியில், 865 இடங்கள், தகுதியான பட்டதாரிகள் கிடைக்காமல், காலி

அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியில், 865 இடங்கள், தகுதியான பட்டதாரிகள் கிடைக்காமல், காலியாக விடப்பட்டுள்ளன. இது, கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பாடம் எடுக்க, முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கபடுகின்றனர். அரசு பள்ளிகளில், இந்த பதவிக்கு காலியாக உள்ள, 3,375 இடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம்சார்பில், ஜூலை, 2ல் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர்; முடிவுகள், ஆக., 11ல் வெளியிட பட்டன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆக., 28, 29ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம்

கடந்த ஆண்டில் 12 ம் வகுப்பு முடித்த அனைவருக்கும் ஓர் அரிய வாய்ப்பு

*கல்வியாளர்கள் சங்கமம்*
ஒருங்கிணைப்பில்
*Dr.ராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை*
*Seekers கல்வி மையம்* 
இணைந்து நடத்தும்
*இலவச நீட் தேர்வுப்பயிற்சி முகாம்*

மத்திய அரசின் தேர்வை சந்திக்கும் வகையில் தமிழக மாணவர்கள் தயார் செய்யப்படுவார்கள்: அமைச்சர் செங்கொட்டையன்

மாணவர்களுக்கு மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வாக இருந்தாலும் அதை சந்திக்கும் வகையில் தமிழக மாணவர்கள் தயார் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இது தொடர்பாக இன்று அவர் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மாணவர்களுக்கு கல்வி வினாக்கள் அடங்கிய சி.டி. இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பல்துறை பேராசிரியர்களைக் கொண்டு 412 மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

Saturday, September 16, 2017

ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு முடிவு

*19.09.2017. மாவட்டம்தோறும் விளக்கக்கூட்டம்.

*21.09.2017  மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் போராட்ட கோரிக்கை சார்ந்த கூடுதல் விபரங்களை சமர்பிப்பது.

கோட்டை ஊழியர்கள் 2 மணி நேரம், 'ஸ்டிரைக்'

'ஜாக்டோ - ஜியோ' அமைப்புக்கு ஆதரவாக, தலைமை செயலக ஊழியர்கள், நேற்று காலை திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு பின், போராட்டத்தை கைவிட்டனர். சென்னையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, தலைமை செயலக ஊழியர்கள், கோட்டை வளாகத்தில் உள்ள, நாமக்கல் மாளிகை முன் அமர்ந்து, தர்ணா போராட்டத்தை துவக்கினர். போலீசார், அவர்களை கலைந்து செல்லும்படி கூற, இரு தரப்பினருக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

'ஸ்டிரைக்' வாபஸ்: பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்

ஒன்பது நாட்கள் நடந்த தொடர் போராட்டம் முடிந்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நேற்று உடனடியாக பணியில் சேர்ந்தனர். அதனால், மீண்டும் பள்ளிகளில் வகுப்புகள் துவங்கின. பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு சார்பில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செப்., 7 முதல், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதனால், வகுப்புகள் முடங்கின; காலாண்டு தேர்வு பாதிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் நேற்று ஏற்பட்ட சுமூக நிலையை தொடர்ந்து, ஜாக்டோ - ஜியோ போராட்டம், வாபஸ் பெறப்பட்டது.

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு:  ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தேசிய அளவிலான திறனாய்வு தேர்வு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு நவம்பர் 4ம் தேதி நடக்கிறது. 

தூய்மையான கல்லூரிகள் தமிழகம் புதிய சாதனை

தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட, துாய்மையான உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில், முதல், 25 இடங்களில், 12 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த கல்லுாரிகள் பெற்றுள்ளன.

கணக்குக்கு தவறான விடை கூறி ஆசிரியையை எச்சரித்த கல்வி அமைச்சர்

கணக்கு கேட்டு, விடையை சரியாக கூறிய ஆசிரியையிடம், விடை தவறு என கூறி, அமைச்சர் எச்சரித்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் ஆய்வு:

உத்தரகண்டில், திரிவேந்திர சிங் ராவத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநில கல்வி அமைச்சராக இருப்பவர், அரவிந்த் பாண்டே. தலைநகர் டேராடூனில் உள்ள பெண்கள் பள்ளிக்கு, அமைச்சர் பாண்டே சென்று, கல்வியின் தரம் பற்றி ஆய்வு செய்தார். அப்போது, ஒரு வகுப்பில், மாணவிகளுக்கு ஆசிரியை ஒருவர், அறிவியல் பாடம் நடத்தி கொண்டிருந்தார். 

நீதிமன்ற எச்சரிக்கை எதிரொலி: அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம் வாபஸ்

ஐகோர்ட் மதுரை கிளை எச்சரிக்கையை தொடர்ந்து, அரசு ஊழியர்கள் 9 நாள் நடத்திய காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக நேற்று வாபஸ் பெற்றனர். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 9வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது. இதனிடையே மதுரையை சேர்ந்த வக்கீல் சேகரன், போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 4 சங்கங்களின் நிர்வாகிகள் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.

ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு இன்று கூடுகிறது

ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவை ஏற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 21-ந்தேதி வரை போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தனர். சென்னை எழிலகம் வளாகத்தில் 5-வது நாளாக நேற்று போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் தெரிவித்தபடி போராட்டத்தை ஒத்திவைத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆசிரியர் தகுதி படிப்புக்கு பதிவு வரும் 30 வரை அவகாசம் நீடிப்பு

இணையதளம் முடங்கியதால், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான, தகுதி படிப்புக்கான பதிவுக்கு, வரும், 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம்வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், அதற்கான ஆசிரியர் தகுதி தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, 2009 முதல், 2014 வரையும், அடுத்து, 2014 முதல், 2019 வரையும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், கட்டாய கல்வி உரிமை சட்டம்அமலான பின், பணியில் சேர்ந்து இருந்தால், ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

Friday, September 15, 2017

கோரிக்கைகள் மீதான மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவாதத்தை ஏற்று வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று நடைபெற்ற JACTTO-GEO போராட்டத் தடை குறித்த வழக்கில்,

நீதி மன்றத் தீர்ப்பை மீறி செயல்படும் நிலையில் எதிர்த்தரப்பின் விவாதத்தைத் துளியும் ஏற்க மறுக்கும் நீதி மன்ற மரபினைத் தாண்டி,


45 நிமிடங்கள் JACTTO-GEO தனது தரப்பு விளக்கத்தை அளித்தது.

என்ன தான் செய்கிறார்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்? உண்மையில் என்ன தான் செய்கிறார்கள் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்?

பொதுவான பார்வையில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்றால் அதிக சம்பளம் வாங்குபவர்கள், வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குபவர்கள், இன்னும் சிலவும்...

உண்மை நிலை என்பதும் இது தானா?


வாருங்கள், ஒரு ஆய்வு செய்து பார்ப்போம்...

Thursday, September 14, 2017

அரசு ஊழியர் போராட்டமும் உயர்நீதிமன்ற தலையீடும்! - எஸ்.நூர்முகம்மது


ஓய்வூதியம் என்பது மிக முக்கிய மான ஒரு கோரிக்கை. 30, 35 ஆண்டுகள் உழைத்த ஒருவர் வயதான காலத்தில் தனது குடும்பச் செலவையும், தனது மருத்துவத் தேவை உட்பட அனைத் தையும் நிறைவேற்ற இருக்கிற ஒரே வாய்ப்பு ஓய்வூதியம் தான்.

Sunday, September 10, 2017

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் அறவழியிலான போராட்டங்களுக்கு திமுக துணை நிற்கும்: மு.க. ஸ்டாலின்

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் அறவழியிலான போராட்டங்களுக்கு திமுக துணை நிற்கும் என்று திமுக செயல் தலைவரும், எதிரிகட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Saturday, September 9, 2017

ஜாக்டோ - ஜியோ செப்டம்பர் 11 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போரட்டம் அறிவிப்பு

நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். சென்னை நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஸ்ட்ரைக் செய்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டிரைக் ; அரசு இயந்திரம் முடங்கியது...

தமிழகம் முழுவதும் 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனார் அரசு பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளன.

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு இடைக்காலத் தடை : நீதிமன்றம் உத்தரவு


ஜாக்டோ - ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் போராட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

Wednesday, September 6, 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செய்தி: பொதுச்செயலாளர் திரு.செல்வராஜூ அறிவிப்பு

திட்டமிட்டப்படி நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நாளை முதல் காலவரையறை வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நாளை முதல் வேலை வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். செப்டம்பர் 7-ம் தேதி தாலுகா அலுவலங்களில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், செப்டம்பர் 8-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும், மேலும் செப்டம்பர் 9-ம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது என ஜியோ அமைப்பின் மாநிலத் தலைவர் சுப்பிரமணி ஈரோட்டில் பேட்டியளித்துள்ளார்.

திட்டமிட்டப்படி நாளை வேலைநிறுத்தம்; ஜாக்டோ ஜியோ

நாளை முதல் திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் செய்யப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.மாயவன் தெரிவித்துள்ளார்.

ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் கூச்சல் குழப்பம்

பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.இதனையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஈரோட்டில், அந்த அமைப்பின் பிரதிநிதிகளுடன் முதல்வர் பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது, நவம்பர் மாதம் வரை அரசு ஊழியர்கள் காத்திருக்க வேண்டும் என முதல்வர் கேட்டு கொண்டதாக தெரிகிறது.

