Pages

Saturday, September 16, 2017

'ஸ்டிரைக்' வாபஸ்: பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்

ஒன்பது நாட்கள் நடந்த தொடர் போராட்டம் முடிந்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நேற்று உடனடியாக பணியில் சேர்ந்தனர். அதனால், மீண்டும் பள்ளிகளில் வகுப்புகள் துவங்கின. பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு சார்பில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செப்., 7 முதல், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதனால், வகுப்புகள் முடங்கின; காலாண்டு தேர்வு பாதிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் நேற்று ஏற்பட்ட சுமூக நிலையை தொடர்ந்து, ஜாக்டோ - ஜியோ போராட்டம், வாபஸ் பெறப்பட்டது.

இதையடுத்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை, நேற்று மதியமே கைவிட்டு விட்டு, பிற்பகலில் பணிக்கு சென்றனர். அதனால், பள்ளிகளில் மீண்டும் வழக்கம் போல் வகுப்புகள் துவங்கின.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.