ஜாக்டோ - ஜியோ : பேச்சுவார்த்தை தோல்வி

**அடுத்த கட்ட முடிவுகள் குறித்து சற்று நேரத்தில் ஜாக்டோ ஜியோ அறிவிக்க உள்ளது.

**கூட்டத்தில் நடந்த  நிகழ்வு கூட்டமைப்பு  கூடி விவாதிக்கிறது.

**முதல்வருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

Tuesday, September 5, 2017

ஜாக்டோ - ஜியோ தமிழக முதல்வருடன் நாளை பேச்சுவார்த்தை

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.பழனிசாமி  அவர்கள் நாளை காலை தலைமை செயலகத்தில் ஜாக்டோ ஜியோடவுடன்  கோரிக்கைகள் தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறார் - அதன் பிறகு வேலைநிறுத்தம் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

Monday, September 4, 2017

ஜாக்டோ-ஜியோ அமைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும்: முதலவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு தற்போது அறிவித்துள்ள காலவரையற்ற போராட்டத்தை கைவிட்டு, மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டுமென முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கை வருமாறு:

ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் வரும் 7-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பொதுமக்களின் நலன் கருதி, என்னுடைய ஆணைக்கிணங்க, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழு, இச்சங்கங்களின் பிரதிநிதிகளோடு பேச்சு வார்த்தை நடத்தியது.

ஜாக்டோ - ஜியோ பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்:

முதல்வருடன் ஆலோசித்து 7ம் தேதிக்குள் சாதகமான முடிவு அறிவிக்கப்படும் என அரசு தரப்பு அறிவித்துள்ளது. அதுகுறித்து விவாதிக்கவும் ஆலோசிக்கவும் இன்று மாலை 5 மணிக்கு 5 மணிக்கு அரசு ஊழியர் சங்கத்தில் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூடுகிறது. இன்றைய பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்:

கரூர் மருத்துவ கல்லூரி பணிகள் துவங்க தயார்

'கரூர், சணப்பிரட்டி அருகே, மருத்துவ கல்லுாரி அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும்,&'&' என, டீன் ரேவதி கூறினார். கரூர் மாவட்டத்தில், அரசு மருத்துவ கல்லுாரியை, குப்புச்சிபாளையத்தில் அமைக்க வேண்டும் என, ஒரு தரப்பும், சணப்பிரட்டியில் அமைக்க வேண்டும் என, மற்றொரு தரப்பும் போராட்டங்கள் நடத்தி வந்தன. இது தொடர்பான வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை, &'சணப்பிரட்டியில் கல்லுாரியை அமைக்கலாம்&' என, உத்தரவிட்டது.

ஜாக்டோ - ஜியோவுடன் அரசு தரப்பு இன்று பேச்சு

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினருடன், அரசு இன்று பேச்சு நடத்துகிறது. 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களையும் வரை, 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். 'சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தமிழக ஆசிரியர்கள் 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு

தமிழக ஆசிரியர்கள், 22 பேருக்கு, தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தினத்தை ஒட்டி, ஒவ்வொரு ஆண்டும், தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, 374 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், 22 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இவர்களுக்கு, செப்., 5ல் டில்லியில், ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசிய நல்லாசிரியர் விருதை வழங்க உள்ளார். 

ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம்; காலாண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல்

ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால், திட்டமிட்டபடி காலாண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில், பழைய &'பென்ஷன்&' திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 

வேளாண் படிப்பில் 703 இடங்கள் காலி

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வின் தொடர்ச்சியான நேற்று, 228 பேர் விரும்பிய இடம் தேர்வு செய்தனர்; மீதமுள்ள, 703 இடத்துக்கு, 1,500 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலையின்கீழ், 14 உறுப்பு மற்றும் 19 இணைப்பு கல்லுாரி உள்ளன. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, இளநிலை தொழில்நுட்பம் உட்பட, 13 பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

பள்ளிகளில் ஹைடெக் மாற்றம் ரூ.300 கோடியில் அதிரடி திட்டம்

கேரள மாநில அரசின், கல்வித்துறை சார்பில், செயல்படுத்தப்படும், கேரள மாநில கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திட்டத்துக்கு, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், லேப் - டாப், மல்டிமீடியா புரொஜக்டர்களை வாங்க, இணையவழி, 'டெண்டர்' எனப்படும், ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி சான்றிதழ்: போலீஸ் விசாரணை தீவிரம்!

வெளி மாநில மாணவர்கள், போலி இருப்பிட சான்றிதழ்கள் சமர்ப்பித்து, எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றனரா என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தர வரிசை பட்டியல் படி,மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைதீவிரப்படுத்தி உள்ளனர்.

’நீட்’விண்ணப்பத்தை தவறாக பூர்த்தி செய்த விவகாரம்; உயர்நீதிமன்றம் உத்தரவு

’நீட்’ தேர்வு விண்ணப்பத்தில் அறியாமையால் செய்த தவறை சரிசெய்து, மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் அனுமதிக்க தாக்கலான வழக்கில், மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு இயக்குனர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை வள்ளுவர் காலனி சுபிக் ஷா தாக்கல் செய்த மனு:

நவோதயா பள்ளி விவகாரம்; தமிழக அரசின் நிலை என்ன?

நவோதயா வித்யாலயா பள்ளிகள் துவக்குவது தொடர்பான வழக்கில், தமிழக அரசின் நிலையை தெளிவுபடுத்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குமரி மகாசபா செயலர் ஜெயகுமார் தாமஸ் தாக்கல் செய்த பொதுநல மனு: கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை மத்திய அரசு நடத்துகிறது. தமிழகத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மட்டுமே உள்ளன. 

மருத்துவ மாணவர்கள் தவிப்பு

”நீட் தேர்ச்சி அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., இடம் கிடைத்தும் மருத்துவ கல்லுாரிகளில் சேர முடியாமல் சி.பி.எஸ்.இ., மாணவர்கள் தவிக்கின்றனர். தமிழக அரசின் மெத்தனத்தால் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு தள்ளி போனது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கல்லுாரி மற்றும்பல்கலைகளில் படித்து வருகின்றனர். உச்சநீதிமன்றம் ”நீட் தேர்வு தேர்ச்சி அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்” என உத்தரவிட்டதை தொடர்ந்து, அவசரமாக கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. 

செயல்படாத பள்ளிகள்; ’நிடி ஆயோக்’ அதிரடி

உரிய முறையில் இயங்காத அரசு பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்க, ’நிடி ஆயோக்’ பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசுக்கு, திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை அளித்து வரும் அமைப்பான, ’நிடி ஆயோக்’ மூன்றாண்டு செயல் திட்ட அறிக்கையை, சமீபத்தில் வெளியிட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: 

போலி சான்றிதழ்: போலீஸ் விசாரணை தீவிரம்!

வெளி மாநில மாணவர்கள், போலி இருப்பிட சான்றிதழ்கள் சமர்ப்பித்து, எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றனரா என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தர வரிசை பட்டியல் படி,மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைதீவிரப்படுத்தி உள்ளனர்.

பி.இ., பி.டெக்., மாணவர்களுக்கு செப். 1ல் வகுப்புகள் துவக்கம்

தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, செப்., ௧ல் வகுப்புகள் துவங்கப்படுகின்றன. அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்பட்டது. 

அரசு பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம்; நிதி ஆயோக்!

முறையாக செயல்படாத அரசு பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என மத்திய அரசுக்கு நிதி ஆயோக் இன்று பரிந்துரை செய்துள்ளது. அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசுக்கு நிதி ஆயோக் இந்த பரிந்துரையை செய்திருக்கிறது மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டும் அரசுடன் இணைந்து தனியார் பள்ளிகளை நடத்தலாம் என்று பரிந்துரையில் தெரிவித்துள்ளது.

குரூப் - 4' பதவி: செப்.,4ல் கவுன்சிலிங்

'குரூப் - 4 தேர்வில், தட்டச்சர் பதவிக்கு, செப்., 4 முதல், கவுன்சிலிங் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு துறைகளில், குரூப் - 4-ல் அடங்கிய, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, 2016 நவ., 6ல், எழுத்துத் தேர்வு நடந்தது. இதன் முடிவு, பிப்., 21ல் வெளியானது. இதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, செப்., 4 - 6 வரை, கவுன்சிலிங் நடத்தப்படும்.

மருத்துவ கவுன்சிலிங் செப்., 7 வரை நீட்டிப்பு!

தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள பல்கலைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவு தேர்வின் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை நடத்தும் அவகாசத்தை செப்., 7 வரை நீட்டித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்காக, நீட் நுழைவுத் தேர்வுநடத்தப்பட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இதில், தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள பல்கலைகளில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், ஆக., 31 வரை வழங்கப்பட்டிருந்தது.

துணை தேர்வருக்கு இன்று சான்றிதழ்!

பிளஸ் ௨ துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, இன்று, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிளஸ் ௨ சிறப்பு துணைத் தேர்வு, ஜூனில் நடத்தப்பட்டது.

டிஜிட்டல்' பண பரிவர்த்தனைக்கு மாறுங்க! : கல்லூரி, பல்கலைகளுக்கு மத்திய அரசு உத்தரவு

அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், கல்வி கட்டணம் உட்பட, அனைத்து பணப் பரிவர்த்தனைகளிலும், 'டிஜிட்டல்' முறையை பின்பற்ற வேண்டும்' என, மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய மனிதவள அமைச்சக கட்டுப்பாட்டில் செயல்படும், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., சார்பில், அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

எளிமையாகிறது ’எமிஸ்’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்

கல்வித் துறையில் தனிப்பட்ட பள்ளி மாணவர்கள் குறித்த முழு தகவல்களை தொகுக்கும் ’எமிஸ்’ (கல்வி தகவல் மேலாண்மை முறை) பணிகளை முழுமையாக முடிக்கும் வகையில் புதிய மென்பொருள் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் அனைத்து மாவட்ட ’எமிஸ்’ ஒருங்கிணைப்பாளர்களுக்கான சிறப்பு கூட்டம் இன்று (ஆக.,29) நடக்கிறது.

மாணவர்களுக்கு ’நீட்’ தேர்வு பயிற்சி துவக்கம்

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் ’நீட்’ தேர்வுக்கான பயிற்சியை மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் துவக்கி வைத்தார். ஈ.வெ.ரா., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சியை துவக்கி வைத்தும், பயிற்சிக்கான கையேட்டினை வழங்கியும் அவர் பேசியதாவது:

பள்ளிகளில் தமிழ், ஆங்கில நாளிதழ்; அனுமதி அளித்தது மத்திய அரசு

பள்ளிகளில் தமிழ், ஆங்கில நாளிதழ், தலா ஒன்று வாங்க மத்திய அரசு அனுமதித்து, நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டுத்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி மானியம், பராமரிப்பு மானியங்களை ஒதுக்கீடு செய்து நிதி வழங்குகிறது. 

மாணவர் கற்றல் விளைவுகளை அறிய ஆசிரியருக்கு பயிற்சி

மாணவர்களின் கற்றல் விளைவுகளை, ஆசிரியர்கள் அறிந்து கொள்ள, மாநில அளவிலான பயிற்சி முகாம், ஈரோட்டில் நேற்று துவங்கியது. ஈரோடு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாநில அளவில் கற்றல் விளைவுகள் தொடர்பாக உயர் தொடக்க நிலை ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம், ஈரோடு, அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. 

ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி

மதுரையில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் சார்பில் இடைநிலை அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி லேடி டோக் கல்லுாரியில் துவங்கியது.

தொழில்நுட்ப தேர்வில் விதிமீறலா?; அரசு தேர்வு துறை விளக்கம்

’தொழில்நுட்ப தேர்வில், எந்த விதிமீறலும் நடக்கவில்லை’ என, அரசு தேர்வுத் துறை தெரிவித்து உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பு பாட ஆசிரியர்களாக பணியாற்ற, அரசு தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

பி.டி.எஸ்., படிப்பில் 50 சதவீதம் நிரம்பியது

அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில், 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பின. தமிழகத்தில், அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 3,534 இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 592 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. 

வேலை நிறுத்தம் நடக்குமா? அரசு ஊழியர்கள் இன்று முடிவு.

அடுத்த வாரம் துவங்க உள்ள, தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை ரத்து செய்வது குறித்து, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று ஆலோசனை நடத்துகின்றனர். அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின், ௭௩ சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த அமைப்பு, செப்., ௭ முதல், தொடர் வேலைநிறுத்தம் செய்ய முடிவுஎடுத்திருந்தது. ஆனால், தற்போதைய அரசியல் சூழலில், போராட்டம் நடத்தினால், அரசு தரப்பில் யாரும் பேச்சு நடத்த முன்வர மாட்டார்கள் என, தெரிகிறது. அதனால், போராட்டத்தை நடத்தலாமா அல்லது தள்ளிவைக்கலாமா என்ற குழப்பம், சங்க நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளது.

நிதியுதவிப் பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம்.

நிதியுதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களை, தற்காலிகமாக, அரசு பள்ளிகளில் மாற்றுப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்,மாணவர் எண்ணிக்கை சரிவை சந்தித்து வருகிறது.அனைத்து மாணவர்களுக்கும், ஆதார் எண் மற்றும் எமிஸ் எண் வழங்கப்பட்டதால், போலியாகவும் மாணவர் எண்ணிக்கையை கூட்டமுடிவதில்லை.இதனால், அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடும் போது, உபரி ஆசிரியர்கள் பணியிடம், ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதனால்,ஒவ்வொரு ஆண்டும் பணி நிரவல் என்ற பெயரில், வேறுபள்ளிக்கு, உபரி ஆசிரியர்கள் மாற்றம் செய்யப்படுகின்றனர்.

ஐ.எஸ்.ஓ., தரச் சான்று பெற்ற க. பரமத்தி அரசு பள்ளி: சொந்தப் பணத்தில் மாதம் ரூ.20 ஆயிரம் செலவிடும் தலைமை ஆசிரியர்

ஒன்று முதல் ஐந்து வரை ஆங்கில வழி வகுப்புகள்; ஆங்கில உரையாடலுக்கு தனிப் பயிற்சி; இந்தி மொழி வகுப்புகள்; இசைப் பயிற்சி; நடன வகுப்புகள்; ஓவியம், யோகா, கராத்தே கற்றுக் கொடுக்க தனித்தனி ஆசிரியர்கள்; இத்தகைய பன்முகத் திறன்களை மாணவர்களிடம் வளர்க்க மாதந்தோறும் சொந்தப் பணத்தில் ரூ.20 ஆயிரம் செலவு செய்யும் தலைமை ஆசிரியர்.

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு; ஆகஸ்ட் 31 கெடு

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தக் கெடு தேதி இன்னும் ஓரிரு நாளில் முடிவடைய உள்ளது. நம் நாட்டில் வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டைப் பெறலாம்.

ஆசிரியர்களுக்குத் தகவல் தொழில்நுட்ப பயிற்சி!

வகுப்பறையில் தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துவதில் ஆசிரியர்களை முதன்மையானவர்களாக மாற்றுவதற்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 37,000 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளன.

அச்சம் வேண்டாம்: துணிந்து பணியாற்றுங்கள்: கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை

இடமாற்றம் வருமோ என அச்சப்படாமல், துணிந்து, அரசின் உத்தரவுகளை பின்பற்றி பணியாற்றுங்கள்' என, பள்ளிக் கல்வி இயக்குனர்களுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார். பள்ளிக் கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பொறுப்பேற்றதும், செயலராக இருந்த சபிதாவையும், பின், இயக்குனர்களையும் மாற்றினார். 

Monday, August 28, 2017

செப்., 7 முதல், 'ஸ்டிரைக்' அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி, செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, அரசு ஊழியர் சங்கம் கூறியுள்ளது.  அரசு ஊழியர் சங்க மாநில தலைவர், சுப்ரமணியன், மதுரையில் அளித்த பேட்டி:

மறைந்த ஜெயலலிதா அறிவித்தபடி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; புதிய சம்பள விகிதம் வழங்க வேண்டும். அதற்கு முன், இடைக்கால நிவாரணம், 20 சதவீதம் வழங்க
வேண்டும்.இதை வலியுறுத்தி, மூன்று கட்ட போராட்டங்கள் நடத்தியும், அரசு கண்டுகொள்ளவில்லை. ஆட்சியை தக்க வைத்து கொள்வதிலேயே, அரசு கவனம் செலுத்துகிறது.

செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் நடக்கும். மறியல்,காத்திருப்பு, சிறை
நிரப்பும் போராட்டங்கள் நடத்தப்படும். மாநிலத்தில், 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், இந்த போராட்டங்களில் ஈடுபடுவர். எனவே மக்கள் நலன் கருதி ஊழியர், ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளிடம் பேசி, பிரச்னைகளுக்கு, அரசு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தினால் முதன்மை கல்வி அலுவலர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10 பல்கலைகளுக்கு தொலைநிலை கல்வி அனுமதி, 'கட்'

தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள, சென்னை மற்றும் மதுரை காமராஜர் உட்பட, 10 பல்கலைகளுக்கு, தொலைநிலை கல்விக்கானஅனுமதி கிடைக்கவில்லை. அதனால், பல்கலை நிர்வாகத்தினர் குழப்பமடைந்து உள்ளனர். 

பிளஸ்2 துணைத்தேர்வு வரும் 31 வரை அவகாசம்!

’பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ்2 துணைத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்,’ என கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜாக்டோ - ஜியோ போராட்டம் காலாண்டு தேர்வுக்கு பாதிப்பு

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்தால், காலாண்டு தேர்வுகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இணைந்து, வரும் 7ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதற்காக, மாவட்ட வாரியாக செயற்குழு கூட்டங்கள் முழுவீச்சில் நடக்கின்றன. 

தற்காலிக பேராசிரியர் நியமனம் பாரதியார் பல்கலையில் எதிர்ப்பு

பாரதியார் பல்கலையின் வரலாறு மற்றும் சுற்றுலா துறைக்கு, தற்காலிக பேராசிரியர்கள் தேர்வு செய்வதற்கான நேர்காணல், சமீபத்தில் நடந்தது. இவர்களுக்கு, மாதம், 12 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இவர்கள், 2017 - 18ம் கல்வியாண்டு வரை அல்லது நிரந்தர பேராசிரியர்கள் தேர்வு செய்யும் வரை பணிபுரிய உள்ளனர். 

எம்.பி.பி.எஸ்., படிப்பு; அரசு ஒதுக்கீடு, ’ஹவுஸ்புல்’

அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீட்டு இடங்களை தவிர்த்து, அனைத்து எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரம்பின.

திருடவே முடியாது: ஆதார் திட்டவட்டம்

யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம், ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக வந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது. நாடு முழுவதும், 115 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள், அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,வால் திருடப்படுவதாக, சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியானது.இதை, ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது. இதுகுறித்து, ஆதார் ஆணையம் வெளியிட்ட அறிக்கை விபரம்:

நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வருமா? துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விளக்கம்

''மத்திய, மாநில அரசுகள் இடையே கருத்துஒற்றுமை ஏற்பட்டால் மட்டுமே, தேசிய அளவில் ஒரே பாடத்திட்டத்தை உருவாக்க முடியும்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 68, தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலையில் நடந்த, 'புதிய இந்தியாவை உருவாக்குவோம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்றார்.

சவால்களை சமாளிப்பாரா கல்வி செயலர்?

இன்று முதல் நிர்வாக பணிகளை துவக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய செயலருக்கு, அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் ஆதிக்கத்தை சமாளிப்பது உட்பட, பல சவால்கள் காத்திருக்கின்றன. தமிழக பள்ளிக்கல்வி செயலராக, மார்ச், உதயசந்திரன் பொறுப்பேற்றார். 

மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள்!

நிதியாண்டு 2017-18-ல் வருமான வரி விதிமுறைகள் மற்றும் முதலீடு  குறித்த சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனை அறிந்துகொள்வதன் மூலம் மாத சம்பளக்காரர்கள் தங்களுக்கான வருமான வரியை இன்னும் துல்லிய மாகத் திட்டமிட்டுக்கொள்ள முடியும். இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள முக்கியமான வருமான வரி மாற்றங்கள் சிலவற்றைக் கீழே பட்டியலிட்டுள்ளோம்.

Saturday, August 5, 2017

அதிர வைத்த அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்! மிரண்டு போன அரசு!!

தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் சம்பள விவகாரம் தொடர்பாக சென்னை சேப்பாக்கதில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Wednesday, June 14, 2017

மத்திய அரசு ஊழியர்களுக்கு "அலவன்ஸ்" அதிகரிப்பு

அரசு ஊழியர்களுக்கு 7ஆவது பே கமிஷனின் பரிந்துரைப்படி அலவன்ஸ்கள் வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படும் என தெரிகிறது. அசோக் லாவசா தலைமையிலான கமிட்டி தனது அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்பித்துள்ளது. 

Saturday, June 10, 2017

தடுப்பூசி போடாவிட்டால், மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி

முறையாக தடுப்பூசி போடாத மாணவர்கள், பள்ளி களுக்கு செல்ல முடியாத வகையில், கிடுக்கிப்பிடி போட, பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டாலும், தொடர்ந்து போட வேண்டிய தடுப்பூசிகள், ௨௦௦௭ முதல் முறையாக போடப்படாதது, ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அதனால், சமீபத்தில், ரூபெல்லா - தட்டம்மை தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ௧௫ வயது வரை உள்ளவர்களுக்கு, தடுப்பூசி போடப்பட்டது.

வருமான வரி கணக்கு தாக்கல், பான் எண் பெற ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மற்றும் பான் எண் பெற ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் வருமான வரித் தாக்கல் செய்யவும், பான் எண் பெறவும் ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஐந்தாம் வகுப்பு முடித்த 33 மாணவர்கள் அனைவரையும் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்த பள்ளி

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம், தொட்டியம், ஊ.ஒ.தொ.பள்ளிலிருந்து ஐந்தாம் வகுப்பு முடித்த 33 மாணவர்கள் அனைவரையும் தொட்டியம், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கும் விழா, விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.கீதா தலைமை தாங்கினார்,

சித்தா, ஆயுர்வேதம், யுனானி படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம்: மத்திய அரசு

வரும் ஆண்டு முதல் மத்திய அரசின் 'ஆயுஷ்' துறையின் கீழ் வரும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட  படிப்புகளில் சேர்வதற்கும், 'நீட்' தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் பண மழை!

7-வது ஊதியக்குழுவில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் அகவிலைப்படி ஆகியவை திருத்தி அமைக்கப்பட்டுள்ளதால், ஜூலை மாதத்தில் இருந்து  50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள்,மாற்றிஅமைக்கப்பட்ட சலுகைக்கான பணத்தை ஊதியத்தோடு சேர்த்து பெறுவார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

தினமும் முட்டை சாப்பிட்டால் அதிகரிக்கும் குழந்தைகளின் வளர்ச்சி

நாளொன்றுக்கு ஒரு முட்டை சாப்பிடுவது குழந்தைகளின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலுக்குத் தேவையான புரதச்சத்து முட்டையில் அதிகமுண்டு. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லொரா இயனொட்டி இதைப்பற்றிக் கூறுகையில் “உலகம் முழுவதிலும் இருக்கும் வளர்ச்சி குறைபாட்டினை தீர்க்கும் சக்தி முட்டைக்கு உள்ளது, இளம் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் முட்டையில் இருக்கிறது” என்றார்.

Friday, June 9, 2017

அரசு ஊழியர், ஆசிரியர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க உத்தரவு வருகிறதா?- பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்குமாறு உத்தரவு வரவிருக்கிறதா? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சூசகமாக பதிலளித்தார்.

Thursday, June 8, 2017

'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

''நீட் உட்பட, மத்-திய அரசின் நுழைவு தேர்-வு-களுக்கு, தமிழக மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறிஉள்ளார்.

முதுகலை ஆசிரியர்கள் பணி இட ஒதுக்கீடு வழக்கு, பணி நியமன ஆணை வழங்கக்கூடாது

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.நம்புராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது 41 அறிவிப்புகள் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்


தமிழக அரசு பாடத்திட்டத்தில் யோகா மற்றும் சாலை விதிகள் விரைவில் சேர்க்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 41 அதிரடி அறிவிப்புகள் பற்றி வரும் 15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின் போது வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

பிளஸ் 1க்கு 'அட்மிஷன் கவுன்சிலிங்' : பள்ளிக்கல்வியின் அடுத்த அதிரடி


  1. இன்ஜி., - மருத்துவ கல்லுாரிகள் போன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மதிப்பெண் அடிப்படையில், விரும்பிய பாடப்பிரிவில் சேர, பிளஸ் 1 வகுப்புக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங் முறை கொண்டு வரப்படுகிறது.

Wednesday, June 7, 2017

'டெட்' தேர்வு விடைத்தாள் அடுத்த வாரம் திருத்தம்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம் துவங்குகிறது. தமிழகம் முழுவதும், மூன்று ஆண்டுகளுக்கு பின், ஏப்., 29, 30ல், 'டெட்' தேர்வு நடந்தது. இதில், முதல் தாளில், இரண்டு லட்சத்து, 37 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளில், ஐந்து லட்சத்து, மூன்றாயிரம் பேரும் பங்கேற்றனர். கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகை, வினாத் தாள் அடிப்படையில் தேர்வு நடந்தது.

ஆங்கிலவழி கல்விக்கு மாறும் அரசு பள்ளிகள் அதிகரிப்பு : இந்தாண்டு பிளஸ் 1ல் அமல்

ஆங்கிலவழி கல்வி துவங்க ஏராளமான அரசு பள்ளிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தாண்டு பிளஸ் 1 வகுப்புகளில் ஆங்கிலவழி கல்வி செயல்படுத்த அரசு அனுமதித்துள்ளது.

தமிழக பள்ளிகளில் மாணவர்களின் காலை வழிபாட்டு கூட்டம் 10 நிமிடமாக குறைப்பு

தமிழக பள்ளிகளில் மாணவர்கள் காலை வழிபாட்டு கூட்டம் தொடர்பாக அரசு கடந்த 2012ம் ஆண்டு ஆணை வெளியிட்டது. இதன்படி திங்கட்கிழமை பொதுவழிபாட்டு கூட்டம், பிற நாட்களில் வகுப்பறை வழிபாட்டு கூட்டம் கொண்டுவரப்பட்டது. 

நாளை அனைத்து பள்ளிகள் திறப்பு

கோடை வெயில் காரணமாக நீட்டிக்கப்பட்ட விடுமுறை முடிந்து நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகம், சீருடைகள் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 

Monday, June 5, 2017

7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம்


7வது சம்பள கமிஷனின் பரிந்துரையின் படி, மத்திய அரசு ஊழியர்களின் மாத வருமானம் ரூ .7,000 இலிருந்து ரூ. 18,000 ஆக குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் திருத்தப்பட்ட வருமானம் 9,300 முதல் 34,800 ஊதியம் வரை அதிகரித்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாகவும், பத்திரப் பதிவுத் துறையிலும் நல்ல அறிவிப்பு வெளிவர இருக்கிறது எனவும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

பாடத்திட்ட மாற்றத்திற்கான உயர்மட்ட குழு 2 நாட்களில் அமைக்கப்படும்

தமிழக பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக இன்னும் 2 நாட்களில் உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம்

தமிழகத்தில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Saturday, June 3, 2017

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நாடே திரும்பிப்பார்க்கும் அறிவிப்புகளை ஜூன் 6 ம் தேதி வெளியிட போகிறோம்" - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி

பள்ளிக் கல்வித் துறையில் நாடே திரும்பிபார்க்கும் வகையில் 41 அறிவிப்புகளை முதலைமைச்சரிடம் அனுமதி பெற்று வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

** எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவியேற்ற பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கபட்டார்.

ஊதிய குழு பரிந்துரை : கருத்து கேட்பு முடிவு


ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை தொடர்பான, கருத்து கேட்பு கூட்டம், சென்னையில், இன்று நிறைவு பெறுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள், 2016ல் அமல்படுத்தப்பட்டன. அதை, தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பிளஸ் 2 மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு, இன்று முதல், 6ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பிளஸ் 2 தேர்வின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு, நேற்று இணையதளம் மூலம் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது. இதில், மதிப்பெண்கள், கூட்டு எண்ணிக்கையை, மாணவர்கள் ஆய்வு செய்யலாம். 

பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கல்விதரம் மேம்படுத்த 3 கல்வி மாவட்டங்களாக பிரிப்பு பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

கல்வி தரத்தை மேம்படுத்த `வேலூர் மாவட்டம்'' 3 கல்வி மாவட்டங்களாக பிரிப்பதற்கு பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களில் 1628 தொடக்கப்பள்ளிகளும், 509 நடுநிலைப்பள்ளிகளும், 197 உயர்நிலைப்பள்ளிகளும், 208 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.

Friday, June 2, 2017

பிளஸ் 2 தேர்வில் மறுமதிப்பீடு 'நோ'

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 28ல் வெளியாகின. மாணவர்களுக்கு, 'டிஜி லாக்கர்' என்ற, டிஜிட்டல் முறையில், மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. 

பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்து, வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, இதுபோன்ற விபரங்கள் அடங்கிய, மாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால் குழப்பம்

முதுநிலை ஆசிரியர் நியமனத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருப்பது, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2,500க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், 1,663 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், ஜூலை, 7ல், தேர்வு நடத்தப்படுகிறது. 

1,111 ஆசிரியர் பணியிடம் : ஜூன் 8ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு பள்ளிகளில் 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூன், 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 286 பட்டதாரி ஆசிரியர்; 623 பின்னடைவு இடங்கள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், 202 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என, 1,111 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்கள், ஏற்கனவே நடந்த ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம், நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது.

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி., படிக்க தடை

தொலைநிலை கல்வியில் ஆராய்ச்சி படிப்புகள் நடத்தவும், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டம் வழங்கவும், மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், ஆராய்ச்சி படிப்புகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.